Friday 18 December 2015

மார்க்சியம் காலாவதியாகிவிட்டதா? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு….

மார்க்சியம் என்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமலேயே, அதனைப் பற்றி பலர் விமர்சிக்கின்றனர். அப்படிப்பட்ட விமர்சனம் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்ற முடிவுவரை போகின்றது.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட முடிவுகளை மார்க்சியமாகக் புரிந்துவைத்துள்ளவர்களிடம் தான் சிக்கல்கள் ஏற்படுகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைமைகள் மாறும் போது அந்த முடிவுகளும் மாறுதலுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றத்தை காண்பவர்கள் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்ற முடிவுக்கு வருகின்றனர். இது மிகமிக மேலோட்டப் பார்வையாகும்.

குறிப்பிட்ட சூழ்நிலையை எதனைக் கொண்டு மார்க்சியர்கள் முடிவெடுத்தார்களோ அதுவே மார்க்சியம். வடிவத்தையே முடிவாகக் கொள்கின்றனர். அந்த வடிவத்திற்கான உள்ளடக்கத்தை முற்றப் புறக்கணிக்கின்றனர். புதிய சூழ்நிலை ஏற்படும் போது பழைய சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் பொருந்தாமல் போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இந்த முடிவுகள் எடுப்பதற்கு உதவிடும் கண்ணோட்டமே மார்க்சியம்.

சமூகம் பற்றிய கண்ணோட்டம் இரண்டுதான் இருக்கிறது. சமூகத்தை தலைசிறந்த தலைவர்கள் வழிகாட்டுகின்றனர், அவர்கள் அரசராகவோ, ராணுவ அதிபதியாகவோ, பிரதமராகவோ, ஜனநாதிபதியாகவோ, தத்துவவாதியாகவோ இருக்கலாம். இப்போக்கினர் சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்கிற கருத்துமுதல்வாதப் பிரிவை சேர்ந்தவர்.

மற்றொருன்று, வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது. இது பொருள்முதல்வாதப் பிரிவாகும்.

 சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நீர்ணயிக்கிறது என்று தான்  மார்க்சியம் கூறுகிறது. அதே நேரத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்து. இந்தத் தாக்கம் தீர்மானிக்கும் வகையில் இருக்காது, அடித்தளத்தால் தீர்மானிக்கப்பட்டதை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ செய்திடும் வகையில் மேற்கட்டமைப்பின் தாக்கம் இருக்கும். அதாவது அடித்தளமான புறநிலை விதியை அறிந்தவர்கள் மாற்றத்தை விரைவுபடுத்துகின்றனர். புறநிலை விதியை புரிந்து கொள்ளவாதவர்களும் தவறாகப் புரிந்து கொண்டவர்களும் வளர்ச்சியை தாமதப்படுத்துகின்றனர்.

மார்க்சுக்கு முன்புவரை, சிந்தனையே தீர்மானிக்கிறது என்ற கண்ணோட்டமே இருந்தது. சமூகப் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் குறைபாடாக மார்க்சியம் இரண்டைக் குறிப்பிடுகிறது. மனிதர்களின் சித்தாந்தத்தின் நோக்கங்களை மட்டுமே ஆராய்கிறது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான சமூகப் பொருளாதார நிலைமைகளைக் நோக்கவில்லை என்பது முதல் குறை. மக்களின் நடவடிக்கைகளை அது கணக்கில் கொள்ளாதது இரண்டாவது குறையாகும்.

இந்தக் குறைகளை களைந்து சமூகத்தை பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகுவதே மார்க்சியக் கண்ணோட்டமாகும். சமூகம் பற்றிய இந்த மார்க்சியக் கண்ணோட்டம் பழைமைப்பட்டுப் போய்விட்டது, இன்று பொருத்தமானதாக இல்லை என்று கூற முடியுமா? இல்லை என்பதே உண்மை. இந்த உண்மையை மறுப்பவர்கள், இந்தப் புதிய கண்ணோட்டத்திற்கு மாறாக, பழைய கருத்துமுதல்வாத கண்ணோட்டமான சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். எந்தக் கண்ணோட்டத்தை தவறு என்று கூறி புதியக் கண்ணோட்டத்தை மார்க்சியம் வகுத்தோ அதனை நீக்கிவிட்டு, அந்தத் தவறான பழையக் கண்ணோட்டத்தை ஏற்பது புதுமையானது கிடையாது. பழைமை நோக்கிச் செல்வதேயாகும்.

லெனின்:- “மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல, இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துககு இடமில்லாது இறுகிவிட்ட போததனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாக மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்.

ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்தமாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து மூர்த்தண்ணியமாகப் போராட வேண்டியது தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.”
(மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்)

தம்மை மார்க்சியர் என்று அழைத்துக் கொண்டே மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கின்றனர் சிலர். மார்க்சியத்தை முடிந்த முடிபாக, புரிந்து கொண்டவர்கள் தான் இவ்வாறு பேச முடியும். மார்க்சிய அடிப்படையில் இருந்து விலகி நவீன கருத்துமுதல்வாதச் சகதிக்குள்  மூழ்கி முத்தெடுக்க இவர்கள் முனைகின்றனர்.

“மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற சிறுகட்டுரையில் லெனின் மார்க்சியத்தின் அடிப்படைகளைத் தொகுத்தளித்துள்ளார். மார்க்சியத்தின் மூன்று உட்பிரிவான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷசிலம். இதில் எது காலாவதியாகிவிட்டது?

தத்துவத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-

“இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது- மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருததுக்களும் போதைனகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கக்த்தைப் பலப் படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பைத நாம் பார்க்கிறோம்.

மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல்வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்கைள வழங்கியிருக்கிறது.”


அரசியல் பொருள்முதல்வாதம் பற்றி லெனின் கூறுகிறார்:-

“பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்ஸின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய - அதாவது, முதலாளித்துவ - சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.
முதலாளித்துவப் பொருளாதாராவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது.
….
முதலாளித்துவப் பொருளாதாராவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றொன்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது.
….
உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் கொள்கைக்கு மூலைக்கல் ஆகும்.

தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது.
மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது, ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான தொழிலாளர் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது, அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன, சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது, திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது.
பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்து வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.

பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பைத ஆண்டுதோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிருபித்துக் காட்டி வருகிறது.

உலெகங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.”

விஞ்ஞான சோஷலிசத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-

“…மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில்தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும்.

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்கைள என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ஆது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீர வேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.

மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.”

“..செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாக மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்.” (லெனின்) என்பது தான் மார்க்சியர்களின் வழிமுறை. எனவே மாறுதல்களை மார்க்சியம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இந்த கணக்கில் எடுத்துக் கொள்வதில் உள்ள காலதாமதத்தை மார்க்சியம் காலாவதியாகவிட்டதாக என்று புலம்புபவர்களை விட்டுவிட்டு நமது பணியினைத் தொடர்வோம்.




Saturday 28 February 2015

உறவு பாலாவின் திருத்தல்போக்கிற்கு எனது எதிர்வினை



உறவு பாலா தமது முகநூலில் //மேற்கட்டுமானம் எனும் அரசியல் சட்டம் கல்வி பண்பாடு இராணுவ கட்டமைப்பு. நீதி நெறி ஒழுங்கு உள்ளிட்டவை  மூலம் தனக்கு சாதகமான அடித்தளத்தை  உருவாக்க முடியும் என்பதை  மறுப்பவர்கள்  இந்திய தமிழக சமூக வரலாறு தெரியாதவர்களே. மார்க்சின் சீடர்கள் எனச் சொல்லும் 
தகுதியற்றவர்களே.//
என்று எழுதியுள்ளார்.

மேற்கட்டமைப்பு அடித்தளத்தை உருவாக்குகிறது என்றால் இது சமூகம் பற்றிய கருத்துமுதல்வாதப் பார்வையாகும். அதாவது சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதாக உறவு பாலாவின் இந்தக் கூற்று கருத்துமுதல்வாதமாகிறது.

மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது எங்கெல்ஸ் நிகழ்த்திய உரையில் கூறினார்:-
“அங்கக இயற்கையின் (organic nature)வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது, ஆகவே உடனடியான பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளாச்சியடைகின்றன, ஆகவே அதன் ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

இங்கே எங்கெல்ஸ் கூறிய மறுதலையாக விளக்கக் கூடாது என்பதற்கு மாறாக உறவு பாலா மறுதலையாக, பழைமையான  சமூக சிந்தனையான கருத்துமுதல்வாதத்தில் வீழ்ந்துகிடக்கிறார்.

இந்த எங்கெல்சுக்கு மாறான கருத்தை முன்வைத்தே உறவுபாலா கருத்தை மறுக்கும் முகமாக // மேற்கட்டுமானம் தமக்கு சாதகமான அடித்தளத்தை உருவாக்கும் என்பது மார்சியம் கிடையாது தோழர். இந்த திருத்தல்வேலை மார்க்சிய வழிப்பட்ட சிந்தனைக்கு எதிராகத் தான் பயனளிக்கும்// (February 20 at 7:50pm) என்று அவர்பதிவுக்கு எனது பின்னூட்டமாக இட்டேன்
எனது பின்னூட்டத்துக்கு மறுப்பாக உறவு பாலா பின்னூட்டம் இட்டார். //வெறுமனே கருத்தியலான விளக்கத்தை கொண்டு மறுக்க முடியாது, எங்கெல்சு மேரிங்குக்கு எழுதிய கடிதம் உண்மையா பொய்யா?//

இதற்கு எனது பின்னூட்டம் /(February 20 at 9:31pm) //உறவு கா. சே. பாலசுப்ரமணியன்@//எங்கெசின் மேரிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார்.மார்க்சும் நானும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் அடித்தளமே வரலாற்றின் உந்து சக்தியாக இருந்தது அதை வலியுறுத்தினோம்.ஆனால் அது மட்டுமே எக்காலத்துக்குமானது என நாங்கள் சொல்லவில்லை// என்று கூறியுள்ளீர்கள்.

இங்கே காணப்படும், “அது மட்டுமே எக்காலத்துக்குமானது என நாங்கள் சொல்லவில்லை என்ற வார்த்தைகள் எங்கெல்ஸ் எங்கே பயன்டுத்தினார் என்பதை ஆதாரத்தோடு நிருபியுங்கள். நீங்கள் குறிப்பிடும்படியான எந்தத் தவறை மார்க்சிய ஆசான்கள் செய்யவில்லை, அதனால் தான் லெனின் ஸ்டாலின் ஆகியோர் உங்களுக்கு எதிரான மார்க்சியத்தையே!!! பேசுகின்றனர்.

லெனின்:
”வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டமைப்பாகும்."
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

ஸ்டாலின்:-
“பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றமடைந்து, அதற்கு ஏற்றதான மாற்றம் மனித மூளைகளில் பின்னர் நடந்தேறுகிறது. அப்படியானால், குறிப்பிட்ட இலட்சிம் மக்களிடையே தோன்றுவதற்கான அடிப்டையை அவர்களுடைய மனங்களிலோ, அவர்களுடைய கற்பனைகளிலோ தேடக் கூடாது, ஆனால் இதற்கு மாறாக, மனிதர்களின் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிகளில் தான் காண வேண்டும் (அராஜகவாதமா? சோஷலிசமா?)//

இதனைத் தொடர்ந்து எங்களது உரையாடல் இதோ:-

உறவு கா. சே. பாலசுப்ரமணியன்:- மனப்பாடமாக மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களை ஒப்பிப்பதில் வல்லவர் பாஈசுவரன் பாராட்டுக்கள்.இங்கு நாம் கூறுவது இந்தியாவில் காலனியாதிக்கம் தோன்றிய வரலாற்றை விளக்க மேற்கட்டுமானம் மூலமே விள்கக முடியும்.அதை மறுப்பதற்கு நீங்கள் தேவையில்லை.இடதுசாரி அமைப்புகள் செய்துவிட்டனர்.அது சரியல்ல என்கிறோம்.அதை விளக்க மறுப்பது இடதுசாரி அமைப்புகளின் சிந்தனைக்கு மேம்பட்டது அல்ல ,(February 20 at 9:45pm)

Eswaran Ak:- ஏன் ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுகிற மேரிங்க்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதம் கிடைக்காது போனதால், எங்கெல்ஸ் மாற்றிக் கொண்ட கண்ணோட்டத்தை பின்பற்றாமல் லெனினும் ஸ்டாலி்னும் பழைமைப்பட்டுப்போன மார்க்சியத்தை பேசினார்களா?

திருத்தல்வாதிகளைப் போலவே மார்க்சியத்தை சிதைக்கும் உங்களது போக்கை முதலில் கணக்குத் தீர்ப்போம். மற்றதை பிறகு பார்ப்போம். (February 20 at 9:50pm)
…….
……
Eswaran Ak:- உறவு கா. சே. பாலசுப்ரமணியன் @ மேரிங்குக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தை நீங்கள் திருத்துகிறீர்கள் என்பதை நான் நிருபிக்கத் தயார். நீங்கள் திருத்தல்வாதி இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியமா? (February 20 at 10:03pm)

உறவு கா. சே. பாலசுப்ரமணியன்:- உங்களுக்கு தெரிந்தது வார்த்தை விளையாட்டு.இந்த மனப்பாட மார்க்சியம் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களை திருப்திபடுத்தலாம் பாராட்டு பெறலாம். ஆனால் சமூக மாற்றத்திற்கு பயன்படாது.
எதைச் சொன்னாலும் மார்க்சு எங்கெல்சு லெனின் மேற்கோள் இருக்கா எனக் கேட்பது உங்களின்
இயங்கிய பொருள்முதல்வாத அறிவு கவலைக்குறியது. (February 21 at 8:41am )

Eswaran Ak:- உறவு கா. சே. பாலசுப்ரமணியன் @ ஸ்டாலின் பேசியது தவறான சோஷலிசம், லெனின் பேசியதும் தவறான சோஷலிசம் என்று உங்களிடம் தகுதிச்சான்றிதழ் கேட்கவில்லை தோழர். மார்க்ஸ் எங்கெல்ஸ் கூறியதற்கு மாறான சோஷலிசத்தை நம் அவர்கள் முன்வைத்தார்களா? இந்த நேரடியான கேள்விக்கு வாருங்கள்.

நேரடியாக கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. //இங்கே காணப்படும், “அது மட்டுமே எக்காலத்துக்குமானது என நாங்கள் சொல்லவில்லை என்ற வார்த்தைகள் எங்கெல்ஸ் எங்கே பயன்டுத்தினார் என்பதை ஆதாரத்தோடு நிருபியுங்கள். நீங்கள் குறிப்பிடும்படியான எந்தத் தவறை மார்க்சிய ஆசான்கள் செய்யவில்லை,//

பதிலளிக்கவில்லை என்றால், உங்களது திருத்தல்பாதையில் நீங்கள் செல்லுங்கள், அதனை எதிர்க்கும் பாதையில் நான் செல்கிறேன் என்று முடிவெடுத்து எனது பணியினை செவ்வன செய்வேன். நீங்கள் மார்க்சியத்தை திருத்துதல், கம்யூனிச கட்சிகளையும் இயக்கங்களையும் வசைபாடுதல் என்கிற உங்களது பணியினை தொடருங்கள்.

தேவையற்ற காலவிரயத்தை தவிர்ப்பதற்கு, எனது முகநூல் நட்புவட்டத்தில் இருந்து உங்களை நீக்கிவிட்டு எனது பணியைத் தொடர்வேன். (February 21 at 7:29pm)

உறவு கா. சே. பாலசுப்ரமணியன்:- உங்களது வாதம் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டது.இந்த வாதம் பெரும்பாலும் தவறுக்கே ஈட்டுச்செல்கிறது.
ஆசான்களிடம் முரண்பாடு கற்பிப்பது எனது பணியல்ல.
மேற்கோள்களை ஆதாரம் காட்டுங்கள் என்பது வருந்ததக்கதே. சுயச்சிந்தனையோடு வாருங்கள். ஸ்டாலினின் சோசலிச கட்டுமானம் தவறாக இருந்ததில்லையா?அது பற்றி உங்கள் கருத்து என்ன? (February 21 at 4:28pm)

எங்கல்ஸ் மேரிங்குக்கு எழுதிய கடிதத்தை உறவு பாலா திருத்தியதை நான் விமர்சிக்கும் போது அவர். // எதைச் சொன்னாலும் மார்க்சு எங்கெல்சு லெனின் மேற்கோள் இருக்கா எனக் கேட்பது உங்களின் இயங்கிய பொருள்முதல்வாத அறிவு கவலைக்குறியது// என்றும் //மேற்கோள்களை ஆதாரம் காட்டுங்கள் என்பது வருந்ததக்கதே. சுயச்சிந்தனையோடு வாருங்கள்.// என்று கூறிவிட்டு ஸ்டாலினைப் பற்றிய சோசலிச கட்டுமானத்தை விமர்சிக்கத் தொடங்குகிறார் உறவு பாலா. இவர் திருத்து என்ற முடிவோடு இருப்பதை அறிந்த உடன், முன்பு கொடுத்த அறிவுப்பின்படி உறவு பாலாவை எனது முகநூலில் பதிவிட்டு நட்பில் இருந்து நீக்கிவிட்டேன். அந்த பதிவு:-

//உறவு கா. சே. பாலசுப்ரமணியன் @ எங்கெல்ஸ் சொன்னதாகக் நீங்கள் கூறியற்கு ஆதாரம் கேட்டதற்கு அதனை நிரூபிக்க முடியாத உங்களது நிலையினால் விவாதம் முறிந்து போகிறது.

நான் எழுதிய “சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம் என்ற எனது முதல்நூலிலேயே இந்த திருத்தல்போக்கை அம்பலப்படுதியிருக்கிறேன்.

எங்கல்ஸ் மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893)கடிதத்தின் இறுதியாக நிலைநாட்டப்படுவதுவரலாற்று நிகழ்ச்சி மற்ற காரணிகளால், முடிவில் பார்க்குமிடத்து பொருளாதாரக் காரணிகளால் ஏற்படுவதால், அது உடனேயே தீவிரமான காரணியாகிறது, அதன் சூழ்நிலை மற்றும் அதைத்தோற்றுவித்த காரணங்களின் மீது கூட அதனால் எதிர்ச்செயல் புரியமுடியும் என்பதை இந்தக் கனவான்கள் பெரும்பாலும் அநேகமாகதிட்டமிட்ட முறையிலும் மறந்து விடுகிறார்கள்.” -இங்கே எங்கெல்ஸ் பொருளாதாரக் காரணிகள் தீவிரமான காரணிகளாகுவதும் மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரியமுடியும் அதாவது தாக்கம் செலுத்துவதையும் கூறியிருக்கிறார். திருத்தல்வாதிகள் இந்த எதிர்செயலை தீர்மானிக்கும் செயலாக திருத்திவிடுகின்றனர்.

இதற்கு பின்பு எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதத்தில் (லண்டன், ஜனவரி 25, 1894) தெளிவாக தாக்கம் என்று கூறியிருக்கிறார். “மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள் ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள் அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள் எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்

இவைகளை எனது முதல் நூலின் முன்னுரையிலேயே அம்பலப்படுத்திருக்கிறேன்
"சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்" நூலின் முன்னுரை:-


எங்கெல்ஸ் சொல்லாததை சொன்னதாக பொய்யைப் பரப்பி மார்க்சிய அடிப்படையைத் திருத்திக் கொண்டிருக்கும் திருத்தல்வாதிகளின் கூட்டத்தோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் உறவு கா. சே. பாலசுப்ரமணியன் அவர்களை எனது நட்புவட்டத்திலிருந்து இன்று நீக்கிவிடுகிறேன்.//

உறவு பாலாவை முகநூல் நட்புவட்டத்தில் இருந்து நீக்கிய படியால் அவரது பதிவுகளுக்கு இனிமேல் நான் கருத்துரைக்க முடியாது என்பதால் ஒரு தனிப் பதிவை இட்டு அங்கே தொடர்ந்தேன். இந்த தொடர்ச்சி என்பது உறவுபாலாவுக்கானது கிடையாது. எனது நட்புவட்டத்தில் இருப்பவர்களுக்கு உறவுபாலாவைப் பற்றி உரைப்பதற்கேயாகும்.

தனித்த பதிவில் நான் இட்ட பின்னூட்டங்கள்:-

Eswaran Ak:- //உறவு கா. சே. பாலசுப்ரமணியன்:- என்ன ஆதாரம் ?மேற்கட்டுமானம் வரலாற்றில் சுயமாக இயங்கும் தன்மை உண்டு என்பதை மறுப்பது.மனித நடவடிக்கையை குருட்டுத்தனமாக பார்ப்பதே.இதற்கு எங்கெசை சாட்சியமளிக்க அழைப்பது தவறே,,,, //

சமூகப் பார்வையில் கருத்துமுதல்வாதப் பார்வையில் சிக்கியிருக்கும் அவரால் இதுபோன்று தான் மார்க்சியத்துககு எதிராக வாதிடமுடியும்.

உறவு பாலா குறிப்பிடுகின்ற எங்கல்ஸ் மேரிங்குக் எழுதிய கடிதத்தில் சிந்தாந்தத் துறைகளின் சுயேச்சையாக வளர்ச்சி அடைவதை மறுத்ததை குறிப்பிட்டுள்ளார்

வரலாற்றில் பாத்திரம் வகிக்கின்ற பல்வேறு சித்தாந்தத் துறைகள் சுயேச்சையாக வரலாற்று ரீதியில் வளர்ச்சி அடைவதை நாம்மறுப்பதால், அவை வரலாற்றின் மீது எவ்விதமான தாக்கத்தைச்செலுத்துவதையும் நாம் மறுக்கிறோம் என்னும் சித்தாந்திகளின்முட்டாள் தனமான கருத்தும் இதனுடன் சேர்ந்திருக்கிறது. “ (எங்கல்ஸ் மேரிங்குக் எழுதிய (ஜுலை 14, 1893)கடிதம்)

அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும்
மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்தும்.

இதற்கு எதிரான கருத்தை மார்க்சிய முதலாசிரியர்களிடம் நீங்கள் காணமுடியாது

அடித்தளம் தீர்மானிக்கிறது என்று சொன்னால், சமூக வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற பொருளில் பொருள்முதல்வாதமாகிறது.

மேற்கட்டமைப்பு தீர்மானிக்கிறது என்று சொன்னால், சிந்தனையே சமூக உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்ற பொருளில் கருத்துமுதல்வாதமாகிறது (February 21 at 10:43pm ·  · Like · 2)

Eswaran Ak //உறவு கா. சே. பாலசுப்ரமணியன்:- மனப்பீட மார்க்சியர்களுக்கு எதுவும் புரியாது வரலாற்றை விளக்கச் சொன்னால் எங்கெல்சை துணைக்கு அழைப்பது தத்துவ வறுமையே காட்டுகிறது. //

எங்கெல்சை அழைத்து தவறான கருத்தை முன்வைத்தது நீங்கள் தான் அதற்குள் மறந்துவிட்டீர்களா? பதிலளிக்காமல ஓடி ஒளிந்தது நீங்கள்தானே?

மார்க்சிய அடிப்படைகளை திரித்திப் புரட்டும் உறவு பாலாவுக்கு எனது கருத்தை       புரட்டுவது அவ்வளவு கடினமானதல்ல.

இதற்கு பின்னால் இட்ட பின்னூட்டம்:-

Eswaran Ak:- (இந்த பின்னூட்டம் வேறொரு இடத்தில் இடப்பட்டது இங்கே அதனை முன்வைத்து பதிலளிக்கிறேன்.)

Mangaaththa Mangai நீங்கள் குறிப்பிடுகின்ற // தத்துவங்களை விவாதிக்கும்போது பிறருக்கு புரிதல் பேதம் இருப்பதாக தெரிந்தால் அதை மாற்றும் முயற்சியில் தோல்வி காண்பதால் கோபம் கொள்வது என்பது பேதமை என்றே எனக்குப் படுகிறது// முயற்சியில் தோல்வியால் உறவு பாலாவை நீக்கவில்லை.

//எங்கெசின் மேரிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார்.மார்க்சும் நானும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் அடித்தளமே வரலாற்றின் உந்து சக்தியாக இருந்தது அதை வலியுறுத்தினோம்.ஆனால் அது மட்டுமே எக்காலத்துக்குமானது என நாங்கள் சொல்லவில்லை// என்கிற உறவு பாலா கூறிய கருத்தில் காணப்படும் // எக்காலத்துக்குமானது என நாங்கள் சொல்லவில்லை// என்பதற்கு ஆதாராம் கேட்டதற்கு இதுவரை ஆதாரத்தை அளிக்காமல்,

// எதைச் சொன்னாலும் மார்க்சு எங்கெல்சு லெனின் மேற்கோள் இருக்கா எனக் கேட்பது உங்களின் இயங்கிய பொருள்முதல்வாத அறிவு கவலைக்குறியது.// என்றும் மேலும் // மேற்கோள்களை ஆதாரம் காட்டுங்கள் என்பது வருந்ததக்கதே.சுயச்சிந்தனையோடு வாருங்கள். // என்றும் உறவு பாலா கூறுகிறார். ஆக உறவு பாலாவின் சுயசிந்தனை என்கிற அகநிலைப்போக்கு மார்க்சியத்துக்கு எதிரானது. மார்க்சியத்துக்கு எதிரானவராகவும், மார்க்சியத்தை திருத்தல்வழியிலேயே விளக்குபவராகவும் உள்ள உறவு பாலா அம்பலப்பட்டு போனார்.

ஆதாரமற்ற விவாதம் அறிவுப்பூர்வமானதல்ல அதுமட்டுமல்லாது எந்தப் பயனையும் நல்காது என்பதால் அவரை எனது நட்பு வட்டத்தில் இருந்து நீக்கினேன். அவரின் திருத்தல்போக்கை சுட்டிக்காட்டி நீக்கியதால், அந்த திருத்தல்போக்கிற்கு மாறாக எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் என்னிடம் தற்போது வினவருகின்றனர். அதனால் மார்க்சியம் பற்றிபுரிதல் பலபேரிடம் விரைவடைவதாகவே காணப்படுகிறது. புரிந்தவர்கள் தமது உறுதியை பலப்படுத்துவதாகவே எனது விளக்கங்கள் பயனளிக்கிறது. அதனால் நீங்கள் (Mangaaththa Mangai) குறிப்பிடுகிற // ஏனெனில் கா.சே.பா. வை நீக்குவதால் பொதுவாழ்வில் நாம் பின்பற்றும் தத்துவங்களுக்கு விரைவு வழி கிடைத்துவிடப்போவதில்லை.// என்ற கருத்து தவறாகிப்போகிறது. (February 23 at 10:41am · Like · 1)

Eswaran Ak:- உறவு பலா ஒன்றையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சொன்னதையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருக்கிறார். //எங்கெசின் மேரிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார்.மார்க்சும் நானும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் அடித்தளமே வரலாற்றின் உந்து சக்தியாக இருந்தது அதை வலியுறுத்தினோம்.ஆனால் அது மட்டுமே எக்காலத்துக்குமானது என நாங்கள் சொல்லவில்லை// என்று கூறிவருகிற உறவு பாலாவிடம் இவ்வாறு எங்கெல்ஸ் கூறியிருப்பின் எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டதற்கு,

// எதைச் சொன்னாலும் மார்க்சு எங்கெல்சு லெனின் மேற்கோள் இருக்கா எனக் கேட்பது உங்களின் இயங்கிய பொருள்முதல்வாத அறிவு கவலைக்குறியது.// என்றும் மேலும் // மேற்கோள்களை ஆதாரம் காட்டுங்கள் என்பது வருந்ததக்கதே.சுயச்சிந்தனையோடு வாருங்கள். // ஆதாரத்தைக் காட்டாமல் இவ்வாறு பதிலளிக்கிறார்.

ஆதாரம் காட்டவில்லை என்றால் உங்களை எனது முகநூல் நட்புவட்டத்தில் இருந்து நீக்கிவிடுவேன் என்று கூறிய பின்பும் அவர் ஆதாரத்தைக் காட்டாததால் அவரை நீக்கிவிட்டேன். நீக்கியதற்கு அவர் என்னைப் பற்றி கூறுகிறார்

(உறவு கா. சே. பாலசுப்ரமணியன்:-) // சனநாயகமற்ற தன்மை
சகிப்பு தன்மையற்ற மனோ நிலையில் அ.கா.ஈசுவரன் //

எங்கெல்ஸ் கூறியதாக சொல்வதை ஆதாரத்துடன் கூறுங்கள் என்று கேட்பது ஜனநாயமற்ற தன்மையாக அவருக்குப் படுகிறது.

// எங்கெல்ஸ் சொன்னதாகக் நீங்கள் கூறியற்கு ஆதாரம் கேட்டதற்கு அதனை நிரூபிக்க முடியாத உங்களது நிலையினால் விவாதம் முறிந்து போகிறது.// என்று தெளிவுபடுத்திவிட்டுத் தான் நான் அவரை நீக்கினேன். அவர் எங்கெல்சைப் பற்றி       கூறியதாக சொல்வது திருத்தல்வாதமே என்பதை அம்பலப்படுதிவிட்டு அவருடன் விவாதிப்பது காலவிரம் என்பதையும் தெரிவித்துவிட்டு அவரை நட்புவட்டத்தில் இருந்து நீக்கினேன். இதில் எனது சகிப்புத் தன்மையில் என்ன சிக்கல் வந்துவிட்டது.

பேருக்கும் புகழுக்கும் அலையும் குட்டிமுதலாளித்துவ சிந்தனையார்களர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டார் உறவு பலா. அவரது புலம்பலுக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதைவிட ஆக்கப்பூர்வமான வேலையைத் தொடர்ந்து செய்வதே சிறந்த பணி என்று முடிவெடுத்துள்ளேன். (February 23 at 3:54pm · Like · 2)

இந்த நட்புவட்ட நீக்கம் பற்றி Mangaaththa Mangai தோழரின் கருத்தும் எனது பதிலும் கீழே கொடுத்துள்ளேன்.

Mangaaththa Mangai:- ஈசுவரன் அய்யா அவர்களின் முடிவு அவரது சொந்த விருப்பமே என்றாலும் வாதங்களில் கருத்து மோதல்களும் புரிதல் பேதமைகளும் வருவது இயல்பே. இங்கே வார்த்தைகள் தடிக்காமல், பொறுமையுடன் புரிய வைப்பது மட்டுமே ஒரு தத்துவத்தை நாம் எவ்வளவு ஆழமாக புரிந்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று. புரிதல் பேதமை அல்லது பிடிவாத வாதங்கள் வந்துவிடுகின்றன என்பதற்காக நட்பு வட்டத்திலிருந்தே நீக்குவது என்பது அதீத செயல்பாடாகவே எனக்குப் படுகிறது. உறவை முறிக்குமளவுக்கு ஒருவருக்கு தகுதி நீக்கம் செய்வது என்பது அவசர முடிவாக அல்லது அந்த தத்துவத்தை நாம் புரிந்து வைத்திருப்பதற்கான மேம்போக்கான காட்சிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்து விடுகிறது. எதுவாக இருந்தாலும் அவரவர் விருப்பமே ஒருவரின் வட்டத்தி்ல் இருப்பதும் நீங்குவதும் மற்றும் இருத்துவதும் நீக்குவது. (February 24 at 1:52pm · Like)

Eswaran Ak:- Mangaaththa Mangai @ இங்கே வருத்தம் ஏற்படும்படியாக எதுவும் நடந்திடவில்லை. வார்த்தை தடிப்பு பற்றிய வருத்தம் ஈசுவரன் அய்யாவிடத் தான் காண்கிறீர்களா? உறவுபாலா அய்யாவிடம் தென்படவில்லையோ?

முகநூல் நட்புவட்டத்தில் ஒத்தகருத்துடையர்கள் மட்டும் இணைவதில்லை, மாறுபட்ட கருத்துடையவர்களும் தங்களுடைய கருத்தின் அடிப்படையில் விவாதிக்கின்றனர்.

ஆனால் உறவுபாலா எங்கெல்ஸ் கூறாததை கூறியதாக திரித்துரைத் திருக்கிறார்.      என்னைப் பற்றி அவதூறு செய்கிறார். கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் எதோ நான் மேற்கோள் சப்ளை செய்தாக நினைத்துக் கொண்டு, யார் யாருக்கு தேவையோ அந்த மேற்கோள்ளை மட்டும் அவர்களுக்குத் தருவதாக பொய்யுரைக்கிறார்.

எங்கெல்ஸ் கூறியதாக உறவுபாலா சொன்னதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டால். மேற்கோள் தரமாட்டேன் என்றும் சுயசிந்தனையோடு பேசுங்கள் என்று கூறுகிறார். எங்கெல்ஸ் கூறியதை இவர் சுயசிந்தனையில் எப்படி கூறுகிறார் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பிரத்யேகமான ரஷ்ய நிலைமைக்கானது என்று கூறிய கட்சிக்கு அது தவறு என்றும் அதற்கான அதாரத்தையே மேற்கோள்களால் விளக்கியிருக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி அவர்களின் ஜீனியர் விகடன் ஏட்டிற்கு அளித்த பதிலுக்கு எனது எதிர்வினை:-

 

http://scientificcommunism.blogspot.in/2013/05/blog-post_12.html


அதே போல் போல்ஷிவிசத்தை ஏற்றுக் கொண்டதாக கூறுகிற இயக்கத்தின் போல்ஷிவிச சித்தாந்தத்தின் எதிரான செயல்பாட்டை விமர்சித்து, அதற்கான லெனின் கருத்தை மேற்கோள்களாக கொடுத்துள்ளேன். எனது விவாதங்கள் இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.

இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற தேர்தல் பாதை உகந்ததல்லஎன்ற சமரனின் கருத்துக்கு எதிரிவினை:-


போல்ஷிவிசம் என்பது வெறும் கவர்ச்சி சொல்லா?, வழிகாட்டும் கோட்பாடா? (சட்டபூர்வமான, சட்டபூர்வமற்ற போராட்டம் பற்றி மார்க்சியம் )



ஆனால் உறவுபாலா நான் அவர் அவர்களுக்குத் தேவைப்படுகிற மேற்கோள்களை சப்ளை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார். இப்படி உண்மைக்கு மாறாக இருப்பவருடன் நடப்போடு விவாதிப்பதற்கு ஏதும்இல்லை என்று நட்புவட்டத்தில் இருந்து நீக்கிவிட்டேன்.

எங்கெல்ஸ் கூறியதாக நீங்கள் சொல்வதை ஆதாரத்தோடு முன்வையுங்கள் அவ்வாறு செய்ய வில்லை என்றால் திருத்தல்போக்குடையவரிடம் நடப்பு வைத்திட முடியாது என்று தெரிவித்துவிட்டே அவர் நடவடிக்கையின் அடிப்படையில் அவரை நீக்கிவிட்டேன்.

// அந்த தத்துவத்தை நாம் புரிந்து வைத்திருப்பதற்கான மேம்போக்கான காட்சிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்து விடுகிறது// என்று உங்களது கருத்து எந்த வகையிலும் அர்த்தமுள்ளதாகாது. நான் எழுதிகிற தத்துவ எழுத்துக்கள் திருத்தல்வாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை. புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கே நான் தத்துவத்தை எழுதிவருகிறேன். அதன் வெற்றியே உறவுபாலாவை புலம்பிட வைத்துள்ளது. அதனால் எனது தத்துவம் மேம்போக்கானதா என்றெல்லாம் கவலைப்பட்டு மூளையை வீணாக கசக்கிக்கொள்ளாதீர்கள். (February 24 at 8:18pm · Edited · Like · 1)

Eswaran Ak:- “மார்க்சையும் எங்கெல்சையும் நான் தொடர்ந்து “நேசிக்கிறேன் அவர்களைப் பற்றிய எத்தகைய தவறானதையும் (any abuse) என்னால் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் உண்மையான மனிதர்கள். நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலிருந்து நாம் விலகக் கூடாது.”- லெனின் (February 24 at 9:39pm · Like · 4)


-ஆக மார்க்சிய முதலாசிரியர்களைப் பற்றி தவறானதைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற உறவுபாலா போன்றோர்கள் மார்க்சிய சிந்தனைக்கு எதிரானவராக அப்பலப்படுத்துவதே, தொழிலாளர்களர் மற்றும் உழைக்கும் மக்களினுடைய கட்சிக்கும் இயக்கங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அவரை எனது முகநூல் நட்புவட்டத்தில் இருந்து நீக்கி அம்பலப்படுத்துகிறேன்.

Saturday 3 January 2015

மார்க்சியத்தைப் புதிப்பிப்பவர்கள் முதலில் மார்க்சியத்தை அறிந்து கொள்ளட்டும்

மார்க்சியத்தைப் புதுப்பிப்போம் என்பதே மார்க்சியத்தை புரிந்து கொள்ளாமையை வெளிப்படுத்துகிறது.



லெனின் கூறுகிறார்:- “எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல என்கிறார் எங்கெல்ஸ்- தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும்படி எங்களுடைய என்கிறார்.
..
பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருபங்களினால் இந்தக் குறிக்கோள் மாறுவதில்லை.
..
இந்தக் காலகட்டத்தில் ஸ்தூலமான சமுதாய-அரசியல் நிலைமையும், அது போல நேரடியான, உடனடியான செயலின் குறிக்கோள்களும் மிகத் தீவிரமாக மாறி வந்திருக்கின்றன. இதன் விளைவாக மார்க்சியத்திலும் அதன் பல்வேறு அம்சங்க்ள் முன்னணிக்கு வந்து தீர வேண்டும். ஏனெனில் மார்க்சியம் உயிர்ப் பண்பு கொண்ட போதனையாகும்.” (மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சிலசிறப்பியல்புகள்)

பி இளங்கோ சுப்பிரமணியன் என்பவர் தமது முகநூலில் “மார்க்சியத்தில் சாதியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!” (https://www.facebook.com/ilango.pichandy/posts/1585433875019508) என்ற சிறு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் மார்க்சியம் பற்றி எந்த வகையான புரிதலும் இன்றி மார்க்சியத்தில் அது இல்லை இது இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார். முதலில் அவர் மார்க்சியத்தைப் புரிந்து கொண்டிருந்தால் இத்தகைய கேள்வி எழுந்திருக்காது.  

செயலுக்கு வழிகாட்டி என்று மார்க்சியத்தை லெனின் கூறியதை மேலும் புரிந்து கொள்வதற்கு மார்க்சியம்-லெனினியம் உண்மையை அறியும் வழியை நடைமுறை வாயிலாக இடைவிடாமல் திறந்து காட்டுகிறது என்று மாசேதுங் கூறுகிறார்:-

"புறநிலை எதார்த்த உலகில் மாற்றத்தின் இயக்கங்கள் ஒருபொழுதும் முற்றுப்பெறாது. அதைப் போன்றதுதான், நடைமுறையின் மூலம் மனிதன் உண்மையை அறியும் நிகழ்ச்சிப்போக்கும், மார்க்சியம்-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை. மாறாக, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. அகமும் புறமும், கொள்கையும் நடைமுறையும், அறிவதும் செய்வதும் பருண்மையான வரலாற்று வழியிலான ஒற்றுமையில் இருக்கிறது என்பதே நமது முடிவு."
(
நடைமுறை பற்றி)

மாசேதுங் கூறுவது போல், மார்க்சியம் நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது என்பதை பி இளங்கோ சுப்பிரமணியன் புரிந்து கொள்ளவில்லை.

இளங்கோ “எந்த ஒரு தத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள  அனைத்துச் சிக்கல்களுக்கும் தயார் நிலையிலான தீர்வுகளை
(READYMADE SOLUTIONS)
வழங்கும் என்ற எதிர்பார்ப்பே அறிவியலற்றது (UNSCIENTIFIC).” என்று பொதுப்படக் கூறிவிட்டு, மார்க்சியம் குறைபாடானதாக காட்ட முயற்சிக்கிறார்.

 இங்கே இளங்கோவின் கருத்துக்களை முழுமையாக மறுப்பதைவிட, அவர் முதலில் மார்க்சியத்தில் அறிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு தற்போது நிறுத்திக் கொள்வோம்.

“மலையாகக் குவிந்து கிடக்கும் இந்த நூல்களில், ஏதேனும் ஒன்றில் சாதியைப் பற்றி (ON CASTE ) ஏதேனும் ஒரு சிறு குறிப்பாவது உள்ளதா என்றால் இல்லை என்பது
கண்கூடு.”  என்கிறார் இளங்கோ. மார்க்சியத்தில் காணும் சாதியம் பற்றிய எந்தக் கருத்தையும் இவர் இன்னும் படித்தறியவில்லை என்று தெரிகிறது.

மார்க்சும் எங்கெல்சும் தாம் இணைந்து எழுதிய ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலில் காணப்படுவதைப் பார்ப்போம்:-
“இந்தியர்கள் மற்றும் எகிப்தியர் விஷயத்தில் முதிராத வடிவில் தோற்றம் அளிக்கும் உழைப்புப் பிரிவினை அவர்களது அரசு மற்றும் சமயத்தில் சாதி முறையை வெளிக் கொணரும் போது, இந்த சாதி முறையே இந்த முதிராத சமுதாய வடிவத்தை உருவாக்கியுள்ள சக்தி என்பதாக வரலாற்றாளர் கருதுகிறார்கள்”

மேலும், மார்க்ஸ் பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய படிதத்தில் (28/12/1846) “திரு.புரூதோனுக்கு உழைப்புப் பிரிவினை ஒரு மிகச் சாதாரணமான விஷயம். எனினும் சாதி அமைப்பு முறையுங்கூட ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை அல்லவா?”
உழைப்புப் பிரிவினையோடு சாதியத்தைப் பற்றி மார்க்ஸ் பேசுகிற கருத்தைப் புரிந்து கொண்டால் சாதியத்துக்கான தீர்வை நோக்கி பயணிக்கலாம். சாதியத்தை புரிந்து கொள்வதற்கு மார்க்சும் உதவுவார் மார்க்சியமும் உதவும்.

 தொடக்கால எழுத்துகளில் மட்டுமல்லாது மார்க்ஸ் தாம் வாழ்ந்த காலத்திலேயே எழுதி வெளியிட்ட மூலதன நூலின் முதல் பகுதியிலும் சாதியத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபாடுறும் தன்மை தனிஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன, ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே” (மூலதனம்  I பக்கம் 461)

அதே போல் "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் “எங்கல்ஸ், இந்தியா பக்கம் கீழ்த்திசை நாடுகளின் பக்கம் தம் பார்வையைத் திருப்பி இருக்கிறாரா என்றால், இல்லை என்பது தெளிவு.” என்று இளங்கோ எழுதுகிறார்

 இந்தியர்களைப் பற்றியும், தென்னிந்தியர்களைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எங்கெல்ஸ் எழுதியதை இளங்கோ படித்தறியவில்லை.

நீயூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியில் காணப்படும் ரத்த உறவு முறையைக் குறிப்பிடும் சொற்களில் இரு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் குறிப்பிடும் உறவுகளின் பெயரோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு எங்கெல்ஸ் எழுதியுள்ளார்.

"ஓர் இராகோஸ் தனது சொந்தக் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைப்பதில்லை. அவர் தனது சகோதரனின் குழந்தைகளையும் தன்னுடைய மகள், மகன் என்றே அழைக்கிறார். அவர்களும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவர் தனது சகோதரியின் குழந்தைகளை மருமகள், மருமகன் என்று அழைக்கிறார், அவர்கள் அவரை மாமா என்று அழைக்கிறார்கள்.

இதற்கு எதிரிடையாக, ஓர் இராகோஸ் பெண் சகோதரியின் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளுடன் சேர்த்துத் தன் மகன், மகள் என்றே அழைக்கிறார். அவர்களும் அவளை அம்மா என்றே அழைக்கிறார்கள். மறுபக்கத்தில் அவள் தன்னுடைய சகோதரர்களின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறார்ள். அவர்கள் அவளை அத்தை என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே சகோதரர்களின் குழந்தைகள் ஒருவரையொருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அழைத்துக் கொள்கிறார்கள், சகோதரிகளின் குழந்தைகளும் அவளுடைய சகோதரனுடைய குழந்தைகளும் ஒருவரையொருவர் தமது பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் என்று அழைக்கிறார்கள்.

இவை அர்த்தமில்லாத வெறும் சொற்களல்ல, ஆனால் இரத்த உறவு முறையின் நெருங்கிய தன்மை, விலகிய தன்மை, சமத்துவம், சமத்துவமின்மை பற்றி நடைமுறையில் இருக்கின்ற கருத்துக்களைக் குறிக்கின்ற சொற்களாகும். இக்கருத்துககள் முழுமையான உருவாக்கப்பட்ட இரத்த உறவு முறைக்கு அடிப்படையாகப் பயன்படுகின்றன.

ஒரு தனி நபரது நூற்றுக்கணக்கிலே வேறுபட்ட உறவுகளை இது குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மேலும், இம் முறை எல்லா அமெரிக்க செவ்விந்தியர்களிடையிலும் முழு அளவில் செயலில் இருப்பது மட்டுமன்றி இந்தியாவின் ஆதிக்குடியினர் மத்தியிலும், தக்காணப் பகுதியிலுள்ள திராவிட இனக்குழுக்கள், இந்துஸ்தானத்திலுள்ள கௌரா இனக்குழுக்கள் ஆகியோர் மத்தியிலும் அநேகமாக மாற்றமின்றி நிலவி வருகிறது.

தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றையே குறிக்கின்றன"   (மார்க்ஸ் எங்கெல்ஸ்- தேர்வு நூல்கள் தொகுதி 11-பக்கம் 46-47)


இது போன்ற மார்க்சிய முதலாசிரியர்களின் படைப்புகளை  எல்லாம், பி இளங்கோ சுப்பிரமணியன் படித்து முடித்தால் மார்க்சியம் புரிந்திடும். புரியாத மார்க்சியத்தை எதிர்ப்பதை விடுத்து மார்க்சியத்தை புரிந்து எதிக்கட்டும் அதனை எதிர்கொள்ள மார்க்சியம் என்றும் தயராகத் தான் இருக்கிறது.