முரண்பட்ட சமூகத்தை மாற்றுவதற்கு மார்க்ஸ் எந்தவித குறுங்குழுவாத கோட்பாட்டையும் உறுவாக்கிக்கொள்ளவில்லை. மனித
சமூகத்திலுள்ள முன்னணி சிந்தனையாளர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அவர் விடை அளித்தார். அந்த விடையும் உலக சிந்தனையாளர்களிட்ம்
இருந்து விலகி தனித்த போக்கில் படைத்திடவில்லை, அந்த சிந்தனையாளர்களின் நாகரீக வளர்ச்சியின் வழியிலேயே வந்தடைந்தார்.
மார்க்சும் அவரது உற்ற தோழருமான எங்கெல்சும் நமக்கு அளித்த அடிப்படை கருத்துக்களே
மார்க்சியம் ஆகும்.
அந்த மார்க்சியம்
என்னும் கோட்பாட்டை சுமார் பத்துவரிகளுக்குள் நமக்கு லெனின் தொகுத்தளித்திருக்கிறார்.
மார்க்சியம், தற்காலச் சமுதாயத்தின்
மிகவும் முனனேறிய வர்க்கத்துககு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்குமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச்
சுட்டிக்காட்டுவதும்,
தற்போதுள்ள அமைப்பு, பொருளாதார வளர்ச்சி காரணமாய், தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு
அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிக்கிறது என்று லெனின் மிகச்சுருக்கமாக
கூயிருக்கிறார்.
இதனை விரித்து புரிந்து கொண்டால் மார்க்சியத்தின் உட்பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்ற துறைகளின்
முதன்மைத்துவமும்,
அதன் உட்பிணைப்பையும்
அறிந்து கொள்ளலாம்.
லெனின் கூறிவற்றில் தற்காலச் சமுதாயத்தின்
மிகவும் முனனேறிய வர்க்கத்துககு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்குமைக்க நேரடியாய் உதவுவ
வேண்டும் என்ற பகுதி விஞ்ஞான கம்யூனிசத்தையும்.
இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும் என்ற பகுதி அறிவொளி
ஊட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் தத்துவக் கண்ணோட்டத்தின் கடமையையும்,
தற்போதுள்ள அமைப்பு,
பொருளாதார வளர்ச்சி
காரணமாய்,
தவிர்க்க முடியாதபடி
வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிக்கிறது என்ற பகுதி
தத்துவம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியற்றின் தோற்றத்துக்கு அடித்தளமான பொருளாயத பின்புலத்தை அறிவுறுத்தும் அரசியல் பொருளாதாரத்தின் போக்கையும்
நமக்கு லெனின் வகுத்து, தொகுத்து, சுருக்கி தந்துள்ளார்.
மார்க்சியத்தின்
இந்த மூன்று தோற்றுவாய்களும் அதன் உள்ளடக்கக் கூறுகளையும் புரிந்து கொண்டால் மார்க்சியத்தின்
அடிப்படைகளை அறிந்துகொள்ள ஏதுவாய் இருக்கும்.
இந்த
மூன்று கோட்பாடுகளும் மூன்று நாடுகளில் தோன்றின.
ஜெர்மனியில் செம்மை ஜெர்மன் தத்துவம், இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம், பிரான்சில் பிரெஞ்சு சோஷலிம்.
இந்த மூன்று கோட்பாடுகளையும் மார்க்ஸ் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றை முழுநிறைவடையச் சொய்தார்.
No comments:
Post a Comment