Thursday, 25 August 2022

உற்பத்தி முறைக்கும் உற்பத்தி சாதனங்களின் தனிவுடைமைக்கும் உள்ள இயக்கவியல் உறவைப் புரிந்து கொள்ள முடியாத புதிய பாதையினர்

 

உற்பத்தி முறைக்கும் உற்பத்தி சாதனங்களின் தனிவுடைமைக்கும் உள்ள இயக்கவியல் உறவைப் புரிந்த கொள்ள முடியாத புதிய பாதையினர், சோஷலிச திட்மிட்ட பொருளாதாரத்தை நவீன ஏகாதிபத்தியம் தன்வயப்படுத்திவிட்டதாக புருடா விடுகிறார்கள். அப்படி எல்லாம் தன்வயப்படுத்த முடியாது என்கிற மார்க்சிய அடிப்படைப் புரிதல் இல்லாமல் உளறிக் கொட்டுகிறார்கள்.

உற்பத்தியாளர்கள் உற்பத்தி சாதனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை, மாறாக உற்பத்தி சாதனங்கள் உற்பத்தியாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன அடிபணிய செய்கின்றன என்று எங்கெல்ஸ் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறியுள்ளார். இதுவே விஞ்ஞான வழிமுறை.

உற்பத்தி சாதனங்கள் உற்பத்தியாளர்களை அடிபணியச் செய்கிறது என்கிற மார்க்சிய அடிப்படை புரிதல் புதிய பாதையினரிடம் இல்லை. அதனால் ஏகாதிபத்திய தலைமை, திட்டமிட்ட பொருளாதார சோஷலிச முறையை தன்வயப்படுத்திக் கொண்டது என்று விஞ்ஞான வழியற்ற அகநிலை முடிவாக முன்வைக்கின்றனர். அதாவது எங்கெல்ஸ் கூறியதற்கு மாறாக உற்பத்தி சாதனங்கள் மீது உற்பத்தியாளார்கள் ஆதிக்கம் செலுத்துவதாக புருடாவிடுகிறார்கள். இந்த கருத்துமுதல்வாதச் சிந்தனை மார்க்சியத்துக்கு எதிரானது. ஆனால் இதைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய அடிப்படைப் புரிதல் புதிய பாதையினரிடம் இல்லை. இல்லாததை எதிர் பார்க்க முடியாது.

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

எங்கெல்ஸ்:-

“உற்பத்தி தானாகவே வளர்ச்சியடைந்துள்ள ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் -நமது நிகழ்கால சமூகம் இந்த மாதிரியானதே- இருக்கும் நிலைமையில் உற்பத்தியாளர்கள் உற்பத்தி சாதனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை, மாறாக உற்பத்தி சாதனங்கள் உற்பத்தியாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய சமுதாய அமைப்பில் உற்பத்தியின் ஒவ்வொரு புதிய நெம்புகோலும் உற்பத்தி சாதனங்களிடம் உற்பத்தியாளர்களை ஆட்படுத்தும் (subjection-அடிபணித்தும்) புதிய வழி முறைகளாகத் தவிர்க்க முடியாதபடி உருமாற்றப்படுகிறது.”

(டூரிங்குக்கு மறுப்பு)

In every society in which production has developed spontaneously – and our present society is of this type – the situation is not that the producers control the means of production, but that the means of production control the producers. In such a society each new lever of production is necessarily transformed into a new means for the subjection of the producers to the means of production. This is most of all true of that lever of production which, prior to the introduction of modern industry, was by far the most powerful – the division of labour.

No comments:

Post a Comment