தனியுடைமையின் தோற்றம். பூர்விகக் கூட்டு வாழ்க்கை
அமைப்பு தகர்ந்ததன் பிரதான விளைவாக உற்பத்திச் சாதனங்களில் தனியுடைமை தோன்றி நிலைபெற்றது.
தனியுடைமை நிலவிய கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் வெவ்வேறு நோக்குகளிலிருந்து அது விமர்சிக்கப்பட்டிருக்
கிறது, கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சிக் காலத்து மனிதாபிமானிகள் அதை விமர்சித்தார்கள்,
18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கற்பனாவாத கம்யூனிஸ்டுகள் அதை நிராகரித்தார்கள், 19ஆம்
நூற்றாண்டின் தொடக் கத்தைச் சேர்ந்த கற்பனாவாத சோஷலிஸ்டுகள் அதை விமர்சன ரீதியில் பகுப்பாய்வு
செய்தார்கள்.
தனியுடைமை என்பது உண்மையில் என்ன என்ற கேள்விக்கு
விடை காண்பதற்கு முற்போக்கான சிந்தனை யாளர்கள் அடிமை உடைமைச் சமூகத்தின் காலத் திலிருந்து
இடைவிடாமல் முயற்சி செய்தார்கள். அது வர லாற்று ரீதியில் தற்செயலாக ஏற்பட்டு விட்டது,
அது மனிதனுடைய இயல்புடனும் அறிவுடனும் பொருந்தாத திரிபு என்று சிலர் கருதினார்கள்;
அது திருடுதல், யுத்தத்தில் அடிக்கப்பட்ட கொள்ளையின் விளைவு என்று வேறு சிலர் கூறினார்கள்;
நிலத்தில் வேலி அமைத்து, இது என்னு டைய நிலம், எனக்கு மட்டுமே இது உரிமை என்று கூறிய
வர்களுடைய சூழ்ச்சியின் விளைவு என்று இன்னும் சிலர் கூறினார்கள். சில தத்துவஞானிகள்
தனியுடைமையை நிராகரித்தார்கள்; உடைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும், அது நியாயமான முறையில்
பங்கீடு செய்யப்பட்ட வேண்டும் என்று வேறு சிலர் கோரினார்கள், தனியுடைமை உள் ளார்ந்த,
புனிதமான மனித உரிமை என்று பலவிதமான வாதங்களின் மூலம் நியாயப்படுத்துவதற்கும் அதைப்
பாது காப்பதற்கும் முயல்பவர்களும் இருந்தார்கள். ஆனால் மார்க் சிய-லெனினியத்தால் மட்டுமே
தனியுடைமை என்னும் மர்மத்தை விளக்க முடிந்தது.
பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு மற்றும் அதன்
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி யின் தர்க்க ரீதியான, தவிர்க்க முடியாத விளைவாகத் தனி
யுடைமை தோன்றியது. இயற்கைச் சக்திகளை எதிர்த்துச் சமாளிப்பதற்கு, உயிர்பிழைத்திருப்பதற்கு,
உணவு சேகரிப்பதற்கு, பிற்பாடு பிழைப்புச் சாதனங்களை (உணவு, உடை, குடியிருப்பு) உற்பத்தி
செய்வதற்கான அவசியம் கல், எலும்பு, மரம், உலோகத்தைக் கொண்டு கருவிகளைச் செய்வ தில்
இன்னும் முற்போக்கான முறைகளைக் கண்டு பிடிக்குமாறு பூர்விக மனிதனைத் தூண்டியது. கால்நடை
களை வளர்த்த இனக்குழுக்கள் நிலத்தை உழுது பயிரிட்ட இனக்குழுக்களிலிருந்து பிரிந்தன.
கால ஓட்டத்தில் பல் வேறு தொழில்கள் உருவாயின. பரிவர்த்தனை வளர்ச்சி யடைந்து பணம் உருவெடுத்த
பொழுது அதிகமாகப் பணம்) வைத்திருந்தவர்களின் பொருளாதார செல்வாக்கு அதி கரித்தது, கால்நடை
வளர்ப்பினாலும் புதிய உழைப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் 19ழைப்பினை உற்பத்தித்
திறன் தீவிரமாக அதிகரித்ததன் விளைவாக உபரி உற்பத்திப் பொருள் ஏற்பட்டது; அது படிப்படியாக
செல் வத்தைத் திரட்டுகின்ற தோற்றுவாயாக மாறியது.
இந்த வளர்ச்சிகள் குல் உறுப்பினர்களுக்கு இடையில்
உடைடைய வேறுபாடுகளைத் தோற்றுவித்தன. புதிய நிலை மைகளின் விளைவாக தனிக் குடும்பம் கூட்டுச்
சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை; ஏனென்றால் இப் பொழுது குடும்பம் தனித்து
வாழ முடியும். கால்நடை வளர்ப்பு, இரும்பு தயாரித்தல், உலோக வேலை, நெசவு, தானிய விவசாயம்
ஆகியவை கூட்டுச் சமூகத்தை விட்டு வெளியேறுவதற்கும் குலத்துக்குச் சொந்தமான கால்நடை
மற்றும் கருவிகளில் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்கும் பொருளாயதத் தூண்டுதலாக இருந்தன.
ஆக, குலத்துக்குச் சொந்தமான கால்நடையின் ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அல்லது
இன்னும் துல்லியமாகச் சொல்வ தென்றால் குடும்பத் தலைவன் என்ற முறையில் கணவனின் உடைமையாக
மாறியது. கால்நடை மந்தை மட்டு மன்றி குடும்பத்தின் உறுப்பினர்களும் கணவனின் தனி அதிகாரத்தின்
கீழ் வந்தனர். தந்தைவழிக் குடும்பத்தில் அடிமைகளும் இருந்தார்கள் (யுத்தக் கைதிகள்
கொல்லப் படவில்லை, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் உபரிப் பொருளை
உற்பத்தி செய்ய முடியும்). அக்குடும்பம் குடும்பத் தலைவன் என்ற முறையில் தகப்பனாருடைய
தனி அதிகாரத்தைப் பிரதிபலித்தது.
தந்தைவழி உரிமை நிறுவப்பட்டு குழந்தைகள் பரம் பரை
வழியாகச் சொத்தைப் பெற முடிந்தது. குடும்பத் துக்குள் செல்வக் குவிப்புக்குச் சாதகமாக
அமைந்தது, குலத்துக்கு எதிராக குடும்பத்தைப் பலப்படுத்தியது. மாறும் காலகட்டத்தில்
கூட்டுச் சமூகம் மேய்ச்சல் நிலம், எல்லா தரிசு நிலம், கருவிகளில் சிலவற்றை இன்னும்
உடைமையாக வைத்திருந்தது. அவை படிப்படியாகத் தமனியுடைமையாக மாறின அல்லது குடும்ப சமூகங்
களுக்கு இடையில் அவ்வப்பொழுது மறுவினியோகம் செய்யப்பட்டன.
ஆக, தனியுடைமையின் தோற்றம் பொருளாதாரத் துறையில்,
குலமரபு அமைப்பின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் அமைந்திருப்பது தெரிய வரும்.
அதன் தோற் ரத்தின் விளைவாக மனிதனை மனிதன் சுரண்டுவது எற்பட்டு, அது தன் பங்கிற்கு முரணியல்பான
சமூக-பொரு ளாதார அமைப்புகளைத் தோற்றுவித்தது.
அது முதல், வரலாற்றுப் போக்கில் ஒன்றுக்கு பதில்
மற்றொன்றாகத் தோன்றிய தனியுடைமையின் மூன்று வடிவங்களின் அடிப்படையில் அமைந்த வர்க்கப்
(பகை முரணியல்பான சமூக-பொருளாதார அமைப்புகளின் (அடி மை உடைமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ
அமைப்பு களின்) வரலாறு தொடங்கியது, ஆனால் முதலாளித் துவத்திற்குள்ளாகவே தனியுடைமையை
ஒழிப்பதற்கான நிலைமைகள் தோன்றி வளர்ச்சியடைகின்றன.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ
1987)
No comments:
Post a Comment