Friday, 17 March 2023

1) கற்பனா சோஷலிஸம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

19-ஆம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரையிலும் தொழிலாளிகள் பூர்ஷுவாக் கருத்துக்களின் செல்வாக்குக்கு உட்பட்டோ, கற்பனாவாத சோஷலிஸக் கருத்துக்களால் வழி நடத்தப்பட்டோ வந்தார்கள். வெகு காலத்திற்கு முன்பே, அதாவது முதலாளித்துவமும் தொழிலாளி வர்க்கமும் தோன்றிய காலத்திலிருந்து கற்பனாவாத சோஷலிஸம் தோன்றியது. அது பிரதானமாக, அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கத்தின் கண்டனத்தை ஒரு புதிய நியாயமான அமைப்பை ஏற்படுத்துவதற்கான அதனுடைய ஆர்வத்தை வெளியீடாக்கியது.

கற்பனாவாத சோஷலிஸம், கம்யூனிஸம் ஆகியவற்றின் ஆரம்ப காலப் பிரதிநிதிகள் - தாமஸ் மோர் (1478 - 1535), தொமாசோ காம்பனெல்லா (1568 - 1639), பிராங்கோஸ் நோயல் பாபே (1760 - 1797) மொரல்லி முதலியவர்கள், சுரண்டல் சமுதாயத்தின் குறைபாடுகளைத் தீவிரமாக விமர்சித்து, ஒரு புதிய, நியாயமான சமூகத்தை அமைப்பதற்கான பல கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களுடைய கருத்தின்படி வாழ்வின் எல்லாத் துறைகளையும் - அரசியல், பொருளாதார, ஆன்மிகம் - சேர்ந்த சகல மக்களுக்கும் சமத்துவத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய சமூகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆயினும், இந்தப் புதிய சமூகம் எப்படி சிருஷ்டிக்கப்பட வேண்டும் என்பது குறித்து அவர்களால் ஒன்றும் கூறமுடியவில்லை. பொதுவாக, எதார்த்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதொன்றாக அவர்கள் புதிய சமூகத்தைச் சித்திரித்துக் காட்டினார்கள். உதாரணமாக, தாமஸ் மோர், தனது சிந்தனையில் உருவாக்கிக்கொண்ட “கற்பனா" என்ற தீவில் அவருடைய புதிய சமுதாயத்தைப் படைத்தார். அன்று முதற்கொண்டு 'கற்பனா' (உட்டோபியா) என்ற சொல்லானது எதார்த்தமல்லாத, அடைய முடியாத அனைத்தையும் குறிப்பிடும் சொல்லாகிவிட்டது.

19-ஆம் நூற்றாண்டில், செயின்ட் சைமன் (1760-1825) சார்லி பூரியர் (1772-1837) ராபர்ட் ஓவன் (1771-1858) ஆகியோரால் கற்பனாவாத சோஷலிசம் மேலும் வளர்க்கப்பட்டது. அவர்கள் முதலாளித்துவச் சமுதாயத்தின் முரண்பாடுகளை உணர்ந்தனர்; பூர்ஷுவா புரட்சியானது சுதந்திரத்தையோ, சமத்துவத்தையோ, அல்லது இன்னும் சகோதரத்துவத்தையோ - இந்தக் கோரிக்கைகள் பூர்ஷுவா புரட்சியின் பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த போதிலும் கூட - உழைப்பாளி மக்களுக்கு அளிக்கவில்லை என்று நியாயமாகவே கூறினர். கற்பனா சோஷலிஸ்டுகள் முதலாளித்து வத்தைக் கண்டனம் செய்தனர்; அதன் தவறுகளையும், தீங்குகளையும் அம்பலப்படுத்தினர். அதற்கு மாறாக, சுரண்டலும், சமூக விரோதங்களும் இல்லாத ஒரு புதிய சமூக அமைப்பு ஏற்படவேண்டும் என்ற லட்சியத்தைக் கூறினர்.

19-ஆம் நூற்றாண்டு காலத்திய கற்பனா சோஷலிஸ்டுகள் உழைப்புக்கு ஏற்ப வினியோகம் என்ற சோஷலிஸக் கோட்பாட்டை அமுல் நடத்தவும், மக்களின் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், உற்பத்தியைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து, சோஷலிஸ சமுதாயத்திற்கு மாறிச் செல்வதற்கான ஒரு குறிப்பிட்ட பாதையைச் சுட்டிக்காட்டுவதற்கும் அவர்கள் துணிந்தனர். உதாரணமாக, பூரியர் படை அணிகளை அமைப்பது அவசியம் எனக் கருதினார். தனது துருப்புக்களைத் தனித்தனியான மின்னல் தாக்குதல் குழுக்களாக - அணிகளாக, வகுத்த மாசிடோனியாவைச் சேர்ந்த, பண்டைய கிரேக்க ராணுவத் தலைவன், பிலிப்பிட மிருந்து இக்கருத்தை இரவல் வாங்கினார். படை அணிகளை நிறுவும் வகையில் புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்று பூரியர் கருதினார். தமது வாழ்க்கையை சோஷலிஸக் கோட்பாடு களின் அடிப்படையில் அமைக்கின்ற (சுமார் 1500 - 1600 மக்களைக் கொண்ட) 300, 400 குடும்பங்களாலான சமுதாயங்களாக அது இருக்க வேண்டும். இந்த சமுதாயங்களின் உதாரணமானது புதிய சமுதாயத்தைக் கட்ட வேண்டியதன் அவசியத்தைப் பிற மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்ளச் செய்யும் என அவர் கருதினார்.

புதிய சமூகத்தை நிர்மாணிப்பதற்கான, கட்டுவதற்கான முக்கிய கருத்துக்களை முன்வைக்கும் தனது புத்தகத்தை வெளியிட்டபின், பூரியர், தானாகவே தனது மூலதனத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு "நல்ல" முதலாளியையும், ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டுவதற்காக, அதாவது படை அணியைகளையும் கண்டுபிடிப்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். எந்த சமயத்திலும் தொண்டர்கள் தன்னை வந்து காணலாம் என அறைகூவல் விடுத்தார். ஆனால் அவர் உயிரோடிருந்த வரை அவரிடம் யாரும் வரவில்லை. தனது கருத்து ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே பூரியர் இறந்து போனார்.

செயின்ட் சைமன் ஒரு சிறிய சமுதாயத்தை அமைப்பதற்காகத் தனது பணத்தைக் கூட ஈடுபடுத்தினார்; அதில், புதிய கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைக்க முயற்சித்தார்; ஆனால் அந்த சமுதாயம் சீக்கிரத்திலேயே, வழக்கமான ஒரு முதலாளித்துவ அமைப்பாக மாற்றமடைந்தது; அதனுடைய எல்லா முரண்பாடுகளும் தோன்றின.

கற்பனாவாத சோஷலிஸ்டுகள் ஏன் தோல்வியடைந்தனர்?

அவர்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம், சமூகத்தைப் பற்றிய ஒரு மெய்யான விஞ்ஞானத்தை அவர்கள் படைக்கவில்லை. அவர்களுடைய தத்துவங்களில், பெருமளவு பூர்ஷுவா கருத்துக்களை மனித அதாவது, சுபாவம் மாறாதது, என்றும் சமூகமானது ஒரே வகை விதிகளால் ஆளப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. என்றும் சமூக விதிகளும் இயற்கை விதிகளைப் போன்றவையே எனவும் அவர்கள் கருதினர். அவர்கள் முதலாளிகளையும், தொழிலாளிகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லா மக்களையும் நல்லவர்கள், கெட்டவர்கள் எனப் பிரித்து விடலாம் எனக் கருதினார்கள்.

இயற்கையில் ஒரே மாதிரியான காந்த சக்தியுடையவை விலகிச் செல்வதையும் எதிர்மாறான காந்த சக்தியுடையவை, ஒன்றோடொன்று ஆகர்ஷிக்கப்படுவதையும்போல, ஒரே மாதிரியான விருப்பங்கள் உள்ளவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றிணைந்து செல்ல முடியவில்லை எனவும், மாறுபட்ட போக்குகளை உடைய மக்கள் சமூகத்தில் சுமுகமாக வாழமுடியும் எனவும் கருதினார்கள். சமுதாயத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இயற்கை விதிகளைப் பிரயோகப்படுத்திய இந்தத் தவறான முறையானது, பூர்ஷுவா சமூக, இயற்கை விஞ்ஞானங்கள் போதுமான அளவு வளர்ச்சி கருத்துக்களின் செல்வாக்கினால் மட்டுமன்றி அந்தக் காலத்தில் பெறாததும், முதலாளித்துவம், தொழிலாளி வர்க்க இயக்கம் ஆகியவற்றின் குறைந்த வளர்ச்சி நிலையும் காரணமாகும். இவற்றின் விளைவாக சமூக வளர்ச்சி பற்றிய விஞ்ஞான பூர்வமான தத்துவத்தை வகுப்பதை சாத்தியமற்றதாக்கியது. கற்பனாவாத சோஷலிஸ்டுகளால் முதலாளித்துவ சமுதாய வளர்ச்சியின் விதிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய சமுதாயத்தின் படைப்பினராகக் கூடிய சக்தி வாய்ந்த சமூக சக்தியைக் கண்டு அறியவும் அவர்களால் முடியவில்லை.

No comments:

Post a Comment