மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும்
ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும்
கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான 'நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்' என்று
அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான்.
ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந் துள்ள ஒரு சமுதாயத்தில் 'ஒருசார்பற்ற
சமுதாய விஞ் ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும்,
மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறை யை ஆதரிக்கிறது.
மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது.
மூலதனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா
என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி
அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில்
விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.
இது மட்டுமல்ல. தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும்
சரி, மார்க்சியத்தில் 'குறுங்குழுவாதம்' போன்றதெதுவும் கிடையாது என்பதைத்தெள்ளத் தெளிவாகக்
காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின்
ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேருரொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக,
மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ்
விடைகள் தந்தார் என்பதில்தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம்,
அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான,
உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.
மார்க்சின் போதனை மெய்யானது, அதனுல்தான் அது எல்லாம்வல்ல தன்மை பெற்றிருக்கிறது.
அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஒர் ஒன்றிணைந்த உலகப்பார்வையை அது மக்களுக்கு
அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு
ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய
அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றண்டில் மனித குலம்
உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.
இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும்.
இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)
No comments:
Post a Comment