tag:blogger.com,1999:blog-4009084461282112818.post4794837452667251105..comments2024-02-27T11:44:46.237-08:00Comments on விஞ்ஞான கம்யூனிசம்: அரசு உதிர்ந்து போதல் பற்றி டாக்டர் அம்பேத்கர்A.K.ESWARANhttp://www.blogger.com/profile/10872191736940448677noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4009084461282112818.post-64419234014815102022016-09-12T08:36:45.197-07:002016-09-12T08:36:45.197-07:00நன்றி தோழர்நன்றி தோழர்A.K.ESWARANhttps://www.blogger.com/profile/10872191736940448677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4009084461282112818.post-56967366992898453092016-09-11T01:54:40.362-07:002016-09-11T01:54:40.362-07:00This comment has been removed by a blog administrator.சி பழனிhttps://www.blogger.com/profile/01640054961040837405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4009084461282112818.post-34105259344479306552016-09-11T01:54:25.031-07:002016-09-11T01:54:25.031-07:00தோழர் மிகவும் பயனுள்ள பதிவுதோழர் மிகவும் பயனுள்ள பதிவுசி பழனிhttps://www.blogger.com/profile/01640054961040837405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4009084461282112818.post-65279607837575394442016-09-09T21:24:46.637-07:002016-09-09T21:24:46.637-07:00//உற்பத்திசக்தியின் வளர்ச்சியைத் தடுக்கிற பழைய உற்...//உற்பத்திசக்தியின் வளர்ச்சியைத் தடுக்கிற பழைய உற்பத்திமுறைக்கும், அந்த வளர்ச்சியை முன்வைக்கிற உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடானது, புதிய உற்பத்திமுறையை நிலைநாட்டும் என்று பொதுவாகக் கூறுவது கூடாது.// இந்த முரணின் வெளிப்பாடு தானே வர்க்கப் போராட்டம். வர்க்கப் போரில் வென்ற பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு முரணைத் தீர்க்கிறது என்பதை தான் இது விளக்குகிறது. இதனைத் தொடர்ந்து வரும்

“வன்முறை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி டாக்டர் அம்பேத்கர்”
http://scientificcommunism.blogspot.in/2016/09/blog-post_9.html
என்ற கட்டுரை வர்க்கப் போரை வலியுறுத்தியிருப்பதாக கருதுகிறேன். இதனையும் படித்து கருத்துரையுங்கள்.
உங்களது மேலான கருத்திற்கு நன்றி
A.K.ESWARANhttps://www.blogger.com/profile/10872191736940448677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4009084461282112818.post-43377910235063706812016-09-09T09:39:44.092-07:002016-09-09T09:39:44.092-07:00வர்க்கங்களானது வரலாற்று விளைபொருள்களே. வரலாற்று வி...வர்க்கங்களானது வரலாற்று விளைபொருள்களே. வரலாற்று விளைபொருளுக்கு ஒரு தோற்றமும் உண்டு. அழிவும் உண்டு. அரசும் ஒரு வரலாற்று விளைபொருளே. அரசின் தோற்றத்திற்கும் முன் நிலவியது குழு நிர்வாக அமைப்பே. குழு நிர்வாக அமைப்பு நிலவிய காலத்தில் வர்க்கங்களோ, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை வன்முறைகொண்டு அடக்கி ஆள வேண்டிய தேவையோ இல்லை. பின்னர் வர்க்கங்கள் தோன்றியபோது, குழு நிர்வாக அமைப்பானது வர்க்கக் குரோதம்கொண்ட வன்முறைப் பிரிவையும் உள்ளடக்கிக்கொண்டு, அரசாக மாறியது. சமூக வளர்ச்சியின் ஒரு உச்சகட்டத்தில், வர்க்கங்கள் மறையும்போது, சமூக நிர்வாகத்தில் இணைக்கப்பட்ட வன்முறை அமைப்புக்குத் தேவையில்லாமல் வரலாற்றில் மறைகிறது. இதுவே அரசு உதிர்ந்து உலர்தல் என்ற கருத்தின் அடிப்படை! சமூகமும் நீடிக்கும், தனது உயர்ந்த ஒரு நிலையில்! சமூக நிர்வாக அமைப்பும் நீடிக்கும். ஆனால் அதில் வன்முறைப் பிரிவு இருக்காது. இங்கு வலியுறுத்த வேண்டிய ஒன்று.... அரசு தோன்றியதும் வர்க்கப் போராட்டங்களினால்தான்! அரசு உலர்ந்து உதிர்கிற ஒரு சூழலை உருவாக்குவதும் வர்க்கப் போராட்டங்களே! வர்க்கங்களை இல்லாமல் ஆக்குவதும் வர்க்கப் போராட்டங்களே! எனவே வர்க்கப் போராட்டம் என்ற ஒரு கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவது மிக அவசியமானது. அவ்வாறு இல்லாமல்... உற்பத்திசக்தியின் வளர்ச்சியைத் தடுக்கிற பழைய உற்பத்திமுறைக்கும், அந்த வளர்ச்சியை முன்வைக்கிற உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடானது, புதிய உற்பத்திமுறையை நிலைநாட்டும் என்று பொதுவாகக் கூறுவது கூடாது. பழைய உற்பத்தி உறவுக்கும் புதிய உற்பத்தி உறவுக்கும் இடையிலான முரண்பாடானது வர்க்கப் போராட்டத்தினால்தான் தீர்க்கப்படுகிறது என்பது வலியுறுத்தப்படவேண்டும். சோவியத் ரஷியாவில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு ... சமூக ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திற்கு... வர்க்கப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கக் கட்சியானது சரியான வழியில் கொண்டுசெல்லாததே ஆகும். கட்சிக்குள்ளும் வர்க்கப் போராட்டம் சரியாக நடைபெறவில்லை. சமூகத்திலும் நடைபெறவில்லை. எனவே அரசு உதிர்ந்து உலர்தல் போன்ற விவாதங்களில் தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியது இனி தேவை.ந.தெய்வ சுந்தரம்https://www.blogger.com/profile/11605780757335696909noreply@blogger.com