Wednesday 26 April 2017

“தேசிய-கலாசார தன்னாட்சி” என்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின்

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 01:-

தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாப்பதற்கு போரடுகின்ற குட்டி முதலாளித்துவத் தேசியவாதத்தை முன்வைப்பவர்கள், தம்மை கம்யூனிஸ்ட் என்றே அழைத்துக் கொள்கின்றனர். உண்மையில் இது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கு எதிரான தேசியவாதமே என்கிறார் லெனின்:-

சர்வதேசியவாதத்தை வார்த்தைகளில் அங்கீகரிப்பதும் ஆனால் செயலில், எல்லா விதமான பிரச்சாரம், கிளர்ச்சி, செய்முறை நடவடிக்கைகளிலும் அதற்குப் பதிலாகக் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அமைதிவாதைப் பின்பற்றுவதும் இரண்டாவது அகிலத்தில் இருந்த கட்சிகளில் மட்டுமன்றி, அதை விட்டு வெளியேறி வந்த கட்சிகளிடமும் இருக்கின்றன, அதிலும் இப்பொழுது கம்யூனிஸ்டு என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற கட்சிகளிலும் கூட அதிகம் இருக்கின்றன.

இந்தத் தீமைக்கு எதிரான, மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டத்தின் அவசரத் தன்மை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒரு தேசத்திலுள்ள சர்வாதிகாரம் என்பதில் இருந்து சர்வதேசச் சர்வாதிகாரமாக மாற்றுகின்ற கடமையின் அதிகரித்து வருகின்ற தேவையோடு இது மென்மேலும் முக்கியத்துவம் அடைகிறது.

குட்டி முதலாளித்துவத் தேசியவாதம், தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிப்பதையே சர்வதேசியவாதம் என்று பிரகடனம் செய்கிறது, அதற்கு மேல், அதில் ஒன்றுமில்லை. இந்த அங்கீகாரம் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே என்ற உண்மை ஒரு புறமிருக்கட்டும, குட்டி முதலாளித்துவத் தேசியவாதம் தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாக்கிறது. …”
(
தேசிய, காலனியப் பிரச்சினைகளைப் பற்றி பூர்வாங்க நகல் ஆய்வுரைகள்)
(
கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்காக)
1920

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 02:-

சமூக-ஜனநாயகவாதிகள் எப்பொழுதும் சர்வதேசியவாதக் கருத்து நிலைக்காக நின்றிருக்கிறார்கள், இப்பொழுதும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். பண்ணையடிமை சொந்தக்ககாரர்களையும் போலீஸ் அரசையும் எதிர்த்து எல்லா தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாக்கும் பொழுது நாம்- “தேசியக் கலாச்சாரத்தைஅல்ல- ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியை மட்டுமே, ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தின் முரணில்லாத ஜனநாயக, சோஷலிச உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிற சர்வதேசியத் கலாச்சாரத்தை ஆதரிக்கிறோம்.

தேசிய-கலாச்சார தன்னாட்சிஎன்ற முழக்கம் தேசங்களின் கலாச்சார ஒற்றுமை என்ற மாயத் தோற்றத்தைக் காட்டித் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது, ஆனால் நடைமுறையில் இன்று ஒவ்வொரு தேசத்திலும் நிலவுடைமையாளர்களின், பூர்ஷ்வாக்களின் அல்லது குட்டி பூர்ஷ்வாக்களின்கலாச்சாரமேமேலாதிக்கம் வகிக்கிறது
(
லாத்வியன் பிராந்தியத்தின் சமூக-ஜனநாயகவாதிகளின் நான்காவது காங்கிரசின் நகல் திட்டம்- 1913)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 03:-

(
சர்வதேசவாதம் பேசிக் கொண்டு ஆனால் ஒவ்வொரு தேசியத்தின் கலாசார தன்னாட்சியைப் பேசிகொண்டிருக்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனையாளருக்கு, கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு தனியான தேசிய இனப்பிரச்சினைகளுக்க பிரிதல் அவசியம் தான என்பதை ஆய்ந்தே முடிவெடுக்கின்றனர் என்பதை லெனின் வலியுறுத்துகிறார்)
லெனின்:-
சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசுப் பிரிதல் அவசியமானதுதான் என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது மிகவும் நிச்சயமாகும்.

இதற்க மாறாக, சமூக-ஜனநாயகம் முதலாவதாகவும் மிகவும் அதிகமாகவும் சோஷலிசத்துக்காகப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்துக்காக, முதலாளித்துவ வளர்ச்சி நிலைமைகள் மற்றும் எல்லா தேசிய இனங்களின் முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஒன்று சேர்ந்து பல்வேறு தேசிய இனங்க்ளின் பாட்டாளி வர்க்கத்தினரை ஒடுக்குவதையும் ஜனநாயகத்தின் பொதுவான கடமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தன்னுடைய சுயேச்சையான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்.”

(
தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26)
 —
தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 04:-

(
முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலம் மென்மேலும் அதிகமாக சர்வதேசத் தன்மைப் பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்தேசியக் கலாச்சாரம்என்ற முழக்கம் தவறானதாகும். ஏற்கெனவே தோன்றிவிட்ட பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கலாச்சாரம் எந்த தனித்த தேசியக் கலாச்சாரத்தை உட்கொள்வதில்லை, அதில் காணப்படும் முரணில்லா ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளையே ஏற்றுக் கொள்கிறது.)

லெனின்:-
சமூக-ஜனநாயகவாதத்தின் நிலையில் இருந்து தேசியக் கலாச்சாரம் என்ற கோஷத்தைநேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ- வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாதது. ஏற்கெனவே முதலாளித்துவத்தின் கீழ் மனித குலத்தின் எல்லா பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை மென்மேலும் அதிமாக சர்வதேசத் தன்மையைப் பெற்றுக் கொண்டு வருவதால் இந்தக் முழக்கம் தவறானதாகும். சோஷலிசம் அதை முற்றிலும் சர்வதேசியமயமாக்கிவிடும்.

எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரால் ஏற்கெனவே முறைப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டு வரும் சர்வதேசக் கலாச்சாரம்தேசியக் கலாச்சாரத்தை” (எந்தத் தேசியக் குழுவினுடையதாக இருந்த போதிலும்) மொத்தமாக உட்கொள்வதில்லை, ஆனால் ஒவ்வொரு தேசியக் கலாச்சாரத்தில் இருந்து அதிலிருக்கின்ற முரணில்லாத ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளைமற்றவற்றை விலக்கிஏற்றுக் கொள்கிறது.”
(
தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 05:-

(
குட்டி முதலாளித்துவதேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழக்கம், முரணில்லாத ஜனநாகவாதப் போக்கைவிட பாட்டாளி வர்க்க்துக்கு தீங்குவிளைவிப்பவை என்பதை லெனின் வலியுறுத்துகிறார்)

லெனின்:-
முரணில்லாத ஜனநாயகவாதம் என்ற முழக்கம் பாட்டாளி வர்க்கத்தினரையும் எல்லா தேசிய இனங்களிலும் உள்ள முற்போக்கு ஜனநாயகவாதிகளையும் (இவர்கள் தனிமைப்பட்டிருப்பதை வற்புறுத்துவதில்லை, கல்வி விவகாரங்கள் உட்பட எல்லாத் துறைகளிலும் தேசிய இனங்களில் உள்ள ஜனநாயகச் சக்திகளை ஒன்றுபடுத்த வேண்டுமென்று கோருகிறார்கள்) தனி மொத்தமாக ஒன்றுபடுத்துகின்றன, ஆனால் கலாச்சார-தேசிய தன்னாட்சி வெவ்வேறு தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தையும் பிரிக்கிறது, தனித்தனியாக உள்ள தேசிய இனங்களின் பிற்போக்கு மற்றும் முதலாளித்துவ வர்க்கச் சக்திகளோடு சேர்க்கிறது.”
(
தேசியஇனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 06:-

(
குறிப்பிட்ட அரசின் கீழ் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் இயக்கங்களும் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும். “தேசிய கலாச்சாரம்என்ற முழக்கமானது, பூர்ஷ்வா தேசியவாதிகளது பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை மறைக்கும்)

லெனின்:-
ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கின்ற எல்லா தேசிய இனங்களின் தொழிலாளர்களையும், அரசியல், தொழிற் சங்க, கூட்டுறவு, கல்வித் துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன. பல்வேறு தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் இப்படி ஒரே நிறுவனங்களில் இணைப்பது மட்டுமே சர்வதேச மூலதனத்துக்கும் பிற்போக்கக்கும் எதிராகப் பாட்டாளி வர்க்கம் வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதை சாத்தியமாக்கும், “தேசிய கலாச்சாரம்என்ற முழக்கத்தின் மூலம் தங்களுடைய பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை வழக்கமாக மறைத்துக் கொள்ளும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், பூர்ஷ்வா தேசியவாதிகளது பிரச்சாரத்தையும் நோக்கங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்.

உலகத் தொழிலாளி வர்க்க இயக்கம் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் படைத்துக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு நாளும் அதை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.”
(
ரு...தொ. கட்சிகயின் மையக் கமிட்டி மற்றும்கட்சி ஊழியர்களின் 1913 கோடை காலக் கூட்டத்தின் தீர்மானங்களில் இருந்து)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 07:-

(
சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்கவது என்ற அர்த்ததில் தேசியக் கலாச்சாரத்துக்கு விளக்கம் தருவது அகநிலைவாதமே. இவர்கள் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டிப் பூர்ஷ்வாக்கள் மத்தியில் என்கிறார் லெனின்)

லெனின்:-
“”
தேசியக் கலாச்சாரம்என்ற முழக்கத்தின் முக்கியத்துவம் அந்த முழக்கத்துக்குஅதன் வாயிலாகச் சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்” “விளக்கம் தருவதாகக்குறித்த சிற்றறிவாளி வாக்களிப்பதனாலோ நல்லெண்ணம் கொண்டிருப்பதனாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை. இந்த முறையில் அதைப் பார்ப்பது குழந்தைத் தனமான அகநிலை வாதம்.

பாட்டாளி வர்க்கத்துக்குப் பணி புரிய வேண்டுமென்று முயலுபவர்கள் எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், புர்ஷ்வாத் தேசியவாதத்தை – “சொந்த”, வேற்று, இரு வகை புர்ஷ்வாத் தேசிவாதத்தையும்- நிலைதளராமல், வழிவழுவாமல் எதிர்த்துப் போராட வேண்டும். தேசியக் கலாச்சாரம் என்கிற முழக்கத்தை ஆதரிப்வர்கள் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டிப் பூர்ஷ்வாக்கள் மத்தியில், மார்க்சிவாதிகள் மத்தியில் அல்ல.”
(
தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 08:-

திண்ணமான ஒர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், தேசிய, மகா ருஷ்யக் கலாச்சாரத்தின் முழக்கத்தை மகா ருஷ்ய மார்க்சியவாதி ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. அவர் ஏற்க முடியாது. அதை ஏற்றுக் கொள்பவர் யாரும் தேசியவாதிகளின் அணியில் போய் சேர வேண்டும். மார்க்சியவாதிகளின்அணியில் அல்ல.

நம்முடைய பணி இன்றைக்கு ஆதிக்கத்திலுள்ள கறுப்பு நூற்றுவர்களைச் சேர்ந்த, பூர்ஷ்வாக்களது மகா ருஷ்ய தேசியக் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடுதல், சர்வதேசிய உணர்வோடும் இதர நாடுகளின் தொழிலாளர்களுடன் நெருக்கமாக இணைந்தும் நின்று, நமது ஜனநாயக, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றில் மூலத்துவக்கமாகக் காணப்பட்டு நிற்கும் முனைகளையும் பேணி வளர்க்க வேண்டும்.”
(
தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 09:-

லெனின்:-
தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கையே அதே நேரத்தில் அது மக்களுடைய மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்க முயல்கின்ற கொள்கையாகும்.
..
..
ஆனால் தொழிலாளி வர்க்கத்துக்கு வேற்றுமை அல்ல- ஒற்றுமையே வேண்டும் அறிவுபெறாத மக்களிடம் அதன் எதிரிகள் ஏற்படுத்துகின்ற காட்டு மிரண்டித்தனமான தப்பெண்ணங்களையும் மூடநம்பிக்கைகைளையும் காட்டிலும் பெரிய எதிரி அதற்கு வேறு இல்லை.”
(
தேசிய சமத்துவம்)

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 10:-

“… “
கலாச்சார-தேசிய சுயாட்சிஎன்று சொல்லப்படுவதை, அதாவது கல்வி பற்றிய விவகாரங்களை அரசிடமிருந்து எடுத்து சம்பந்தப்பட்ட அந்தந்த தேசிய இனங்களுக்கு மாற்றிவிட வேண்டும் என்பதை மார்க்சிவாதிகள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். “தேசியக் கலாச்சாரத்தைப்பற்றிய பிரச்சினைகளில் ஒரு குறிப்பிட்ட அரசுக் கூட்டாட்சியில் உள்ள தேசிய இனங்களுக்கு ஏற்ப தேசியச் சங்கங்ளில் கல்வி விவகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும், அதற்கென்று தனியே டையெட், கல்வி நிதி வரை செலவுத் திட்டம், பள்ளிக்கூட நிர்வாகக் குழுக்கள். கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் பொருளாகும்.

இது தொழிலாளி வர்க்கத்தைக் கெடுத்துப் பிரித்து வைக்கும் நாகரிகமான தேசியவாதத்தின் திட்டமாகும். இந்தத் திட்டதுக்கு எதிராக மார்க்சியவாதிகள் தேசங்கள், மொழிகளின் முழுமையான சமத்துவக் கொள்கையை முன்வைக்கிறார்கள், அவர்கள் அதிகார பூர்வமான ஆட்சி மொழியின் அவசியத்தை மறுக்கின்ற அளவுக்குக் கூடப் போகிறார்கள், அதே சமயத்தில் அவர்கள் தேசங்களுக்கு இடையே சாத்தியமான அளவுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளையும், எல்லா தேசங்களுக்கும் ஒரே மாதிரியான அரசு அமைப்புகளையும், ஒரே மாதிரியான பள்ளிக்கூட நிர்வாகக் குழுக்களையும், ஒரே மாதிரியான கல்விக் கொள்கையையும், ஒவ்வொரு தேசிய பூர்ஷ்வாக்களின் தேசியவாதத்துக்கு- அப்பாவிகளை ஏமாற்றும் நோக்கத்தோடுதேசிய கலாச்சாரம்என்ற முழக்கத்தின் வடிவத்தில் முன்வைக்கப்படும் தேசியவாதத்துக்கு- எதிரான போராட்டத்தில் வெவ்வேறு தேசங்களின் தொழிலார்களின் ஒற்றுமையையும் ஆதரிக்கிறார்கள்.”
(
நாகரிகமான தேசியவாதத்தின் மூலம் தொழிலாளர்களைக் கெடுத்தல்-1914

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 11:-
லெனின்:-
எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல. பிற நிலைமைகள் பொருத்தமாய் இருக்கையில், சந்தேகத்துக்கு இடமின்றி நாம் மத்தியத்துவத்தையே ஆதரிக்கிறோம், நகர்ப்புற நடுத்தர மக்களது குறிக்கோளான கூட்டாட்சி உறவுகளை எதிர்க்கிறோம்.”
மகா ருஷ்யர்களின் தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து

தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 12:-

(
எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல என்று சொல்லும் லெனின், ஒடுக்கும் தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தேசத்திற்கும் கம்யூனிஸ்டுகள் எதை வற்புறுத்த வேண்டும் என்பதை இங்கே வலியுறுத்துகிறார். இதுவே முரணற்ற சர்வதேசியவாதமாகும். இந்த முயற்சிதோல்வி அடையும் நிலையில் ஒடுக்கத்துக்கு ஆளான தேசத்திற்கான பிரிதலுக்கு முழுமையான ஆதரவைத் தரும். அதுவே கம்யுனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையாகும்.)

லெனின்:-
இந்தப் பிரச்சினையைச் சரியாக ஆராயாதவர்கள், ஒடுக்குகின்ற தேசங்களைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள்பிரிந்து போவதற்குரிய சுதந்திரத்தைவற்புறுத்துவதும், ஒடுக்கப்படும் தேசங்களைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதிகள்இணைவதற்குரிய சுதந்திரத்தைவற்புறுத்துவதும்முரண்பாடானதுஎன்று நினைக்கிறார்கள். எனினும் சர்வதேசியவாதத்துக்கும் தேசங்களின் இணைப்புக்கும் வேறு எந்தப் பாதையும் கிடையாது என்பதையும் இன்றைய நிலையில் இந்தக் குறிக்கோளை அடைவதற்கு வேறு எந்தப் பாதையும் கிடையாது என்பதையும் வேறு எந்தப் பாதையும் இருக்க முடியாது என்பதையும் சிறிது சிந்திதாலும் தெரிந்து கொள்ள முடியும்
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தைத் தொகுத்துதைத்தல்
தேசிய-கலாசார தன்னாட்சிஎன்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின் 13:-

நாம் அதிகாரத்துக்கு வரும் பொழுது, பின்லாந்துக்கும் உக்ரேனுக்கும் அர்மீனியாவுக்கும் ஜாரிசத்தாலும (மகாருஷ்ய பூர்ஷ்வாக்களாலும்) ஒடுக்கப்பட்ட வேறு எந்தத் தேசிய இனத்துக்கும் இந்த உரிமையை உடனடியாகவும் நிபந்தனை இல்லாமலும் அங்கீகரிப்போம். மறு பக்கத்தில் நாம் பிரிவினையைச் சிறிதும் ஆதரிக்கவில்லை.

சாத்தியமான அளவுக்குப் பெரிய அரசை, மகா ருஷ்யர்களின் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கின்ற தேசிய இனங்களின் மிக அதிகமான எண்ணிக்கையினரின் இயன்ற அளவுக்கு மிக நெருக்கமான கூட்டணியை நாம் விரும்புகிறோம், ஜனநாயகம், சோஷலிசத்தின் நலன்களுக்காக, வெவ்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களில் சாத்தியமான அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையினரைப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்குள் ஈர்ப்பதற்காக நாம் இதை விரும்புகிறோம். நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரமான ஒற்றுமையை, இணைப்பை விரும்புகிறோமே தவி பிரிவனையை அல்ல.”
(
கட்சியின் வேலைத்திட்டத்தைத் திருத்தல் குறித்து)