ருஷ்யாவில் அக்டோபரில் லெனின் சோஷலிசப் புரட்சி நடத்தியதற்கு காரணம், ருஷ்யாவில் தோன்றிய இரட்டை ஆட்சி முறை என்று கூறியதற்கு நான் ஆதாரங்களை முன்வைத்துள்ளேன். அந்த ஆதாரத்தை வைத்து விமர்சித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எனது முடிவுக்கான லெனின் கருத்துக்கள்.
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் புரிந்து கொள்ள வேண்டும்: இது புரிந்து கொள்ளப்படாவிட்டால் நாம் முன்னேற முடியாது.”(இரட்டை ஆட்சி -39)
“நமது புரட்சியின் பிரதான இயல்புக்கூறு, கவனமாகச் சிந்தித்துத் தெளிய வேண்டும் என்று மிகவும் அவசர கட்டாயமாகக் கோருகிற ஓர் இயல்புக்கூறு இரட்டை ஆட்சி”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -49)
“5. தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு, நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். “ (ஆய்வுரை ஐந்தில்)
(இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள்)
குமணன்:-
“இவருடைய அபத்தமான கோட்பாட்டின்படி முதலாளியப் புரட்சி நிறைவுற்ற எந்த நாட்டிலும், சோவியத்துகளும் இரட்டை ஆட்சியும் இல்லாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற திட்டத்தை வைக்க முடியாது.”
இந்த இரட்டை ஆட்சி முறை என்பது ரஷ்யாவில் காணப்பட்ட பிரத்யேக நிலை என்று லெனின் கூறியுள்ளார், அதைதான் நான் கூறியுள்ளேன். இந்த பிரத்யேக நிலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் சோஷலிச புரட்சி என்கிற திட்டம் வைக்க வேண்டும் என்று நான் கூறவில்லையே. அப்படி இருக்க நான் கூறாததை நான் கூறியதாக சொல்வது ஏன்? முத்திரை குத்துவதற்கு எளிதாக இருக்கிறது என்பதற்காவா!!!
ருஷ்யாவில் லெனின் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்கிற முடிவு எடுத்தற்கு, ருஷ்யாவில் காணப்பட்ட இரட்டை ஆட்சி முறை என்று கூறியது லெனின். அது மட்டுமல்லாது “நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே” என்று லெனின் கூறியதற்கான அதாரத்தை நான் கொடுத்தை கணக்கில் கொள்ளவில்லையே.
என்னை முத்திரை குத்துவத்தில் எந்தப் பயனும் இல்லை. அது பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. எனது கருத்துக்கான ஆதாரத்தை லெனின் எழுத்துகளில் கொடுத்துள்ளேன், அது எந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன். அதைக் கணக்கில் கொண்டால் சரியாகப் புரிவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் புரிந்து கொள்ள வேண்டும்: இது புரிந்து கொள்ளப்படாவிட்டால் நாம் முன்னேற முடியாது.
நாம் பழைய 'சூத்திரங்களை'”, உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது.
ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.
இந்த இரட்டை ஆட்சி என்பது என்ன?
இடைக்கால அரசாங்கத்தின், முதலாளித்துவ வர்க்கத்தினுடை அரசாங்கத்தின் அருகிலேயே இன்னொரு அரசாங்கம் உதித்தெழுந்துள்ளது. இதுகாறும் பலவீனமாயும் முளைப்பருவத்தில் இருந்த போதிலும் அது மெய்யாகவே நிலவுகிற, வளர்ந்து வருகிற ஓர் அரசாங்கம் என்பதில் ஐயமில்லை- இதுவே தொழிலாளர் மற்றும் படையாவீரர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகளாகும்.” (இரட்டை ஆட்சி -39)
“நமது புரட்சியின் பிரதான இயல்புக்கூறு, கவனமாகச் சிந்தித்துத் தெளிய வேண்டும் என்று மிகவும் அவசர கட்டாயமாகக் கோருகிற ஓர் இயல்புக்கூறு இரட்டை ஆட்சி”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -49)
“சாராரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் தூய சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இரட்டை ஆட்சி”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -51-52)
என்னுடைய விளக்கங்களை புரிந்து பதிலளிக்காமல், தமது முடிவுகளில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
“இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேக நிலை காரணமாகவே, சோஷலிசப் புரட்சி என்கிற செயற்தந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை லெனின் எந்த வகையிலும் மறக்கவில்லை.
மேலும், அக்டோபர் புரட்சிக்குப்பின் ருஷ்யாவில் உருவான சோஷலிச அரசால் போடப்பட்ட “புதிய பொருளாதாரக் கொள்கை” என்பது ருஷ்யாவில் விடுபட்டுப் போன முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்டது என்பதையும் சேர்த்துப் பார்க்கும் போது. பின்தங்கிய விவசாய நாட்டில் சோஷலிச நிர்மாணத்தை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்பதில் லெனின் தெளிவாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
உழைப்பாளர்களின் சோவியத் அரசைக் கொண்டு உடனடியாக சோஷலிசத்தைப் புகுத்தப் போவதில்லை என்ற முடிவில் லெனின் இருப்பதினால், நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி அல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று கூறுவதுதானே சரியாக இருக்கும் என்று பலருக்குத் தோன்றும். தொழிலாளர்களின் சோவியத் என்பது பாராளுமன்ற குடியரசைக்காட்டிலும் மக்களுக்கு அதிக பயன் அளிப்பவை ஆகும், மேலும் விடுபட்டுப்போன ஜனநாயகக் கடமைகளை நிறைவு செய்வற்கு மட்டுமல்லாது, சோஷலிசத்துக்கான முன்தாயாரிப்பு வேலையினையும் செய்வதினால் சோஷலிசப் புரட்சி என்று கூறுவதே சரியாக இருக்கும்.
குறிப்பாக, எட்டாவது ஆய்வுரையில் கூறப்பட்ட, சமூக உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் சோவியத் அரசின் கண்காணிப்பில் இருக்கும் என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு சோஷலிச அரசும், சோஷலிசப் புரட்சியும் அவசியமாகும்.
சோஷலிச புரட்சி என்று லெனின் எடுத்த முடிவு சரியானதாகவே இருக்கிறது.”
எனது இந்த விளக்கம் எந்த வகையில் தவறானது என்பதை சொல்லவில்லையே. என் மீது முத்திரை குத்துவதில் உள்ள கவனத்தை இதில் செலுத்தி இருக்கலாமே.
என்னுடைய வகுப்பில் நீங்கள் கவனிக்காத பகுதிகள் நிறைய இருக்கிறது.
” “தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள்” என்கிற கட்டுரையானது ஏப்ரல் ஆய்வுரைகளுக்கு முன்பு எழுதியதாகும். இந்தக் கட்டுரையில் உள்ள ஒன்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
பிப்ரவரி புரட்சியின் விளைவாக முதலாளித்துவ வர்க்க நாடாளுமன்ற அரசும், தொழிலாளர்களின் சோவியத் அரசும் தோன்றியது. இரட்டை ஆட்சி முறையில் உள்ள இந்த சோவியத் அரசைப் பற்றி இக் கடிதத்தில் லெனின் கூறியதை பார்ப்போம்.
இதற்கு முன் நாம் லெனின் கூறிய, “அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்று கூறியதை மனதில் கொண்டு, இந்த கடிதத்தில் உள்ளதைப் பார்ப்போம். இங்கே அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன என்று கூறுவது சோவியத் அரசு நம்மிடம் இருக்கின்றன என்பதே ஆகும். அதாவது சோவியத் அரசு கையில் இருப்பதை முன்வைத்தே, அரசியல் முன்தேவைகள் தம்மிடம் இருக்கின்றன என்று லெனின் கூறியுள்ளார்.
“இதனுடன் அக்கம் பக்கமாக முக்கியமான, அதிகாரபூர்வமல்லாத, இன்னும் வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் ஏழைகள் பகுதி முழுமையின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஆகும். இது படைவீரர் விவசாயிகளுடனும், விவசாயித் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளை விட மேலதிகமாக விவசாயித் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.
மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறநிலையான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயல வேண்டும். அதன் வழியில், மார்க்சியப் செயற்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளத்தை —மெய்நடப்புகளின் அடித்தளத்தை- அடிப்படையாகக் கொள்ள முடியும்.”
(தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள் 22-23)
இங்கே லெனின், முதலாளித்துவ அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர்களின் சோவியத் இருப்பதை சுட்டிக்காட்டும் போது, “மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே” என்கிறார். இதனுடன் முன்பு நாம் பார்த்த, சோவியத் அரசை முன்வைத்து லெனின் கூறிய, “அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, முதலாளி வர்க்கத்தின் அரசுக்கு இணையாகத் தோன்றிய உழைப்பாளர்களின் சோவியத் அரசை முன்வைத்தே ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்கிற முடிவுக்கு லெனின் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.”
எனது பார்வையினை போகிற போக்கில் கூறவில்லை, லெனின் எழுத்துகளின் ஆதாரத்தில் இருந்தே கூறியுள்ளேன். அதனடிப்படையில் எனக்கு பதிலளிக்கவும்.
“முதலாளித்து-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை இன்னும் எட்டிராத நிலையில் புரட்சியின் வளர்ச்சியில், ஒர் இடைநிலைக் கட்டமாக இரட்டை ஆட்சி இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இரட்டை ஆட்சியின் பிரத்யேக நிலை என்பது இதுதான்.
“சாராரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் தூய சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இரட்டை ஆட்சி”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -51-52)
இரட்டை ஆட்சியைப் பற்றி பேசிய பிறகு வருகிற உட்தலைப்பு, மேலே குறிப்பிட்டதிலிருந்து தொடரும் செயல்தந்திரங்களின் பிரத்யேகத் தன்மை, என்கிற பகுதியில் லெனின் கூறியதைப் பார்ப்போம்.
புறநிலை உண்மைகளை கணக்கில் கொள்ள வேண்டிய மார்க்சிவாதிகளுக்கு, மேலே விவரிக்கப்பட்ட, உண்மையான சூழ்நிலைமையின் பிரத்யேகத் தன்மை, தற்போதைய தருணத்திற்கான செயற்தந்திரங்களைத் (Tactics) தீர்மானிக்க வேண்டும் என்று லெனின் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதன் மூலம் சோஷலிசப் புரட்சி என்கிற செயற்தந்திரத்தை இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேகத் தன்மையில் இருந்தே லெனின் அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
“ தனிப்பட்ட நபர்களை அன்றி எதார்த்த நடப்பு, மக்கள் திரள் மற்றும் வர்க்கங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய மார்க்சியவாதிகளுக்கு, மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்தியேகத் தன்மை, இன்றைய தருணத்திற்கான போர்த்தந்திரங்களின் பிரத்தியேகத் தன்மையினை நிர்ணயம் செய்ய வேண்டும்.”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -54)
இங்கே லெனின், “மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்யேகத் தன்மை” என்பது, “இரட்டை ஆட்சியின் பிரத்யேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும்” என்கிற முந்தைய உட்தலைப்புப் பகுதியே ஆகும்.
சோஷலிசப் புரட்சி என்கிற செயல்தந்திரத்தை லெனின் தேர்ந்தெடுத்தது இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேகச் சூழ்நிலையில் இருந்தே என்பதில் எந்த சந்தேகமும் எழாத வகையில்தான் லெனின் விளக்கி இருக்கிறார்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையில், லெனின் ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி என்கிற கோரிக்கையை வைக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், பெரும்பான்மையான மக்கள் சோஷலிசப் புரட்சியின் அவசியத்தை உணராத வரை, சிறு விவசாயிகள் உள்ள நாட்டில் சோசலிசத்தை "அறிமுகம்" செய்வதை எந்தச் சூழ்நிலையிலும் பாட்டாளி வர்க்கக் கட்சி தானே குறிக்கோளாக அமைத்துக் கொள்ள முடியாது என்று லெனின் கூறியுள்ளார்.
இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேக நிலை காரணமாகவே, சோஷலிசப் புரட்சி என்கிற செயற்தந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை லெனின் எந்த வகையிலும் மறக்கவில்லை.
மேலும், அக்டோபர் புரட்சிக்குப்பின் ருஷ்யாவில் உருவான சோஷலிச அரசால் போடப்பட்ட “புதிய பொருளாதாரக் கொள்கை” என்பது ருஷ்யாவில் விடுபட்டுப் போன முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்டது என்பதையும் சேர்த்துப் பார்க்கும் போது. பின்தங்கிய விவசாய நாட்டில் சோஷலிச நிர்மாணத்தை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்பதில் லெனின் தெளிவாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
உழைப்பாளர்களின் சோவியத் அரசைக் கொண்டு உடனடியாக சோஷலிசத்தைப் புகுத்தப் போவதில்லை என்ற முடிவில் லெனின் இருப்பதினால், நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி அல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று கூறுவதுதானே சரியாக இருக்கும் என்று பலருக்குத் தோன்றும். தொழிலாளர்களின் சோவியத் என்பது பாராளுமன்ற குடியரசைக்காட்டிலும் மக்களுக்கு அதிக பயன் அளிப்பவை ஆகும், மேலும் விடுபட்டுப்போன ஜனநாயகக் கடமைகளை நிறைவு செய்வற்கு மட்டுமல்லாது, சோஷலிசத்துக்கான முன்தாயாரிப்பு வேலையினையும் செய்வதினால் சோஷலிசப் புரட்சி என்று கூறுவதே சரியாக இருக்கும்.
குறிப்பாக, எட்டாவது ஆய்வுரையில் கூறப்பட்ட, சமூக உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் சோவியத் அரசின் கண்காணிப்பில் இருக்கும் என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு சோஷலிச அரசும், சோஷலிசப் புரட்சியும் அவசியமாகும்.
சோஷலிச புரட்சி என்று லெனின் எடுத்த முடிவு சரியானதாகவே இருக்கிறது.”
இப்படி விளக்கமாக நான் கூறயதை ஏன் தோழர் உங்கள் கண்ணில் படவில்லை, பட்டிருந்தால் இதற்கும் பதிளித்திருப்பீர்கள் தானே.
ஏப்ரல் ஆய்வுரையின் அடிப்படையில் இந்தியாவில் .1947 ஆண்டு நடைபெற்றது முதலாளித்துவப் புரட்சி அடுத்த நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று கூறியதற்குதான், இங்கே இரட்டை ஆட்முறை இல்லை என்று கூறினேன். சோஷலிசப் புரட்சி நடை பெற வேண்டுமானால் இரட்டை ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று ரஷ்யாவில் காணப்பட்ட பிரத்யேக நிலைமையினை பொதுமைப் படுத்தவில்லை.
எதையும் மேம்போக்காப் படிக்காமல் ஆழமாகப் படித்து பதிலளியுங்கள் தோழர். அவசரப்படத் தேவையில்லை, நன்றாகப் படித்து விமர்சியுங்கள்.
ருஷ்யாவில் முதலாளித்துவ புரட்சி இந்த அளவில் நிறை வேறுயது என்று ஏன் கூறியுள்ளார் என்பதற்கு விளக்கத்தை நான் கொடுத்துள்ளேன். அதையும் நீங்கள் கண்டு கொள்ளவில்லை.
“பிப்ரவரி புரட்சியின் விளைவாக,
“ருஷ்யாவில் அரசு அதிகாரம், புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சி முழுமையடைந்து விட்டது. ”
(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள்”‘-45)
அதே போல “செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்” என்கிற கட்டுரையில் கூறியதைப் பார்ப்போம்.
“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.
இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.
இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.
இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.”
(செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் -8)
இந்த அளவுக்கு, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்துவிட்டது என்று கூறுவதை மட்டும் மனதில் கொண்டு தவறான முடிவுக்கு அந்தச் சிலர் வருகின்றனர்.
லெனினது இந்தக் கருத்துகள், பழைய போல்ஷிவிக்குகளிடம் விவாதத்துக்காக முன்வைத்தது. ஆனால், இதைமட்டுமே முன்வைத்து முதலாளித்துவப் புரட்சிக்கு அடுத்தது சோஷலிசப் புரட்சி என்று வாய்பாட்டைப் போல சிலர் கூறுகின்றனர்.
1917-ஆம் ஆண்டு அக்டோபர் சோஷலிசப் புரட்சியை நிறைவேற்றியப் பிறகும் 1921-ஆம் ஆண்டில் லெனின் எழுதிய “அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழா” என்கிற கட்டுரையில், ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகம் என்று கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகக் குறிக்கோள்தான், அதாவது மத்திய கால முறைமையின் மீதமிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெறிவதும், இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை, இந்த அவக்கேட்டை ருஷ்யாவிடமிருந்து களைந்தெறிவதும், நமது நாட்டில் அனைத்துக் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்டத் தடையாய் அமைந்த இதனை அகற்றுவதும்தான்.”
(அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழா -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்.- 49)
1923-ஆம் ஆண்டு லெனின் எழுதிய “சிறியதாயினும் சிறந்ததே நன்று” என்கிற கட்டுரையில், உடனே சோஷலிசத்தை அடைவதற்கு போதிய நாகரிக வளர்ச்சி தம்மிடையே இல்லை என்று லெனின் ஏன் சொன்னார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“உடனே சோஷலிசத்தை அடைவதற்கு நம்மிடம் போதிய நாகரிக வளர்ச்சி இருக்கவில்லை, ஆனால் அதற்கு வேண்டிய அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன.”
(சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 345)
“அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்று லெனின் கூறியதை நாம் நான்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், லெனின் ருஷ்யாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று ஏன் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.
சோஷலிசப் புரட்சி நடத்துவதற்கு முன்தேவையான பொருளாதார வளர்ச்சியை அன்றைய ருஷ்யா பெற்றிருக்கவில்லை. அதனால் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, அக்டோபர் புரட்சியை சோஷலிசப் புரட்சியாக லெனின் நடத்தவில்லை என்பது தெரிகிறது.
லெனின் இங்கே “அரசியல் முன்தேவைகள்” என்று குறிப்பிடுவது தொழிலாளர்களின் சோவியத் அரசே ஆகும். சோவியத் அரசு இருப்பதினால்தான் சோஷலிச வளர்ச்சியை நோக்கி செல்ல முடிகிறது. பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் சோஷலிச மாற்றத்துக்கு செல்ல முடியவில்லை. இங்கு நடைபெறுகிற அதிகார மாற்றம் என்பது பொருளாதர அடிப்படையில் அல்ல என்பதும் நமக்குத் தெளிவாகிறது.
சோவியத் என்கிற உழைப்பாளர் அரசு, ருஷ்யாவில் தோன்றாமல் இருந்திருந்தால், இந்த ஆட்சி மாற்றம் என்பது வெறும் அதிகார மாற்றமாக மட்டுமே இருந்திருக்க முடியும், சோஷலிச மாற்றமாக இருந்திருக்காது.
ஏப்ரல் ஆய்வுரைகள் என்கிற பத்து ஆய்வுகளில் எங்கேயும் இவர்கள் கூறியது போல் கூறவில்லை என்பதை அறிந்தாலே, இந்த அளவு முதலாளித்துவ புரட்சி முடிந்துவிட்டது என்று கூறுவது விவாதத்தை முன்வைத்தே தவிர, சோஷலிசப் புரட்சிக்கான அடிப்படையாகக் கூறவில்லை என்பது தெரிகிறது.”
என்னை விமர்சியுங்கள், முத்திரைக் குத்தாதீர்கள் அது எதற்கும் பயன்படாது. விமர்சனமே நம்மை செழுமைப்படுத்தும்.
நமது இறுதிக்குறிக்கோள் கம்யூனிச சமூகமே, அதற்கு இடையில் உள்ளது தான் சோஷலிச சமூகம். இது லெனின் காலத்திய கம்யூனிஸ்டுகளின் சொற்கள். மார்க்ஸ் கம்யூனிசத்தின் முதல் கட்டம் உயர் கட்டம் என்று கூறியுள்ளார். மார்க்ஸ் கூறிய முதற்கட்டம் நமது இறுதி குறிக்கோளாக இருக்காது, உயர் கட்டமே இறுதி குறிக்கோள் (strategy.) இறுதி கட்டத்தை அடைவதற்கான செயல்தந்திரமே முதற்கட்டம்.
வார்த்தை விளையாட்டைக் கடந்து விமர்சனம் வையுங்கள் தோழர் பதிலளிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment