//உண்மையான மனிதநேய மார்க்சீய லெனினியம் என்பது, உண்மையான சமூக அறிவியலாக, உயர் தர்க்க அறிவியலாக இருக்குமானால், அதனை யார் வேண்டுமானாலும் பயன் படுத்தி பயன் பெறலாம்.//
முதுமை பித்தன்:-
//ஈஸ்வரன் அ.கா. மார்க்சிய திட்டமிட்ட உற்பத்தி முறை என்பது, சமூக பொருளாதார உற்பத்தி முறை சார்ந்த ஒரு சமூக பொருளாதார அறிவியல் கோட்பாடு. இந்த சமூக அறிவியல் கோட்பாட்டை, பொது அறிவியல் கோட்பாடுகளை போல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.//
வர்க்கப் பார்வை என்பதே இல்லாத புதிய பாதையினரிடம் மார்க்சியம் பேசுவது வீண் வேலை.
*********************************************************************************************
வரலாற்றியல்
பொருள்முதல்வாதத்தில் இருக்கிற பாட்டாளி வர்க்க சார்பான நலனும், மார்க்சிய அரசியல்
பொருளாதாரத்தில் உள்ள பாட்டாளி வர்க்க நலனும் புதிய பாதையினருக்கு தெரியவில்லை. மார்க்சியம்
பேசுகிற அறிவியல் கண்ணோட்டம் வர்க்க சார்பானது என்பதுகூட தெரியமால் பொது அறிவியலைப்
போல மார்க்சிய அறிவியலை கருதி அதனை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டதாக கதைவிடுகின்றனர்.
புதிய
பாதையினருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட மார்க்சியம் உண்மையில் மார்க்ஸ் கூறிய மார்க்சியமே
அல்ல. அதனால் மார்க்ஸ் மார்க்சியத்தை ஆதி மார்க்சியம் என்று ஒதுக்கப் பார்க்கின்றனர்.
மார்க்சியம்
பேசுகிற புறநிலை என்பதை அறியாமல் புதிய பாதையினரால் மார்க்சிய வழிபட்ட அகநிலையில் செயல்பட
முடியாது.
புறநிலை
விதி என்கிற மார்க்சின் கண்டுபிடிப்புகளில் உள்ள அறிவியல் அணுகுமுறையை அறியாத புதிய
பாதையினர் மார்க்சியத்தைத் திரித்துக் கூறுவதில் ஆச்சரியம் இல்லை.
தத்துவத்திலும்
அரசியல் பொருளாதாரத்திலும் வர்க்க தன்மை இருக்கிறது என்பதை அறியாத புதிய பாதையினர்
மார்க்சிய வழியில் பேசுவதற்கு வாய்ப்பில்லை.
மார்க்ஸ்
கூறிய மார்க்சியத்தை ஏற்பதாயினரும் மறுப்பதாயினும் முதலில் புதிய பாதையினர் அறிந்திருக்க
வேண்டும். மார்க்சியத்தை வர்க்கப் பார்வையிலும் அறிவியல் பார்வையிலும் புதிய பாதையினர்
அறிந்திருக்கவில்லை.
அதனால்தான்
அவர்கள் தங்கள் கருத்தை முன்வைத்து சவால்விடுகின்றரே தவிர அதை மார்க்சிய வழியில் நிறுவ
முடியவில்லை. நிறுவ முயச்சித்தால் புதிய பாதையினர் பேசுவது மார்க்சியமல்ல என்பதை அவர்களே
அறிந்து கொள்ள வேண்டிவரும்.
மார்க்சிய
அடிப்படைகளை அறியாத புதிய பாதையினரிடம் மார்க்சிய வழியில் பேசுவது வீண் வேலை. புதிய
பாதையினர் மார்க்சியத்தை முதலில் அறிந்து கொள்ளட்டும்.
லெனின்
எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற
நூல் பொதுவாக அனைவராலும் படிக்கப்பட்ட நூல். மார்க்சிய மூலவர்களின் நூலைப் படிக்க வேண்டுமானால்
இதிலிருந்துதான் தொடங்க வேண்டும். அப்படிப்பட்ட நூலில் சமூக விஞ்ஞானத்தின் சார்புத்
தன்மையைப் பற்றி கூறியதுகூட தெரியாமல் புதிய பாதையினர் இருக்கின்றனர். புதிய பாதையினரின்
அசட்டுத்தனத்தையும் ஏமாளித்தனத்தையும் நாம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளோம் மீண்டும்
அம்பலப்படுத்துவோம்.
“வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது.”
….
“கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.”
No comments:
Post a Comment