Saturday, 15 June 2019

7) சோஷலிசமும் கம்யூனிசமும்


கம்யூனிச சமூக அமைப்பு சோஷலிசம், கம்யூனிசம் என்னும் இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டோம். அவற்றுக்குச் சில அம்சங்கள் பொதுவாக இருக்கின்றன; ஏனென்றால் அவை ஒரே சமூக அமைப்பின் இரண்டு கட் டங்கள். அதே சமயத்தில் பல முக்கியமான வேறு பாடுகளும் இருக்கின்றன, எனென்றால் அவை அதன் வளர்ச்சியின் கீழ்நிலை, உயர்நிலை மட்டங்களைப் பிரதி நிதித்துவம் செய்கின்றன.

சோஷலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் பொதுவான அம்சங்கள் பின்வருவன;

- இரண்டு கட்டங்களிலும் பொருளாயத மதிப்புகளின் உற்பத்தி முறை உற்பத்திச் சாதனங்களின் மீதான பொது உடைமையை (Iயும் சுரண்டலிலிருந்து விடுதலையடைந்த உழைக்கும் மக்களுக்கு இடையில் நட்புறவான ஒத்து மறைப்பு, பரஸ்பர உதவி உறவுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது;

- சுரண்டும் வர்க்கங்கள் இல்லை, மனிதனை மனிதன் சுரண்டுவது இல்லை , சமூக, இன அல்லது தேசிய இன ஒடுக்குமுறையின் எந்த வடிவமும் இல்லை ;

-சமூக உற்பத்தி உழைக்கும் மக்களுடைய நலமள் களுக்கு உட்பட்டிருக்கிறது, அவர்களுடைய வளர்கன்று பொருளாயத, கலாசார தேவைகளைப் பூர்த்தி செய்ய கிறது, அவர்களுடைய ஆற்றலையும் திறமைகளையும் வளர்க்கிறது. உழைக்கும் மக்கள் விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் முன்னேற்றத்தின் அடிப்படையில் சமூக உற்பத்தியைத் தொடர்ச்சியாக வளர்த்துக் கொள் வதன் மூலம் இதை சாதிக்கிறார்கள்;

- எல்லோரும் திறமைக்குத் தக்கபடி உழைக்கிறார்கள், இது பிறரை உறிஞ்சி வாழ்வதையும் பண வேட்டையையும் ஒழிக்கிறது. ஒரு நபருடைய உணர்வு பூர்வமான, நேர்மை யான உழைப்பு சமூகத்தில் அவருடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஒரே அளவுகோலாக இருக்கிறது;

- சமூக உற்பத்தி, சமூக வாழ்க்கை யின் எல்லாத் துறைகளும் திட்டமிட்ட முறையில் வளர்ச்சி யடைகின்றன;

- உழைக்கும் மக்கள் அரசு மற்றும் சமூக விவகாரங் களை நிர்வகிப்பதில் பரந்த அளவில் பங்கெடுக்கிறார்கள்;
- ஒருங்கிணைந்த சமூக அமைப்பில் பகையியல் முரண் பாடுகள், சண்டைகளுக்கு இடமில்லை;

- சமூகத்தின் ஆன்மிக வாழ்க்கை விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது;

- சமூக முன்னேற்றம் தளக்குவிக்கப்படுகிறது; மக் களினங்களுக்கு மத்தியில் சமாதானமும் நட்புறவும் தொ டர்ச்சியாக உறுதிப்படுத்தப்படுகின்றன.

இப்பொது அம்சங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தமக்கே உரிய குண ரீதியான தனித் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. அத்துடன், ஒவ்வொரு கட்டமும் தனக்கே உரிய தனியான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

சோஷலிசத்தில் பின்வரும் குணாம்சங்களைக் காண முடியும்:

- சோஷலிச உடைமையின் இரண்டு ஆதார வடிவங்கள் சோஷலிசப் பொருளாதார அமைப்புக்கு அடிப்படையாக இருக்கின்றன: அரசு (பொதுமக்கள்) உடைமை மற்றும் கூட்டுபண்ணை -கூட்டுறவு உடைமை;

- சோஷலிசத்தின் பொருளாய்த-தொழில்நுட்ப அடிப் படை உற்பத்திச் சக்திகளை மிகவும் உயர்ந்த அளவுக்கு வளர்க்க உதவுவதால் “ஒவ்வொருவரிடமிருந்தும் அவரு டைய திறமைக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய உழைப்புக்கு எற்ப'' என்னும் சோஷலிச சமூகத்தின் அடிப் படையான கோட்பாட்டை நிறைவேற்ற முடிகிறது;

- சோஷலிசத்தின் கீழ் பண்ட உற்பத்தியும் பண உறவு களும் இன்னும்) இருக்கின்றன;

- தொழிலாளி வர்க்கம், கூட்டுறவுமயமாக்கப்பட்ட விவ சாயிகள் என்னும் இரண்டு நேச வர்க்கங்களும் அறிவுப் பகுதி என்னும் சமூக அடுக்கும் இருக்கின்றன. இவர்களு டைய பிரிக்க முடியாத ஒற்றுமை சமூக அடிப்படையாக இருக்கிறது;

- சமூகத்தின் அரசியல் அமைப்பின் அடிப்படையான உறுப்புகள் பின்வருவன: அரசு, சமூகத்தின் வழிகாட்டு கின்ற, இயக்குகின்ற சக்தியான மார்க்சிய-லெனினியக் கட்சி, வெகுஜன ஸ்தாபனங்கள், உழைப்புக் கூட்டுகள்,

- மக்களுடைய சமூக உணர்வில் மார்க்சிய-லெனினிய சித்தாந்தம் மேலோங்கியிருத்தல், சோஷலிசக் கலாசாரம், மக்கள் கம்யூனிச நெறியில் பயிற்றுவிக்கப்படுதல், புதிய மனிதன் உருவாக்கம்;

- நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் அறிவு உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையிலும் முக்கிய மான வேறுபாடுகள் இன்னும் இருக்கின்றன;

- சோஷலிசம் இன்னும் முழுமையான சமூக சாத் துவத்தை ஏற்படுத்தவில்லை, குடும்பங்களுக்கு இடையில் உடைமை வேறுபாடு இன்னும் ஓரளவுக்கு இருக்கிறது;

- சமூகத்திலிருந்து முதலாளித்துவ எச்சங்கள் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை, தனியுடைமை மனோபாவம் மக்களுடைய மனங்களிலிருந்தும் நடத் தையிலிருந்தும் முழுமையாக அகற்றப்படவில்லை.

கம்யூனிச சமூகத்தில் பின்வரும் குணாம்சங்களைக் காண முடியும்;

- கம்யூனிச உற்பத்தி முறையில் உற்பத்திச் சாதனங் களின் ஒற்றை உடைமை வடிவம், அதாவது பொதுமக்கள் உடைமை இருக்கும்;

- சமூகம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைகின்ற பொழுது ''ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய திற மைக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைக்கு எற்ப' என்னும் மகத்தான கோட்பாட்டை நிறைவேற்ற முடியும்;

- மக்கள் கம்யூனிச உழைப்பில் ஈடுபடுவார்கள், அவர் கள் கூலி பெற மாட்டார்கள்; அவர்கள் சமூகத்தின் முன் னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும், ஒவ்வொருவருடைய திறமையையும் அதிகமான அளவில் மக்களுக்குப் பயன் படுத்த வேண்டும் என்ற உணர்ச்சியினால் தூண்டப்படுவார் கள், உழைப்பு அவர்களுடைய ஜீவாதாரமான தேவை யாகும்;

- சமூகத்தில் வர்க்கங்கள் மறைந்து விடுவதனால் எல் லா உறுப்பினர்களுக்கு இடையிலும் முழுமையான சமூக சமத்துவம் இருக்கும்;

- (மக்கள் சுய நிர்வாகம் என்பது சுதந்திரமான, சமூக உணர்வுடைய. உழைக்கும் மக்களை சமூகத்தின் எல்லா விவகாரங்களையும் நிர்வாகம் செய்வதில் ஈடுபடுத்துவதைக் குறிக்கும்;

- மக்கள் நலம் மற்றும் மக்களின் சர்வாம்ச, ஒத் திசைவான வளர்ச்சி கம்யூனிச சமூக வளர்ச்சியின் குறிக் கோளாக இருக்கும்.

ஆக, முழுமையான கம்யூனிச அமைப்பில் சோஷலிசத் துக்கும் கம்யூனிசத்துக்கும் பொதுவான கூறுகள் மேலும் (முதிர்ச்சி அடையும். அதே சமயத்தில் சோஷலிச சமூகத் துக்கு மட்டுமே உள்ளுறையான சில அம்சங்கள் கம்யூனிச சமூகத்தை நிர்மாணிக்கின்ற பொழுது இயற்கையாகவே மறைந்து விடும். முடிவில், அரசு மற்றும் கூட்டுறவு என் னும் இரண்டு உடைமை) வடிவங்களுக்கு பதிலாக எல்லா மக்களுக்கும் சொந்தமான ஒற்றை உடைமை அமைக்கப். படும். பண்ட-பண உறவுகள் இனிமேல் இல்லை . சமூகத்தில் வர்க்கங்கள் இல்லை, நகரத்துக்கும் கிராமத்துக்கும், அறிவு உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுகள் மக்களிடையில் சமூக ஏற்றத்தாழ்வின் எச் சங்களுடன் மறைந்து விடும். மக்களுடைய சமூக உணர்வு, நடத்தை மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து கடந்த காலத்தின் தப்பெண்ணங்கள் முற்றிலும் மறைந்து விடும். கம்யூனிசம்) சர்வதேச அளவில் வெற்றியடை கின்ற பொழுது அரசு உலர்ந்து உதிரும்.

கம்யூனிச சமூகத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட வர்ணனை கம்யூனிசத்தைப் பற்றிய மார்க்சிய-லெனினியப் போதனையின் இன்றைய நிலைமையைப் பிரதிபலிக்கிறது - அதன் அடிப்படையான கட்டங்கள் பின்வருவன: அ)கம்யூனிச சமூக அமைப்பு, அதன் வளர்ச்சியைப் பற்றிய மார்க்ஸ், எங்கெல்சின் போதனை நிறுவப்பட்டு வளர்ச்சியடைதல்; ஆ)லெனின் புதிய முடிவுகள், கருத்துகளின் மூலம் இந்தப் பாரம்பரியத்தை வளர்த்து வளப்படுத்துதல்; இ)சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், மொத்த கம்யூனிஸ்ட் இயக்கம் கம்யூனிச சமூக அமைப்பைப் பற்றிய மார்க்சிய-லெனினியக் கருதுகோளுக்கு இன்று செய்துள்ள பங்களிப்பு. இதுதான் விஞ்ஞான கம்யூனிசத் தத்துவத்தின் குவிமுனை; ஏனென்றால் கம்யூ னிசத்துக்கு மாறுதலே நம் காலத்தில் மனித சமூகத்தின் வளர்ச்சிப் பாதையாகும்.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

6) பூர்விக கம்யூனிசமும் சமூக முன்னேற்றமும் - ஹா.சபிரொவ்


பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பைப் பற்றி இன்று அதிகமான அக்கறை தோன்றியிருக்கிறது. மனிதகுலத்தின் எறுமுக வளர்ச்சியில் இந்த அமைப்பின் வரலாற்று ரீதியான இடத்தை நிர்ணயிக்க வேண்டும், இந்த அமைப்பின் எச்சங் களைச் சரியாக மதிப்பிட வேண்டும் என்னும் விருப்பமே அதற்குக் காரணம். பல்வேறு காரணங்களினால் வரலாற்று வளர்ச்சியில் பின் தங்கி விட்ட சில மக்களினங்களில் இந்த எச்சங்களை இன்றும் காண முடியும்.

பூர்விக கம்யூனிசம் மனித சமூகத்தின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஆரம்பக் கட்டமாகும். அது மிகவும் பூர்விகமான நிலையில்) மக்கள் தனியுடைமை, சுரண்டல், வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம், அரசு ஆகியவை இல் லாமல் வசிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியது. பூர்விக கம்யூனிசம் சமூக உடைமை, சாட்டாண்மை , சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், இதர பல் கம்யூனிஸ்ட் மரபு களைத் தோற்றுவித்தது. அவை வரலாற்றுப் போக்கில் அழிந்து விடவில்லை ; புதிய, குண ரீதியான மட்டத்தில மெய்யான சோஷலிசத்தில் வெளிப்படுகின்றன.

முதலாளித்துவ சித்தாந்திகள் பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் சாராம்சத்தைத் திரிக்கிறார்கள். அவர்கள் அதன் கம்யூனிச அம்சங்களை, குறிப்பாக முக்கியமான அம்சமாகிய உற்பத்திச் சாதனங்களின் கூட்டுச் சமூக உடைமையை அலட்சியம் செய்கிறார்கள். உதிரியான தனிநபர்கள், தமக்குள் பரிவர்த்தனை உறவுகளை நிறுவிக் கொண்ட தனியுடைமையின் சொந்தக்காரர்கள் மனித சமூகத்தின் வரலாற்றைத் தொடங்கி வைத்தார்கள் என்று நிரூபிப பதற்கு அவர்கள் முயல்கிறார்கள். முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் எதைக் கூறிய போதிலும், வரலாற்று வளர்ச்சி பூர்விக கம்யூனிசத்தின் கூட்டுச் சமூக உடைமை யுடன் ஆரம்பமாயிற்று. அதன் பிறகு தனியுடைமை வடி வங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு சோஷலிச நாடுகளில் இன்று நிறுவப்பட்டுள்ள சமூக, சோஷலிச உடைமைக்கு வழி வகுத்தன்.

பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு கடந்த காலத்துக்கு பூட்டும் சொந்தமானதல்ல; அதன் எச்சங்கள் இன்று கூட லத்தீன் அமெரிக்காவின் தொலைவுப் பகுதிகளில் (உதா ரணமாக, பிரேஸில் நாட்டில்), ஆஸ்திரேலியாவில், சில பசிபிக் தீவுகளில், சில ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கின்றன. இயற்கைப் பொருளாதாரம், கூட்டுச் சமூக நிலவுடைமையின் எச்சங்கள், இனக்குழுப் பிரிவினைவாதம் (தனித்திருத்தல்), குலமரபு ஒருமைப்பாட்டின் எச்சங்கள், குலத் தலைவர்களின் பரம்பரை ஆட்சி ஆகியவை இந்த எச்சங்களில் அடங்கும். அவை மரபுவழிப்பட்ட கூட்டாண் மைடியையும் பரஸ்பர உதவியையும் கொண்டி ருக்கின்றன.

ஏகாதிபத்திய அரசுகள் தம்முடைய காலனிகளில் நில விய குலமரபு உறவுகளை செயற்கையாகப் பாதுகாத்தன; சார்பு நாடுகளின் மக்கள்தொகையில் பெரும்பான்மையின ரைத் தாங்கள் ஈவிரக்கமின்றிச் சுரண்டுவதை ஆதரிப்ப தற்குக் குலங்களின் மேற்குடியினர் குழுக்களை உபயோகப் படுத்திக் கொண்டன.

சில ஆப்பிரிக்க அரசுகளில் அறிஞர்களும் அரசியல் வாதிகளும் கூட்டுச் சமூகப் பொருளாதாரத்தின் அடிப்படையில் விவசாயத்தை மாற்றுவதற்கு இப்பொழுது முயன்று வருகிறார்கள். அவர்கள் கூட்டுச் சமூக சோ629)லிசத் தத் துவத்தை, அதாவது கூட்டு வாழ்க்கை அமைப்பின் எச் சங்களை உபயோகிப்பதன் மூலம் சோஷலிசத்துக்கு முன் னேறுவதைப் போதிக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் பய னற்றவை என்பதை எதார்த்தம் நிரூபித்து விட்டது. வர லாற்று ரீதியில் காலாவதியான மாதிரிகளை அடிப்படை யாகக் கொண்டு சோஷலிசத்தை நோக்கி முன்னேற முடி யாது. அது தவிர, கடிட்டு வாழ்க்கை அமைப்பின் எச்சங்கள் கடந்த காலத்தின் குறியடையாளமான கம்யூனிச அம்சங் களாக இல்லாதிருக்கின்றன. குலத்தலைவர்கள் தம்முடைய சுரண்டல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவற்றை உபயோகிப்பது வாடிக்கையாக இருக்கிறது.

அதே சமயத்தில் பின்தங்கிய நாடுகள் முதலாளித்துக் கட்டத்தைத் தவிர்த்து சோஷலிசத்துக்கு முன்னேறுகின்ற மாறும் கட்டத்தில் கூட்டுச் சமூக நிலவுடைமை, சுட்டு வேலைல்', பாஸ்பா உதவி, இதர மரபுகளை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். சோவியத் யூனியனின் வட கோடியிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள மக்களினங்களைப் பொறுத் தமட்டில் ஜாரிச காலத்திலிருந்து பெறப்பட்ட பூர்விகக் கூட்டு வாழ்க்கை உறவுகளின் எச்சங்களை உபயோகப்படுத்துவதில் பெற்றிருக்கின்ற அனுபவம் இதை நிரூபிக்கிறது. குலமரபு உறவுகளை சோஷலிச உறவுகளாக மாற்ற வேண்டு மென்றால் அவற்றைத் திறமையுடன் பயன்படுத்திக் கொள் வது அவசியம் என்பதை இந்த அனுபவம் சுட்டிக்காட்டு கிறது. மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியில் வெற்றியடைந்த ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் வட கோடி, மத்திய ஆசியாவைச் சேர்ந்த மக்களினங்கள் தம்முடைய பொரு ளாதாரங்களையும் கலாசாரத்தையும் வளர்க்கவும் பெண்களின் சமத்துவத்தை நிறுவவும் தேசிய பொருளாதார, அரசு, கட்சி ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும் உதவியது.

பின்தங்கிய மக்களினங்கள் சோஷலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கு குலமரபு உறவுகளைப் பயன்படுத்திய சோவியத் அனுபவம் சோஷலிசத் திசையமைவுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்ற, புதிதாகச் சுதந்திரம் பெற்ற அரசுகளுக்குப் பயன்படும்.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)


5) குலமரபு அமைப்பின் தகர்வும் அரசின் தோற்றமும் - ஹா.சபிரொவ்


அரசின் தோற்றம். தனியுடைமை ஒரு 10க்கட் குழு மற் றொரு மக்கட் குழுவைச் சுரண்டுவதற்கும் பூர்விக சமூகம் அடிமைகள் வர்க்கம், அடிமை உடைமையாளர்கள் வர்க்கம் என்று பிரிவதற்கும் இட்டுச் சென்றது. இந்த சமூக-பொரு ளாதார மாற்றங்களின் தவிர்க்க முடியாத விளைவாகத் தான் அரசு உருப்பெற்றது.

சமூக உறவுகளின் இயல்பு தீவிரமாக மாற்றமடைந்தது. சுட்டுச் சமூக உடைமையையும் கூட்டுச் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரமான், சம உரிமைகளைக் கொண்ட உறுப்பினர் களின் கூட்டு உழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட பூர் விகக் குலமரபு உறவுகள் தனியுடைமை) உறவுகளினால் அழிக்கப்பட்டன; அடிமைகள் அடிமை உடைமையாளர் களால் சுரண்டப்பட்டார்கள். பூர்விகப் பொதுவுடைமை சமூ. கங்களின் குல் அமைப்பு, வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சுரண்டல் உறவுகளுடன் பொருந்தவில்லை.

தனியுடைமையும் பரிவர்த்தனையும் தோன்றிய பொ ழுது இரத்த உறவுப் பிணைப்புகளின் முந்திய முக்கியத் துவம் மறைந்தது. பொருளாயத உற்பத்தியின் வளர்ச்சியி னால் பல்வேறு குலங்களின் பிரதிநிதிகள் ஒரு குறிப்பிட்ட தொழிலின் (கால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், கைத் திறன் தொழில்கள், வர்த்தகம், இதாவை) சுற்றுவட்டத் திற்குள் நெருங்கிய தொடர்பு கொள்ளத் தொடங்கினார் கள். மற்ற கூட்டு சமூகங்களிலிருந்து வந்த புதியவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள குலத்தின் ஆட்சி உறுப்பு களுக்கு அடிபணிய மறுத்தார்கள். ஆகவே முன்பு எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வட் டாரத்தில் வசிக்கின்ற மக்களுடைய சமூக விவகாரங்களை நிர்வகிப்பதற்குப் புதிய உறுப்புகளை நிறுவ வேண்டிய அவசியம் தோன்றியது; கூட்டிணைக்கும் குலக் கோட்பாடு மறைந்து பிரதேசக் கோட்பாடு பிறந்தது.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வெவ்வேறு குலங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி, வெவ்வேறு சமூக அந்தஸ்தை (செல்வர் மற்றும் எழை) கொண்ட மக்களும் வசிக்கத் தொடங்கினார்கள். குலத்தின் மேற்குடியினர் பல்வேறு முறைகளின் மூலம் (யுத்தத்தில் கொள்ளையடித்தல், கூட்டுச் சமூக நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப் பற்றுதல், எழ்மையடைந்த உறவினர்களைச் சுரண்டுதல், இதரவை) தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொண் டார்கள். அவர்கள் கூட்டுச் சமூகத்தில் விசேஷமான நிலை மயை வகிக்கின்ற பொழுது அதன் நிர்வாக உறுப்புகளை (பேரவைக் கூட்டம், மூத்தோர் கவுன்சில், இதரவை) செல் வர்களுடைய நலன்களுக்கு உதவுகின்ற முறையில் தகவ மைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். சமூகம் வர்க் கங்களாகப் பிளவுபட்ட பொழுது அடிமை உடைமையாளர் கள் என்னும் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த வர்க் கம் தன்னுடைய சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசைத் தோற்றுவித்தது.

அரசு என்பது சமூகத்தின் அரசியல் அமைப்பு, பொரு ளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் ஆட்சி உறுப்பு ஆகும். சுரண்டல் அரசு பின்வரும் இரண்டு அம் சங்களில் குல் அமைப்பிலிருந்து வேறுபடுகிறது: மக்கள் பிரதேசக் கோட்பாட்டில் பிளவுபடுகிறார்கள்; அரசு ஆட்சி யதிகாரம் மக்களிடமிருந்து பிரிந்து அவர்களின் மேல் நிற்கிறது. தண்டனை உறுப்புகள், இராணுவம், போலீஸ் ஆகியவை இப்படிப்பட்ட அரசின் முக்கிய ஆட்சிக் கருவி களாகும். இவை சுரண்டல் வர்க்கங்களையும், அவற்றின் நலன்களையும் செல்வங்களையும் பாதுகாக்கின்றன. மனித வரலாற்றில் அடிமையுடைமை, நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ அரசுகள் சுரண்டல் அரசு வடிவங்கள் ஆகும்.

சோஷலிச அரசு முதலில் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் கூட்டாளிகளாக இருந்த, நகரங்களையும் கிராமங் களையும் சேர்ந்த இதா உழைக்கும் மக்களின் அரசாக இருக்கிறது. சோஷலிசத்தை - நிர்மாணிக்கின்ற பொழுது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசு அனைத்து மக்களின் அரசாக வளர்ச்சி அடைகிறது. சோஷ லிசம் மேலும் அபிவிருத்தி அடைகின்ற பொழுது அத னிடத்தில் கம்யூனிச சுய நிர்வாக முறை ஏற்படுகிறது.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

4) குலமரபு அமைப்பின் தகர்வும் வர்க்கங்களின் தோற்றமும் - ஹா.சபிரொவ்


வர்க்கங்களின் தோற்றம். தனியுடைமை தோன்றியதைத் தொடர்ந்து பகை முரணியல்பான வர்க்கங்கள் தோன்றின. சுரண்டலைச் சித்தாந்த ரீதியில் ஆதரிப்பவர்கள் இந்தப் பிரச்சினையை விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் வர்க்கங்களும் வாக்கப் போராட்டமும் இருப்பதை மறுப்பதற்கு அல்லது அதன் உண்மையான சாராம்சத்தைத் திரித்துக் கூறு வதற்கு எண்ணற்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் லெனின் இந்த சமூக நிகழ்வுகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான தத்துவத்தைப் படைத்தார்கள்.

"வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக் கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக் கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிக பெரும்பாலும் இது சட்டத்தால் நிலை நிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப் பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத் தாலும், ஆகவே சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட் சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை. அவை சுவாதீனமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும். வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஓர் அமைப்பில் தாம் வகிக்கும் வெவ்வேறு இடங்களின் காரணமாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற் றிக் கொள்ள முடியும்படியான மக்கள் பகுதிகளாகும்'' என்று லெனின் எழுதினார். (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், | பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 9, மாஸ்கோ , முன்னேற்றப் பதிப்பகம், 1982, பக்கங்கள் 312-313.)

வர்க்கங்களின் தோற்றமும் அவற்றின் இடைச்செயலின் தன்மையும் வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி முறைகளில் பொதிந்திருக்கின்றன என்பது பெறப்படும். பூர்விக சமூகத்தின் உற்பத்தி முறை வர்க்கங்கள் தோன்று தலையும் சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என்னும் பிரிவினை சமூகத்தில் ஏற்படுவதையும் தவிர்த்தது. உற் பத்திச் சாதனங்களின் சமூக உடையை குலத்தின் உறுப்பி னர்கள் எல்லோரும் அவற்றின் பால் சம அளவான உறவு களைக் கொண்டிருப்பதை, அவர்கள் உழைப்பில் கட்டாயமாகப் பங்கெடுப்பதை, கூட்டு உழைப்பில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களும் வாழ்க்கைச் சாதனங்களும் சமமாக வினியோகம் செய்யப்படுவதை உத்தரவாதம் செய்தது. பூர் விக கம்யூனிசத்தில் வர்க்கங்களும் வர்க்க வேறுபாடுகளும் கிடையாது. அது வர்க்கமற்ற சமூகமாக இருந்தது.

பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்புக்குரிய உற்பத்தி முறை வளர்ச்சியடைந்த பொழுது தோன்றிய புதிய காரணி கள் குல அமைப்பின் தகர்வுக்கு, கூட்டுச் சமூக உடைமைக்கு பதிலாகத் தனியுடைமை தோன்றுவதற்கு, அடிமைகள், அடிமை உடைமையாளர்கள் என்னும் வர்க்கங்கள் தோன்று வதற்கு வழி வகுத்தன. யுத்தக் கைதிகள் மட்டுமன்றி குலத்தின் முந்திய உறுப்பினர்களும் கூட அடிமைகளாக் கப்பட்டார்கள்; கூட்டுச் சமூகங்களுக்குள் செல்வர்களும் ஏழை களும் தோன்றினார்கள், சமூக ரீதியில் ஓரினத் தன்மை கொண்ட குல அமைப்புக்கு பதிலாக அடிமைகள், அடிமை உடைமையாளர்கள், சுதந்திர விவசாயிகள், கைவினைஞர் கள், வர்த்தகர்கள் மற்றும் வட்டி வாங்குபவர்களைக் கொண்ட அடிமை உடைமைச் சமூகம் ஏற்பட்டது.

சமூகம் பகை முரணியல்பான வர்க்கங்களாக (சுரண்டப் படுபவர்கள் மற்றும் சுரண்டுபவர்கள்) பிரிந்ததும் தனியு டைமை தோன்றியதும் தர்க்க ரீதியான, தவிர்க்க முடியாத நிகழ்வுப் போக்குகள் ஆகும். அது முதல் வர்க்க சமூகங் களின் வரலாறு தொடங்கியது.

உற்பத்திச் சாதனங்களின் பால் சம உறவைக் கொண் டிருக்கின்ற உழைக்கும் மக்களை மட்டும் கொண்ட சமூகம் மறுபடியும் வர்க்கமற்றதாக மாறும். அந்த சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருக்கும். இது கம்யூனிசத்தின் சோஷலிசக் கட்டத்தின் முடிவு நிலை யில் நடைபெறும்.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

3) குலமரபு அமைப்பின் தகர்வும் தனியுடைமையின் தோற்றமும் - ஹா.சபிரொவ்


தனியுடைமையின் தோற்றம். பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு தகர்ந்ததன் பிரதான விளைவாக உற்பத்திச் சாதனங்களில் தனியுடைமை தோன்றி நிலைபெற்றது. தனியுடைமை நிலவிய கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் வெவ்வேறு நோக்குகளிலிருந்து அது விமர்சிக்கப்பட்டிருக் கிறது, கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சிக் காலத்து மனிதாபிமானிகள் அதை விமர்சித்தார்கள், 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கற்பனாவாத கம்யூனிஸ்டுகள் அதை நிராகரித்தார்கள், 19ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தைச் சேர்ந்த கற்பனாவாத சோஷலிஸ்டுகள் அதை விமர்சன ரீதியில் பகுப்பாய்வு செய்தார்கள்.

தனியுடைமை என்பது உண்மையில் என்ன என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முற்போக்கான சிந்தனை யாளர்கள் அடிமை உடைமைச் சமூகத்தின் காலத் திலிருந்து இடைவிடாமல் முயற்சி செய்தார்கள். அது வர லாற்று ரீதியில் தற்செயலாக ஏற்பட்டு விட்டது, அது மனிதனுடைய இயல்புடனும் அறிவுடனும் பொருந்தாத திரிபு என்று சிலர் கருதினார்கள்; அது திருடுதல், யுத்தத்தில் அடிக்கப்பட்ட கொள்ளையின் விளைவு என்று வேறு சிலர் கூறினார்கள்; நிலத்தில் வேலி அமைத்து, இது என்னு டைய நிலம், எனக்கு மட்டுமே இது உரிமை என்று கூறிய வர்களுடைய சூழ்ச்சியின் விளைவு என்று இன்னும் சிலர் கூறினார்கள். சில தத்துவஞானிகள் தனியுடைமையை நிராகரித்தார்கள்; உடைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும், அது நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட்ட வேண்டும் என்று வேறு சிலர் கோரினார்கள், தனியுடைமை உள் ளார்ந்த, புனிதமான மனித உரிமை என்று பலவிதமான வாதங்களின் மூலம் நியாயப்படுத்துவதற்கும் அதைப் பாது காப்பதற்கும் முயல்பவர்களும் இருந்தார்கள். ஆனால் மார்க் சிய-லெனினியத்தால் மட்டுமே தனியுடைமை என்னும் மர்மத்தை விளக்க முடிந்தது.

பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு மற்றும் அதன் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி யின் தர்க்க ரீதியான, தவிர்க்க முடியாத விளைவாகத் தனி யுடைமை தோன்றியது. இயற்கைச் சக்திகளை எதிர்த்துச் சமாளிப்பதற்கு, உயிர்பிழைத்திருப்பதற்கு, உணவு சேகரிப்பதற்கு, பிற்பாடு பிழைப்புச் சாதனங்களை (உணவு, உடை, குடியிருப்பு) உற்பத்தி செய்வதற்கான அவசியம் கல், எலும்பு, மரம், உலோகத்தைக் கொண்டு கருவிகளைச் செய்வ தில் இன்னும் முற்போக்கான முறைகளைக் கண்டு பிடிக்குமாறு பூர்விக மனிதனைத் தூண்டியது. கால்நடை களை வளர்த்த இனக்குழுக்கள் நிலத்தை உழுது பயிரிட்ட இனக்குழுக்களிலிருந்து பிரிந்தன. கால ஓட்டத்தில் பல் வேறு தொழில்கள் உருவாயின. பரிவர்த்தனை வளர்ச்சி யடைந்து பணம் உருவெடுத்த பொழுது அதிகமாகப் பணம்) வைத்திருந்தவர்களின் பொருளாதார செல்வாக்கு அதி கரித்தது, கால்நடை வளர்ப்பினாலும் புதிய உழைப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் 19ழைப்பினை உற்பத்தித் திறன் தீவிரமாக அதிகரித்ததன் விளைவாக உபரி உற்பத்திப் பொருள் ஏற்பட்டது; அது படிப்படியாக செல் வத்தைத் திரட்டுகின்ற தோற்றுவாயாக மாறியது.

இந்த வளர்ச்சிகள் குல் உறுப்பினர்களுக்கு இடையில் உடைடைய வேறுபாடுகளைத் தோற்றுவித்தன. புதிய நிலை மைகளின் விளைவாக தனிக் குடும்பம் கூட்டுச் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை; ஏனென்றால் இப் பொழுது குடும்பம் தனித்து வாழ முடியும். கால்நடை வளர்ப்பு, இரும்பு தயாரித்தல், உலோக வேலை, நெசவு, தானிய விவசாயம் ஆகியவை கூட்டுச் சமூகத்தை விட்டு வெளியேறுவதற்கும் குலத்துக்குச் சொந்தமான கால்நடை மற்றும் கருவிகளில் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்கும் பொருளாயதத் தூண்டுதலாக இருந்தன. ஆக, குலத்துக்குச் சொந்தமான கால்நடையின் ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வ தென்றால் குடும்பத் தலைவன் என்ற முறையில் கணவனின் உடைமையாக மாறியது. கால்நடை மந்தை மட்டு மன்றி குடும்பத்தின் உறுப்பினர்களும் கணவனின் தனி அதிகாரத்தின் கீழ் வந்தனர். தந்தைவழிக் குடும்பத்தில் அடிமைகளும் இருந்தார்கள் (யுத்தக் கைதிகள் கொல்லப் படவில்லை, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் உபரிப் பொருளை உற்பத்தி செய்ய முடியும்). அக்குடும்பம் குடும்பத் தலைவன் என்ற முறையில் தகப்பனாருடைய தனி அதிகாரத்தைப் பிரதிபலித்தது.

தந்தைவழி உரிமை நிறுவப்பட்டு குழந்தைகள் பரம் பரை வழியாகச் சொத்தைப் பெற முடிந்தது. குடும்பத் துக்குள் செல்வக் குவிப்புக்குச் சாதகமாக அமைந்தது, குலத்துக்கு எதிராக குடும்பத்தைப் பலப்படுத்தியது. மாறும் காலகட்டத்தில் கூட்டுச் சமூகம் மேய்ச்சல் நிலம், எல்லா தரிசு நிலம், கருவிகளில் சிலவற்றை இன்னும் உடைமையாக வைத்திருந்தது. அவை படிப்படியாகத் தமனியுடைமையாக மாறின அல்லது குடும்ப சமூகங் களுக்கு இடையில் அவ்வப்பொழுது மறுவினியோகம் செய்யப்பட்டன.

ஆக, தனியுடைமையின் தோற்றம் பொருளாதாரத் துறையில், குலமரபு அமைப்பின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் அமைந்திருப்பது தெரிய வரும். அதன் தோற் ரத்தின் விளைவாக மனிதனை மனிதன் சுரண்டுவது எற்பட்டு, அது தன் பங்கிற்கு முரணியல்பான சமூக-பொரு ளாதார அமைப்புகளைத் தோற்றுவித்தது.

அது முதல், வரலாற்றுப் போக்கில் ஒன்றுக்கு பதில் மற்றொன்றாகத் தோன்றிய தனியுடைமையின் மூன்று வடிவங்களின் அடிப்படையில் அமைந்த வர்க்கப் (பகை முரணியல்பான சமூக-பொருளாதார அமைப்புகளின் (அடி மை உடைமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்பு களின்) வரலாறு தொடங்கியது, ஆனால் முதலாளித் துவத்திற்குள்ளாகவே தனியுடைமையை ஒழிப்பதற்கான நிலைமைகள் தோன்றி வளர்ச்சியடைகின்றன.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

2) பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டு சமூகம் - ஹா.சபிரொவ்


பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டு சமூகம். பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் கம்யூனிச இயல்பு துல்லியமாக எப்படி வெளிப்பட்டது? பூர்விக சமூகத்தில் தனியுடைமை மற்றும் அதன் விளைவான மனிதனை மனிதன் சுரண்டல் இல்லை. பூர்விக மக்கள் தொடக்க காலத்தில், குறிப்பாக அவர்களுடைய சமூக வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் உபயோகித்த கருவிகள் மிகவும் குறை வான உற்பத்தித் திறனையே கொண்டிருந்தன. மக்களின் கூட்டு வேலைகளில் மட்டுமே அவற்றைத் திறமையுடன் பயன்படுத்த முடியும் (உதாரணமாக, குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடுதல், நிலத்தைக் கூட்டாக உழுதல், வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பிராணிகளைக் காட்டு மிருகங்களிட மிருந்து பாதுகாத்தல், இதரவை). கருவிகளின் தன்மையும் அவற்றின் கூட்டு உபயோகமும் தனியுடைமையை இய லாமற் செய்தன, பொது, கூட்டுச் சமூக உடைமையை பூர்.விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் பொருளாதார அடிப்ப மடையாகச் செய்தன.

பூர்விகக் கூட்டுச் சமூகங்களின் உற்பத்திச் சக்திகள் (பூர்விகமான கருவிகளை உபயோகப்படுத்துவது) சமூக இயல்பைக் கொண்டிருந்தன. அவை கூட்டு நடவடிக்கையின் மூலம் வளர்ச்சி அடைந்தன, உழைப்பின் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தன. உற்பத்தி ரீதியான மற றும் இதர சமூக உறவுகள் தனியார் இயல்பைக் கொண்டிருக்கவில்லை, கூட்டு இயல்பைக் கொண்டிருந்தன. பூர்விக மனிதன் தனியாக இருக்கும் பொழுது இயற்கைச் சக்தி கள் மற்றும் காட்டு மிருகங்களுக்கு முன்னால் பாதுகாப்பற் றவனாக இருந்தான். பூர்விக மக்களின் பலம் அவர்கள் டை எண்ணிக்கையில் இருந்தது. குழுக்களாக இருக்கும் பொழுது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு உயிர் பிழைக்க முடிந்தது, அதன் மூலம் குல் அமைப்பு மேலும் வளர்ச்சி அடைந்தது.

குல அமைப்பில் எல்லாப் பொருளாயத மதிப்புகளும் சம்மாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கூட்டுச் சமூகத்தின் ஒவ் வொரு உறுப்பினரும் தொடர்ந்து வாழத் தேவையான பொருட்கள் கூட்டாக உற்பத்தி செய்யப்பட்டன. பூர்விக. மான, குறைந்த உற்பத்தித் திறனைக் கொண்ட கருவிகள், உபரி உற்பத்திப் பொருட்கள் இல்லாமை, அற்பமான உழைப்புப் பிரிவினை ஆகிய காரணங்களினால் அவை சமமாக மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட முடியும்.

எங்கெல்ஸ் தன்னுடைய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் குலமரபு அமைப் பில் மனிதர்களின் வாழ்க்கைக்குரிய கம்யூனிச அம்சங் களை வர்ணித்தார்; இவ்வமைப்பு வெகுளித்தனமாக இருந் தாலும் அது அற்புதமானது என்று எழுதினார். இரா ணுவம், போலீஸ், நீதிபதிகள், சிறைகள், வீங்கிப் போன, சிக்கலான அரசாங்கப் பொறியமைவு ஆகியவற்றைத் தன் னகத்தே கொண்டிருக்கின்ற அரசு இந்த அமைப்புக்கு அவசியமல்ல; ஏனென்றால் பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டுச் சமூகங்களின் உறுப்பினர்கள் சுரண்டல், ஒடுக்கு முறை, செல்வர்கள் மற்றும் எழைகள், சலுகை உடையோர் மற்றும் எவ்விதச் சலுகையும் இல்லாதவர்கள், மேலதி காரம் ஆகிய கருதுகோள்களை அறியாதவர்கள். அங்கே அடிமைகள் இல்லை; எல்லோரும் சமமானவர்களாக, சுதந்திரமானவர்களாக இருந்தார்கள்.

பொதுவுடைமைக் கூட்டுச் சமூகம் நோயாளிகளையும் மதிய உறுப்பினர்களையும் பராமரித்தது. நிலம் இனக் குழுவின் பொது உடைமையாக இருந்தபடியால் சில குடும் பத்தினர் ஒன்றுசேர்ந்து உழைத்தனர். சிறு நிலங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே தனிப்பட்ட உடைமையாக இருந்தன.

குலத்தின் பேரவைக் கூட்டங்கள், மூத்தோர் கவுன்சில், சமமான உரிமைகளும் கடமைகளும், மொத்தமாக குலத் தின் மற்றும் தனித்தனியாக உறுப்பினர்களுடைய நலன் களைப் பாதுகாத்தல் ஆகியவை பூர்விக ஜனநாயகமாகும், எல்லோரும் கூட்டு சமூகத்தின் விவகாரங்களில் நேரடியாகப் பங்கெடுத்து முடிவு செய்வதற்கு அது 2 தவியது. கூட்டுச் சமூகத்தின் உறுப்பினர்களின் ஒழுக்கத்திலும் நடத்தை யிலும் ஆணவம், பேராசை, பொறாமை, சுயநலம், செல் வத்தைத் திரட்டுகின்ற வெறி கிடையாது. குலங்களுக்கு ((இனக்குழுக்களுக்கு) உள்ளேயும் குலங்களுக்கு இடையிலும் எழுகின்ற தகராறுகள் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப் பினரும் பங்கெடுக்கின்ற சகூடங்களில் தீர்க்கப்பட்டன. இரத்தப் பழி வாங்கும் சண்டைகள் அபூர்வமாக நடந்தன.

பூர்விக சமூகம் இலட்சிய சமூகம் அல்ல; அது மனித குலத்தின் குழந்தைப் பிராய்த்துப் புராதன, நயமில்லாத கம்யூனிச வடிவம், அது சமூக வளர்ச்சியில் அழியுமாறு விதிக்கப்பட்டது. வரலாற்று ரீதியில் எதிர்காலம் இல்லாத குலமரபு அமைப்பு காலப் போக்கில் சமூக முன்னேற்றத் துக்குத் தடையாக இருந்தது.

மனித சமூகத்தின் வரலாற்றில் முதல் கட்டம், ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு, எதிர்காலத்தில் மெய்யான கம்யூனிசத்தை சாதிப்பதற்கு முன்னேற்றத்தைத் தொடங்கியது என்ற முறையில் பூர்விக கம்யூனிசம் நமது கவனத்தைக் கவர்கிறது.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

1) மனிதனின் தோற்றமும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையும்- ஹா.சபிரொவ்


மனிதனின் தோற்றமும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையும். மனித சமூகத்தின் இருத்தலும் வளர்ச்சி யும் உற்பத்தி மற்றும் புனருற்பத்தியின் இரண்டு ரகங் களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன: உழைப்புக் கருவிகளைக் கொண்டு வாழ்க்கைச் சாதனங்களை (உணவு, உடை, வீடு) உற்பத்தி செய்தல், மனிதனை உற்பத்தி செய் தல். பிந்தியது வரலாற்று ரீதியில் வளர்ச்சியடைகின்ற குடும்ப வடிவங்களில் நடைபெறுகிறது. பூமியில் மனிதன் மற்றும் சமூகத்தின் தோற்றத்தின் வரலாற்று ரீதியான நிகழ்வுப் போக்கைப் புரிந்து கொள்வதில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும். - மனிதக் குரங்கின் இனத்திலிருந்து மனிதன் வளர்ச்சிய! டைந்திருக்கிறான் என்பதை மாபெரும் பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் (1809-1882) தன்னுடைய பரிணாமத் தத்துவத்தின் மூலமாக நிரூபித்தார்; ஆனால் சமூகங்களைப் படைத்து அவற்றில் வாழ்கின்ற தகுதி கொண்டவனாக மனிதன் வளர்ச்சியடைந்தது என் என்பதை அவருடைய தத்துவம் விளக்கவில்லை. எங்கெல்ஸ் மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்னும் நூலில் இதை விளக்குகிறார். உழைப்பே மனிதனைப் படைக்கிறது, பூர்விக டனிெதர்களிடையில் உழைப்புச் செயல்முறையின் போது சமூகப் பிணைப்புகளும் உறவுகளும் தோன்றின என்பதை அவர் நிரூபித்தார்.

பூர்விக மனிதன் உழைப்பின் மூலம், முகிழ்த்துக் கொண்டிருந்த சமூகக் காரணிகள் மூலம் நீண்ட, பரிணாமக் கட்டத்தைக் கடந்து வந்தான். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு அதன் வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய பொழுது அவன் அறிவுடைய மனிதன் (Homo sapiens) ஆனான்.

முதல் மனிதர்கள் பூர்விக மனிதக் கூட்டங்களில் கூடி வாழ்ந்தார்கள். உணவைச் சேகரித்தலும் வேட்டையாடு குலும் (சுவீகரிக்கின்ற பொருளாதாரம்) அவர்களுடைய மக் கியமான தொழிலாக இருந்தன. பூர்விகமான முறையில் கூராக்கப்பட்ட அல்லது சாதாரணக் கம்புகள், கற்கள் மற்றும் பிராணிகளின் எலும்புகள் அவர்களுடைய கருவிகளாக இருந்தன.

இக்கட்டத்தில் கூட்டு வாழ்க்கை பூர்விக சமூக வாழ்க் கையின் அடிப்படையான ஸ்தாபனக் கோட்பாடாக இருந் தது. பூர்வீக மனிதர்களின் கூட்டுச் சமூகத்தில்தான் கருவி களைத் தயாரிக்க முடியும், பயன்படுத்த முடியும், அபி விருத்தி செய்ய முடியும். கூட்டு உழைப்பு பூர்விகமான கூட்டுறவின் வடிவத்தை (பெரிய மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிப்பதைப் போல) அடைந்தது. உற்பத்தி நட வடிக்கைகள் முன்னேற்றமடைந்த பொழுது பால் மற்றும் வயதின் அடிப்படையில் இயற்கையான உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டை யாடினார்கள்; பிற்காலத்தில் மீன் பிடித்தார்கள். பெண் கள் வீட்டைக் கவனித்துக் கொண்டார்கள், குழந்தைகளை

வளர்த்தார்கள், கிழங்குகள், பழங்கள், கொட்டைகளைச் சேகரித்தார்கள். கிழவர்கள் கருவிகளைத் தயாரித்தார்கள். "பால் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்ட இயற்கை யான உழைப்புப் பிரிவினை கட்டுறவை ஊக்குவித்து கூட்டு உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியது. | பொதுக் குடியிருப்பு பூர்விக மனிதர்களுடைய வாழ்க் ைெகயின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையாக இருந்தது. உணவுப் பொருட்களைச் சேகரிக்கின்ற மற்றும் வேட்டையாடுகின்ற பிரதேசம், குடியிருப்பு, படகுகள், மீன் பிடிக்கின்ற வலைகள், இதரவை பொதுச் சொத்தாக இருந்தன. உழைப்புக் கருவிகள் குலத்துக்கு முந்திய கூட்டுச் சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் பிரிக்கப் பட்டன; இக்கருவிகள் கூட்டு உழைப்பில் பயன்படுத்தப் பட்டன. சில முதலாளித்துவப் பொருளியலாளர்கள் கூறு வதைப் போல அவை தனியுடைமையின் ஒரு வடிவம் அல்ல. உணவு சேகரித்தலில், கூட்டு அல்லது தனிப்பட்ட வேட்டையில் கிடைத்த உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பூர்விக மனிதக் கூட்டத்தில் சமூகப் பிணைப்புகளும் உறவுகளும் மெதுவாக, ஒவ்வொரு படியாக வளர்ச்சி யடைந்தன. மனிதர்களைப் புனருற்பத்தி செய்தல் சமூக வரையளவுகளினால் இன்னும் ஒழுங்குப்படுத்தப்படவில்லை; அவர்களுடைய பாலியல் உறவுகள் முறையான இயல்பைக் கொண்டிருக்கவில்லை.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

பூர்விக கம்யூனிசமும் அது அழிக்கப்பட்டதன் சமூக விளைவுகளும்


கம்யூனிசம் என்றால் என்ன?

ஹா.சபிரொவ்

முன்னேற்றப் பதிப்பகம்
மாஸ்கோ-1987







Monday, 25 February 2019

மார்க்சியம் பயில்வது பற்றி லெனின்


இன்று பல முற்போக்கு இளைஞர்கள் மார்க்சியத்தைப் படித்தறிய ஆவல் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், எவ்வாறு படித்தறிவது என்பது பற்றி லெனின் காட்டியுள்ள வழிகாட்டுதல்கள் இங்கே தொகுக்கப்படுகிறது. முக்கியமாக இரண்டு சொற்பொழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று “இளைஞர் கழகங்களின் பணிகள்” என்ற சொற்பொழிவு, மற்றொன்று “அரசு” என்பது பற்றிய சொற்பொழிவு.

முதல் சொற்பொழிவு, ருஷ்யாவின் இளங் கம்யூனிஸ்டக் கழகத்தின் மூன்றாவது அனைத்து ருஷ்யக் காங்கிரசில் நிகழ்த்திய (02-10-1920) சொற்பொழிவு. ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடைபெற்ற பிறகு நிகழ்த்தப்படும் சொற்பொழிவாகும். இந்தச் சொற்பொழிவு ருஷ்ய இளைஞர்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ளதால், இன்றைய இளைஞர்களுக்கும் இது வழியாட்டியாக இருக்கும்

மார்க்சியத்தை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் “கற்றறியுங்கள்” என்பது தான் பதிலாக இருக்கும். இது மிகமிகப் பொதுப்படையான பதிலாகும். எதைக் கற்றறிவது, எப்படிக் கற்றறிவது என்ற முதன்மையான கேள்விக்கு இது பதில் அளிக்கவில்லை.

மார்க்சிய அறிஞர்கள் எழுதிய நூல்களிலும், பிரசுரங்களிலும் அடங்கியுள்ள அறிவை ஏற்றுக்கொள்வதே கம்யூனிசத்தைக் கற்றறிவதாகும் என்பதே பொதுவாக ஒருவருக்கு மனதில் தோன்றும். கம்யூனிசத்தைப் பயிலுவதற்கு இவ்வாறு கூறும் இலக்கணம் மிதமிஞ்சிய கொச்சைப்படுத்துவதும், குறைப்பாடுடையதுமாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.

கம்யூனிஸ்டு நூல்களில் இருப்பதை ஏற்றுக் கொள்வதே போதுமானதாகக் கருதினால், கம்யூனிச வார்த்தைகளைப் பேசி வித்தைக் காட்டுவேரை அல்லது வாய்சவடால்காரர்களையே உருவாக்கும். நூல்களில் மட்டும் கம்யூனிசத்தைப் படிப்பது என்பது தீங்கையே ஏற்படுத்தும். ஏன் என்றால் இத்தகையோர் கம்யூனிஸ்டு நூல்களில் எடுத்துரைக்கப்பட்டதைப் படித்துத் தெரிந்து கொண்டபின், படித்ததைப் பல்வேறு துறைகளைச் சேர்த்து இணைத்திடும் திறனற்றோராகவே இருப்பர், அவசியமான செயற்பாடு இவர்களிடம் இல்லாது போகும்.

இந்த எச்சரிக்கை, கம்யூனிசத்தை நூல்களில் படித்தறிய வேண்டாம் என்று கூறவில்லை. நூல்களில் படித்துப் பெற்ற அறிவோடு நின்று விடுகிற தவறைத்தான் சுட்டிக்காட்டுகிறார். வேலையில் ஈடுபடாமல், போராட்டம் செய்திடாமல் கம்யூனிஸ்ட் நூல்களைப் படித்துப் பெறப்பட்ட அறிவு சிறிதும் பயனற்றது. அதைவிடக் கம்யூனிஸ்ட் முழக்கங்களை ஏற்றுக் கொள்வது அதைவிட அபாயகரமானதாகும். இந்த அபாயத்தைத் தக்க காலத்தில் உணர்ந்து தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு அபாயமும் இருக்கிறது. அது மார்க்சியத்தைத் தவிர மற்றது எதையும் பாடிக்காதிருத்தல்.

மனித குலம் சேகரித்திருக்கும் அறிவுச் செல்வத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது. அறிவின் கூட்டுத் தொகையினால் விளைந்த பயனே கம்யூனிசம். இந்தக் கூட்டுத் தொகையான அறிவைப் பெறாமலே, கம்யூனிச முழுக்கங்களையும் கம்யூனிசத்தின் முடிவுகளையும் அறிந்து கொண்டால் போதும் என நினைப்பது தவறாகும். 

லெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற சிறு கட்டுரையைப் படித்தாலே இதனை உணரலாம். தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்கிற மார்க்சியத்தின் உட்கூறுகள் வந்தடைந்த வழிகளை அதில் லெனின் எடுத்துக்காட்டியுள்ளார்.

மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று, சிந்தனையை வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே கம்யூனிஸ்ட் ஆக முடியும் என்கிறார் லெனின்.

விமர்சனக் கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்ட், தயாராக வரையறுத்து வைக்கப்பட்டுள்ள முடிவுகளைத் தெரிந்து கொண்டுவிட்ட ஒரே காரணத்தால் தனது கம்யூனிச அறிவை மெச்சிப் புகழ்வாராயின் உண்மையில் அவர் பரிதாகத்துக்குரிய கம்யூனிஸ்டுதான் என்கிறார்.

மேலும் கூறுகிறார், ஒரு கம்யூனிஸ்ட், எதையும் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பபானவரா முடியவே முடியாது.

கம்யூனிசத்தை எவ்வாறு பயில வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாக லெனின் கூறுகிறார், “இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும் சுரண்டலாளர்களது பழைய சமூகத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.” இதுதான் பதில். அனைத்துப் படிப்பையும் இவ்வாறுதான் படிக்க வேண்டும்.

ஒர் உதாரணத்தின் மூலம் லெனின் விளக்குகிறார். என்றும் மாறாத நிலையான ஒழுக்கநெறியில் கம்யூனிஸ்டுகளுக்கு நம்பிக்கை இல்லை. சமூகம் வர்க்கமாகப் பிரிந்த பிறகு பொதுவான ஒழுக்கநெறி இருக்க முடியாது என்பதை லெனின் சுட்டிக்கிறார். “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்“ என்ற நூலில் லெனின் இதனை மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்- என்கிறார் லெனின். இங்கே கூறியுள்ளபடி ஒன்றை படித்தறியும் போது அதன் பின்னுள்ள வர்க்க நலனின் அடிப்படையில் அணுகவேண்டும்.

கம்யூனிஸ்டுகளுக்கு ஒழுக்கநெறிக் கிடையாது என்ற பொய் பரப்புரையை இன்றுவரை செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஒழுக்கநெறி இருக்கிறது, அது பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் அடங்கியிருக்கிறது. பாட்டாளிகளின் ஒழுக்கநெறி வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்து தோன்றுகிறது. இந்த ஒழுக்கநெறி மனித சமூகம் மேலும் உயர்ந்த நிலைக்கு வளர்வதற்கும், உழைப்புச் சுரண்டப்படுவதை ஒழித்துத் தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் பணி புரிகிறது.

மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒழுக்க நெறியையும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கின்றனர். மேலே லெனின் குறிப்பிட்டது போல அனைத்து சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்கிறது. இதனை அறியாமல் போனால் வர்க்க சமூகத்தில் ஏமாளியாகவே கிடப்பர்.

அனைத்து நூல்களையும் சுரண்டலாளர்களது சமூகத்தை எதிர்த்து உழைப்பாளிகள் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலேயே படிப்பு, பயிற்சி, கல்வி, போதனை ஆகியவைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து “அரசு” என்பது பற்றிப் பல்கலைக் கழகத்தில் லெனின் ஆற்றிய உரைக்குச் செல்வோம். இங்கு அரசு பற்றிக் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த விளக்கமே அனைத்தையும் பற்றிப் புரிந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இருக்கும்.

அரசு என்பது பற்றி, முதல் முறையாக அணுகுகிறீர்கள் என்றால், இந்தக் கடினமான பொருள் பற்றி முதல் பேச்சில் தெளிவு ஏற்படும் என்று கூறிவிட முடியாது. முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் ஆகியோர் மற்ற எந்தப் பிரச்சினையையும்விட அரசு பற்றியே அதிகமாகக் குழப்பியிருக்கின்றனர். அதனால் முதல் பேச்சில் ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது சாத்தியமல்ல. இந்த உரையைக் கேட்டப்பின் விளங்கிக் கொள்ளாத அல்லது தெளிவில்லாத இடங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறித்து வைத்தவற்றுக்குத் தொடபுடைய படிப்பினாலும், தனிப்பட்ட விரிவுரைகளாலும், உரையாடல்களாலும் விளக்கம் பெறலாம் என்கிறார் லெனின்.

அடுத்து, விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்க்சும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களில் சிலவற்றையேனும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார்.

கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளுதல், அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல் மட்டுமே ஒருவரை சிறந்த கம்யூனிஸ்ட் செயற்பாட்டளராக உருவாக்கிவிட முடியாது. கண்டிப்பாக மார்க்சிய அடிப்படை நூல்கள் சிலவற்றையேனும் படிக்க வேண்டும்.

“டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் எங்கெல்ஸ் கூறுகிறார். தத்துவ முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது. ஆகப் படித்தறியாமல் திறமையான செயற்பாட்டாளராக முடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

படிப்பு என்பது நடைமுறைக்கு அப்பாற்பட்டதல்ல, நடைமுறை என்பது படிப்புக்கு அப்பாற்பட்டதும் அல்ல. இரண்டும் இணைந்தே நடைபெற வேண்டும். படிப்பு தனியாகவும் செயற்பாட்டைத் தனியாகவும் பிரிக்க முடியாது. கோட்பாட்டையும் பழைய நடைமுறையையும் படித்துத்தான் அறிய முடியும். இன்றைய நடைமுறை அடுத்து வருபவர்கள் அறிய வேண்டுமாயின், இன்றைக்கு எழுதிவைத்த நடைமுறையும், நடைமுறையால் உருவாக்கிய கோட்பாடுகளையும் நூல்களின் வாயிலாகவே படித்தறிய முடியும். படிப்பு என்பது நடைமுறையோடும், நடைமுறை படிப்போடும் தொடர்புடையதேயாகும்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களை முதன்முறையாகப் படிக்கும் போது, அதில் காணும் விளக்கவுரையின் கடுமை காரணமாக, சிலருக்குத் திகில் உண்டாகலாம், அதனால் ஏதும் கலக்கம் அடைய வேண்டாம் என்கிறார் லெனின். முதல் முறையாகப் படிக்கும் போது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் போது அல்லது பின்னர் அந்தப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட கோணத்தில் அணுகும் போது தெளிவுகிட்டும்.

கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் அரசு பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். அரசியல் முழுமைக்கும் இது அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். பொருளாதாரம் அல்லது அரசியல் பிரச்சினையோடு இது தொடர்புடையதாக இருப்பதனால், அரசியல் செயற்பாட்டாளர்கள் அவ்வப்போது இப்பிரச்சினையை எதிர்கொள்வர்.

அரசு என்பது என்ன?

அதன் தன்மையாது?

அதன் முக்கியத்துவம் என்ன?

முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்குப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு விஷயத்தில் கொண்டுள்ள நிலை என்ன?

கட்சியின் செயற்பாட்டாளர்கள் இந்தப் பிரச்சினையைப் பிறர் துணையில்லாமல் அணுகும் ஆற்றலைப் பெற்று இருக்க வேண்டும், இதன் அவசியத்தை எதிரிகளோடு விவாதிக்கும் போது உணர்ந்திருப்பர். ஆதலால் படிப்பதுடன் அதுபற்றி உரையாடல்கள், விரிவுரைகள் ஆகியவற்றின் துணையோடு, இந்தப் பிரச்சினையை அணுகும் ஆற்றலை பெறுவது முக்கியமாகும். பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் எதிரிகளை வெல்வதற்கும் இந்தப் பயிற்சி அவசியமாகும். கொள்கைத் துணிபுகளில் போதியளவு உறுதி கொண்டர்வர்களாக அப்போது தான் விளங்கமுடியும்.

அரசு பற்றிய பிரச்சினையில் முதலாளித்துவ அறிஞர்கள் குழப்பியுள்ளனர். இப்பிரச்சினை இதுநாள் வரையில் மதம் பற்றிய பிரச்சினையோடு அடிக்கடி பிணைத்து விடுகின்றனர். மதப் போதனைகளைப் பின்பற்றுவோர்கள் மட்டும் அன்றி, மதப்பிடிப்பில் இருந்து விடுபட்டவர்களும் அரசு என்ற தனிப் பிரச்சினையை, மதம் பற்றிய பிரச்சினையோடு சேர்த்து குழப்புகின்றனர்.

. சமூகச் சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்தும் வகையில், முதலாளித்துவம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், அரசு பற்றிய போதனை செயல்படுகிறது. இந்தப் பிரச்சினை சுரண்டும் வர்க்கங்களின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைக்கப் பட்டுள்ளது

அரசு பற்றிய பிரச்சினையை விஞ்ஞான முறையில் அணுகுவதற்கு, அரசு என்பதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்றை மேலோட்டமாகவாவது பார்வையிட வேண்டும். ஒவ்வொரு பிரச்சியையையும் இவ்வாறு தான் அணுக வேண்டும்.

குறிப்பிட்ட பிரச்சினையை ஆராயும் போது, அந்த நிகழ்ச்சி வரலாற்றில் எவ்வாறு தோன்றியது, அது தன் வளர்ச்சிப் போக்கில் என்னென்ன முக்கியமான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது, குறிப்பிட்ட அப்பொருள் இன்று என்னவாக ஆகியிருக்கிறது என்பதை ஆராய்வதே மார்க்சிய விஞ்ஞான அணுகுமுறையாகும் என்கிறார் லெனின்.

அரசு என்பது இல்லாத காலம் ஒன்று இருந்தது என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்களோ அப்போது அங்கே அரசு தோன்றுகிறது.

வர்க்கங்கள் பிரிவுபடுவதற்கு முன்பான சமூகத்தை ஆதி கம்யூனிச சமூகம் என்று அழைப்பர். அங்கே அரசு என்ற ஒன்று இருந்ததற்கு உரிய அறிகுறிகளே தென்படவில்லை. வழக்கம், மரபு ஆகியவற்றின் ஆதிக்கத்தையும், குலத்தலைவரிகளின் அதிகாரத்தையும் தான் காணமுடிகிறது. இந்த அதிகாரம் அந்தக் காலத்தில் மகளீருக்கு அளிக்கப்பட்டிருந்தது. தாய்வழி சமூகமாக இருந்து.

இச் சமூகத்தில், மக்களை பலாத்காரத்தால் அடிமைப்படுத்த ஒரு தனி இயந்திரம் தேவைப்படவில்லை. வர்க்க சமூகம் தோன்றிய போது பலாத்காரத்தால், உழைக்கும் மக்களை அடிப்படைப்படுத்த அரசு என்ற இயந்திரம் தேவைப்பட்டது, பிறருடைய சித்தத்தை வலுவந்தமாகப் பணிய வைக்கக்கூடிய ஒரு விசேஷ இயந்திம் தேவைப்படும் போது அரசு தோன்றியது. அந்த அரசு இயந்திரம், சிறைச்சாலைகள், விசேஷப் படைகள், இராணுவம் முதலியவைகளை உள்ளடக்கி இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வை தொகுப்பாய் கூறுகிறார்.

எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக் கொள்ள முடிகிறதோ, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாகப் பிரிந்ததோ, அங்கு அப்போது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.- என்கிறார் லெனின்.

சட்டங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றின் மூலமாக ஆட்சி புரிவதாகச் சுரண்டும் வர்க்க அறிஞர்கள் கூறினாலும் பலாத்காரத்தினாலேயே மக்கள் அடக்கப்படுகிறார்கள். மக்களில், மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்கள் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மீது பலாத்காரம் இல்லாது ஆதிக்கம் செலுத்த முடியாது. இதனைத் தொடக்கக் காலத்தில் இருந்தே காணலாம்.

ஆதிகாலக் குண்டாந்தடி மூலமோ, அல்லது அடிமை முறையின் காலக் கட்டத்தில் இன்னும் அதிகம் மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ அல்லது கடைசியாக இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுணுக்கத்தின் அதிசயங்களாக உள்ள, இன்றைய தொழில்நுட்பக் கலையின் மிகப் புதிய சாதனைகளை ஆதாரமாகக் கொண்ட நவீனக் கருவிகள் மூலமோ, இந்தப் பலாத்காரம் மக்கள் மீது செலுத்தப்படுகின்றனது- என்கிறார் லெனின்.

கருவிகளைப் போலவே அரசு வடிவங்களும் அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்ப மேற்கட்டமைப்பாக உள்ளது.

அடிமை முறை அரசில் முடியரசும், உயர்குடி மக்களின் குடியரசும், ஜனநாயகக் குடியரசுங்கூட இருந்ததைக் கண்டோம். உண்மையில் ஆட்சி முறையின் வடிவங்கள் மிகமிக வேறுபட்டன. ஆயினும் அவற்றின் சாரம் எப்போதும் ஒன்றேதான்- என்கிறார் லெனின்.

மூலதனத்தின் கரங்களில் தான் அதிகாரம் இருக்கிறது. உண்மையில் குடியரசு எவ்வளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும் அதிக இரக்கமற்றதாகவும் இருக்கிறது.

பாட்டாளி வர்க்கம் அரசின் வர்க்கத் தன்மையை அறிந்த கொண்டுவிட்டது.

அரசு என்பதற்கு அனைத்து மக்களினுடைய ஆட்சி என்ற பழங்கதைகளை நம்பிக் கொண்டு, மூடத்தனமாகப் பயபக்தியுடன் மக்கள் அதன்முன் மண்யிட்டு நின்றார்களே, அந்த அரசு எனும் இயந்திரத்தைப் பாட்டாளி வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அது முதலாளித்துவப் பொய் என்று சாற்றுகின்றது- என்கிறார் லெனின்.

இந்த அரசு எப்போது தேவையற்றுப் போகும் என்பதை இந்தச் சொற்பொழிவின் இறுதியில் கூறியுள்ளார்.

சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போன போது, நிலச் சொந்தக்காரர்களும், ஆலைச் சொந்தக்காரர்களும் எங்குமே இல்லை எனும்போது, சிலர் மட்டும் வாரிவாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே கிடையாது எனும் நாளில்தான், இந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். அப்போது அரசென்பதும் இருக்காது, சுரண்டலும் இருக்காது. நம் கம்யூனிஸ்டுக் கட்சியின் நோக்கு இதுவே- என்று கூறி இச்சொற்பொழிவை லெனின் முடிக்கிறார்.

இந்தச் சொற்பொழிவில் லெனின், ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை படிக்கும்படி வலியுறுத்துகிறார். அவ்வாறு கூறும்போது அந்நூலைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுக்கிறார்.

நவீன சோஷலிசத்திற்குரிய அடிப்படை நூல்களில் இது ஒன்று, அதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நம்பிக்கையோடு ஏற்கலாம், அதாவது, அவ்வாக்கியம் மனம் போனவாறு கூறப்பட்டதன்று, வரலாற்று அரசியல் சம்பந்தமாக அளவற்ற விவரங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற உறுதியோடு ஏற்கலாம். இந்த நூலின் எல்லாப் பகுதிகளும் ஒரே நிகராகச் சகலருக்கும் புரியக்கூடிய வகையில் எடுத்து விளக்கப்படவில்லை என்பதில் ஐயம்ல்லைதான். வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவுடைய வாசகரை மனதிற்கொண்டே நூலின் சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் இந்த நூலைப் படித்ததும், அதை உடனேயே புரிந்துகொள்ளாவிடில், நீங்கள் கலக்கமுற் கூடாது என்று நான் மீண்டும் சொல்லுகிறேன். இந்நூலை எடுத்த எடுப்பில் புரிந்துகொள்வது எவருக்கும் அரிது. பின்பு, உங்கள் ஆர்வம் தூண்டிவிடப்படும் போது, அதை மீண்டும் படித்தீர்களானால், அதனை முழுக்கவும் இல்லாவிட்டாலும், அதன் பெரும் பகுதியைப் புரிந்து கொள்வதில் வெற்றியுறுவீர்கள். நான் இந்நூலைக் குறிப்பிடுவதன் காரணம் யாதெனில் இங்குக் குறிக்கப்பட்ட பொருளில் இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கான சரியான வழியை அது காட்டுகின்றது- என்று லெனின் கூறியுள்ளார்.

எங்கெல்ஸ் எழுதய நூலைப் பற்றி லெனின் இங்கு இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அச்சுறுத்துவதற்காக அல்ல. அதனைப் படிப்பதற்கு மெனக்கெட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இவ்வாறு கூறியுள்ளார். இந்த எங்கெல்சின் நூலைப் படிப்பதற்கு முன் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலை முதலில் படித்துவிட்டு எங்கெல்சின் நூலைப் படிக்கலாம். ஏன் என்றால் லெனின் தமது நூலில் எங்கெல்ஸ் மார்க்ஸ் கூறியவைகளை மேற்கோள்காளாகக் கொடுத்து விளக்கியுள்ளார். லெனினது இந்நூல் சுருக்கமாகவும் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துக்களைத் தொகுக்கப்பட்டதாகவும் இருக்கிறது. லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” நூலைப் முதலில் படிப்பது, எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலைப் படிப்பதற்குத் துணைபுரியம்.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நிறைய, பெரிய மேற்கோள்களை லெனின் தமது நூலில் பயன்படுத்தியது பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார்.

“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாயக் கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாகவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுதான் விஞ்ஞானச் சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிராயத்தை வந்தடைய முடியும், இக்கருததுக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நிரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.”
(அரசும் புரட்சியும்)

வாசகர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தினாலும் மேற்கோளிட்டு எழுதுவதற்குக் காரணம் ஆதாரத்துடன் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கேயாகும். இவ்வாறு மேற்கோளிட்டு எழுதுவது பற்றி லெனின் மற்றொர் இடத்திலும் வலியுறுத்தியுள்ளார்.

“மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களது நேரடியான எழுத்துக்களில் இருந்து வேண்டும் என்றேதான் விரிவான மேற்கோள்கள் எடுத்துக் கூறியுள்ளோம். வாசகர் இவற்றை ஒட்டு மொத்தமாய்ப் பரிசீலனை செய்து பார்க்கும் பொருட்டே இவ்வாறு செய்துள்ளோம். இவை அவசியம் படித்தறிய வேண்டியவை. கவனமாய்ச் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவை.”
(ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்)

இளம் மார்க்ஸ் - முதுமார்க்ஸ் என்று மார்க்சைப் பிரித்து மார்க்சியத்தைச் சிதைக்கும் போக்கு இன்றும் அதிகமாகவே காணப்படுகிறது. மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்ததில் முதல்வரிசையில் இருப்பவர் பிளாகனவ். லெனினும் மார்க்சிய திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தியுள்ளார். திருத்தும் வேலை இன்றும் தொடர்வதால், அதனை எதிர்த்து மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்களாக ஆதாரத்துடன் நிறுவேண்டியது அவசியமாகிறது.

லெனின் கூறியதையே 99.99% இந்தத் தொகுப்பில் கூறியுள்ளேன். எனது படிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஒன்றை மட்டுமே கூறலாம். மார்க்சிய அடிப்படை நூல்களைப் படிக்கும் போது அந்நூலின் தொடக்கப் பகுதி புரிந்து கொள்ள முடியாது போனாலும், தொடர்ந்து முழுவதையும் ஒருமுறை படித்துவிட வேண்டும். ஒரு முறை முழுமையாக வாசித்துவிட்டு புரியாதப் பகுதியை மீண்டும் மீண்டும் படிக்கும் போது தெளிவு ஏற்படும்.

இளம் வயதில் எங்கெல்சின் "லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்" என்ற நூலின் முதல் அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் போது ஒன்றுமே புரியவில்லை, ஆனால் இரண்டாம் அத்தியாயத்தைப் படித்தவுடன் ஏற்பட்ட தெளிவோடு முதல் அத்தியாயத்தை மீண்டும் படிக்கத் தொடங்கும் போது புரியத் தொடங்கியது. முதல் பகுதியைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தப் பகுதியைப் படிக்காதீர்கள் என்பதாகவே பலரது ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் எனது ஆலோசனை மாறுபடுகிறது. ஒருவேளை சிலருக்கு அது பயன்பட்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலருக்கு எனது அனுபவம் பயன்படும் என்று நினைக்கிறேன்.

படிக்கும் போது ஏற்படுகிற சந்தேகங்களை அருகில் உள்ள தோழர்களோடு உரையாடுவதன் மூலம் தெளிவு பெறலாம். சில தோழர்கள் தத்துவத்திலும், சில தோழர்கள் அரசியல் பொருளாதாரத்திலும், சில தோழர்கள் விஞ்ஞானக் கம்யூனிசத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பர் அவர்களுடன் உரையாடி விளக்கம் பெறலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கட்சி சார்பில்லாதவர்கள் நடத்தும் மார்க்சிய வகுப்புகள் பயனுள்ளதாக அமையும். இபோது வீடியோக்களில் மார்க்சிய வகுப்புகள் கிடைக்கின்றன, அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்க்சியம் கற்போம் திருத்தல்வாதம் எதிர்ப்போம். மார்க்சிய முதலாசிரியர்களின் நேரடி நூல்களைப் பயிலுவோம். அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டை பிறர் குழப்பும் போது எங்கெல்ஸ் தங்களது நேரடி நூல்களைப் படிக்கும்படி ஆலோசனை கூறுயுள்ளார். அதனைப் பின் பற்றுவோம்.

மார்க்சியத் திருத்தல்வாதத்தை எதிர்த்து மார்க்சிய வழியில் எழுதப்படுகிற மார்க்சிய அறிஞர்களின் நூலின் துணையோடு மார்க்சிய முதல் நூல்களைப் படித்துத் தெளிவடைவோம். நமது செய்பாட்டை இந்தத் தெளிவு சிறப்படையச் செய்யும்.

உழைக்கும் மக்கள் அனைவரும் விடுதலை பெறும்வரை மார்க்சியம் நமக்கு வழிகாட்டும்.

நாளை உலகம் உழைப்பாளர்களுடையதேயாகும்.