பொதுவாகவே,
சமுதாயத்தின் அறிவாற்றல் துறை ஆளும் வர்க்கத்தின் கருத்து நிலையின் (ideology)
ஆதிக்கத்துக்குட் பட்டிருக்கிறது:
“ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஒவ்வொரு சகாப்தத்திலும்
ஆளும் கருத்துகளாகவும் இருக்கின்றன. அதாவது, சமுதாயத்தில் பொருள்வகையில் எந்த
வர்க்கம் ஆளும் சக்தியாக உள்ளதோ, அதே வர்க்கம்தான் அதே சமயம் அறிவாற்றல் துறையில்
ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள்வகை உற்பத்திச் சாதனங்களைத் தன் கைவசம்
வைத் திருக்கும் வர்க்கமே, அக்காரணத்தாலேயே, பொதுவாகச் சொல்லப்போனால் சிந்தனைப்
படைப்புச் சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இதனால்
சிந்தனைப் படைப்புச் சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்துகள் ஆளும் வர்க்கத்திற்குக்
கட்டுப்பட்டவையா கின்றன. ஆளும் கருத்துகள் என்பன உண்மையில் ஆதிக்கம் செலுத்தும்
பொருள்வகை உறவுகளின் கருத்து வெளிப்பாடே யன்றி வேறல்ல” (GI 60.)
ஆயினும்,
புரட்சிக் காலகட்டங்களில், பழைய சமுதாயத் தின் கட்டுமானம் சிதையத் தொடங்குகையில்,
ஆளும் வர்க்கத்தி லுள்ள ஒரு பிரிவு அதிலிருந்து பிரிந்து வெளியேறிப் புரட்சி
வர்க்கத்துடன் சேர்ந்துகொள்கிறது:
“வர்க்கப் போராட்டம் தனது இறுதியான, தீர்மானகரமான நேரத்தை
நெருங்கி வருகையில், ஆளும் வர்க்கத்திற் குள்ளேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும்
சிதைவு இயக்கம் - உண்மையில் சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழு வதிலும்
நடைபெற்றுவரும் சிதைவு இயக்கம் - ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பிரிவு
தன்னை அதிலிருந்து துண்டித்துக் கொண்டு வெளியேறி புரட்சிகர வர்க்கத்துடன்,
எதிர்காலத்தைத் தனது கைகளில் வைத்துள்ள வர்க்கத்திடம் சேர்ந்துகொள்ளும் அளவுக்குக்
கட்டுமீறியதாகவும் கண்ணை உறுத்துவதாகவும் அமைகிறது. எனவே, இதற்கு முந்திய
காலகட்டத்தில் பிரபுக்குலத்தினரில் ஒரு பகுதியினர் பூர்ஷ்வா வர்க்கத்துடன்
சேர்ந்து கொண்டதைப் போல், இப்போது பூர்ஷ்வா வர்க்கத்தின் ஒரு பகுதியினர் -
குறிப்பாக பூர்ஷ்வா வர்க்க கருத்துநிலைவாதிகளில் ஒரு பகுதியினர் - பாட்டாளி
வர்க்கத்திடம் போகின்றனர். இப்பகுதியினர் வரலாற்று இயக்கம் முழுவதையும் கோட்பாட்டு
ரீதியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர் களாவர்.” (ME
1.1 17, cf. LCW 5.375.)
இத்தகைய
அறிவாளிகள் முதலாளி வர்க்கத்திடம் தாம் கொண்டிருந்த பற்றுறுதியை இப்போது
பாட்டாளிவர்க்கத்தின் மீது வைக்கத் தொடங்குகின்றனர். ஏனெனில், முதலாளியச் சமுதாயத்
தின் வரலாற்றுச் சாதனைகள் ஒருபுறமிருப்பினும், அச்சமுதாயம் அறிவுக்கு மாறானது,
ஒழுக்கக்கேடானது என்பதை அவர்கள் தம் அனுபவத்திலிருந்தே அறிந்துகொள்வதுதான்.
(மனித சாரம் - IX
அறிவாளிகளும் பாட்டாளிவர்க்கமும்
தமிழில்-எஸ்.வி.ராஜதுரை)
No comments:
Post a Comment