அரசின் தோற்றம். தனியுடைமை ஒரு 10க்கட் குழு மற்
றொரு மக்கட் குழுவைச் சுரண்டுவதற்கும் பூர்விக சமூகம் அடிமைகள் வர்க்கம், அடிமை உடைமையாளர்கள்
வர்க்கம் என்று பிரிவதற்கும் இட்டுச் சென்றது. இந்த சமூக-பொரு ளாதார மாற்றங்களின் தவிர்க்க
முடியாத விளைவாகத் தான் அரசு உருப்பெற்றது.
சமூக உறவுகளின் இயல்பு தீவிரமாக மாற்றமடைந்தது.
சுட்டுச் சமூக உடைமையையும் கூட்டுச் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரமான், சம உரிமைகளைக்
கொண்ட உறுப்பினர் களின் கூட்டு உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட பூர் விகக் குலமரபு
உறவுகள் தனியுடைமை) உறவுகளினால் அழிக்கப்பட்டன; அடிமைகள் அடிமை உடைமையாளர் களால் சுரண்டப்பட்டார்கள்.
பூர்விகப் பொதுவுடைமை சமூ. கங்களின் குல் அமைப்பு, வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சுரண்டல்
உறவுகளுடன் பொருந்தவில்லை.
தனியுடைமையும் பரிவர்த்தனையும் தோன்றிய பொ ழுது
இரத்த உறவுப் பிணைப்புகளின் முந்திய முக்கியத் துவம் மறைந்தது. பொருளாயத உற்பத்தியின்
வளர்ச்சியி னால் பல்வேறு குலங்களின் பிரதிநிதிகள் ஒரு குறிப்பிட்ட தொழிலின் (கால்நடை
வளர்ப்பு, உழவுத் தொழில், கைத் திறன் தொழில்கள், வர்த்தகம், இதாவை) சுற்றுவட்டத் திற்குள்
நெருங்கிய தொடர்பு கொள்ளத் தொடங்கினார் கள். மற்ற கூட்டு சமூகங்களிலிருந்து வந்த புதியவர்கள்
குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள குலத்தின் ஆட்சி உறுப்பு களுக்கு அடிபணிய மறுத்தார்கள்.
ஆகவே முன்பு எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வட் டாரத்தில்
வசிக்கின்ற மக்களுடைய சமூக விவகாரங்களை நிர்வகிப்பதற்குப் புதிய உறுப்புகளை நிறுவ வேண்டிய
அவசியம் தோன்றியது; கூட்டிணைக்கும் குலக் கோட்பாடு மறைந்து பிரதேசக் கோட்பாடு பிறந்தது.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வெவ்வேறு குலங்களைச்
சேர்ந்த மக்கள் மட்டுமன்றி, வெவ்வேறு சமூக அந்தஸ்தை (செல்வர் மற்றும் எழை) கொண்ட மக்களும்
வசிக்கத் தொடங்கினார்கள். குலத்தின் மேற்குடியினர் பல்வேறு முறைகளின் மூலம் (யுத்தத்தில்
கொள்ளையடித்தல், கூட்டுச் சமூக நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப் பற்றுதல்,
எழ்மையடைந்த உறவினர்களைச் சுரண்டுதல், இதரவை) தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொண்
டார்கள். அவர்கள் கூட்டுச் சமூகத்தில் விசேஷமான நிலை மயை வகிக்கின்ற பொழுது அதன் நிர்வாக
உறுப்புகளை (பேரவைக் கூட்டம், மூத்தோர் கவுன்சில், இதரவை) செல் வர்களுடைய நலன்களுக்கு
உதவுகின்ற முறையில் தகவ மைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். சமூகம் வர்க் கங்களாகப் பிளவுபட்ட
பொழுது அடிமை உடைமையாளர் கள் என்னும் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த வர்க் கம் தன்னுடைய
சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசைத் தோற்றுவித்தது.
அரசு என்பது சமூகத்தின் அரசியல் அமைப்பு, பொரு ளாதார
ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் ஆட்சி உறுப்பு ஆகும். சுரண்டல் அரசு பின்வரும்
இரண்டு அம் சங்களில் குல் அமைப்பிலிருந்து வேறுபடுகிறது: மக்கள் பிரதேசக் கோட்பாட்டில்
பிளவுபடுகிறார்கள்; அரசு ஆட்சி யதிகாரம் மக்களிடமிருந்து பிரிந்து அவர்களின் மேல் நிற்கிறது.
தண்டனை உறுப்புகள், இராணுவம், போலீஸ் ஆகியவை இப்படிப்பட்ட அரசின் முக்கிய ஆட்சிக் கருவி
களாகும். இவை சுரண்டல் வர்க்கங்களையும், அவற்றின் நலன்களையும் செல்வங்களையும் பாதுகாக்கின்றன.
மனித வரலாற்றில் அடிமையுடைமை, நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ அரசுகள் சுரண்டல்
அரசு வடிவங்கள் ஆகும்.
சோஷலிச அரசு முதலில் தொழிலாளி வர்க்கம் மற்றும்
அதன் கூட்டாளிகளாக இருந்த, நகரங்களையும் கிராமங் களையும் சேர்ந்த இதா உழைக்கும் மக்களின்
அரசாக இருக்கிறது. சோஷலிசத்தை - நிர்மாணிக்கின்ற பொழுது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார
அரசு அனைத்து மக்களின் அரசாக வளர்ச்சி அடைகிறது. சோஷ லிசம் மேலும் அபிவிருத்தி அடைகின்ற
பொழுது அத னிடத்தில் கம்யூனிச சுய நிர்வாக முறை ஏற்படுகிறது.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ
1987)
No comments:
Post a Comment