தர்க்கவியல்,
சரித்திரவியல் பொருள்முதல்வாதம் (Dialectics historical materialism – இயக்கவியல், வரலாற்றியல்
பொருள்முதல்வாதம்) மார்க்சியத்தின் முதல்
பாகமாக அமைந்துள்ளது. அதனுடைய இரண்டாவது இணைந்த பகுதி அரசியல் பொருளாதாரமாகும்; அதாவது,
சமூக உற்பத்தியின் வளர்ச்சி, பண்டங்களின் விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற,
அதாவது சமுதாய வாழ்க்கையின் அடிப்படையை நிர்ணயிக்கிற விதிகள் குறித்த விஞ்ஞானமாகும்.
சமூக
வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிற, சரித்திரவியல் பொருள்முதல்வாதத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட
அடிப்படை விதிகளை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் பொருளாதாரமானது எவ்வாறு உற்பத்தி சக்திகளின்
வளர்ச்சி நிலையும் அவற்றின் குணாம்சமும் சமுதாயத்தின் உற்பத்தி பொருளாதாரமானது எவ்வாறு
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உறவுகளை நிர்ணயிக்கின்றன என்பதைக் குறிப்பாக உற்பத்தி
சாதனங்கள், கருவிகளின் உடைமை வடிவங்களையும் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில், பங்கெடுத்துக்
கொள்ளுகிற பல்வேறு மக்கள் கூட்டத்தினர் அதனோடு கொண்டுள்ள உறவுகள், அவை உற்பத்தி செய்கிற
பொருள்களை சுவீகரித்துக்கொள்ளும் முறை, அப்படி அவை சுவீகரித்துக் கொள்ளும் பண்டங்களின்
பங்கு ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன.
புராதன
சமுதாயத்தில், புராதன உற்பத்தியானது புராதன சமூகக் குடியமைப்பு உடைமையுடன் இணைந்திருந்தது.
உழைப்பின் உற்பத்திப் பொருள் சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தினர்களுக்கிடையிலும் சமமாகப்
பங்கிடப்பட்டது. உழைப்பிற்கான உலோகக் கருவிகளின் தோற்றமானது மூளை உழைப்பாளிகளைப் பராமரிப்பதற்குத்
தேவையான பண்டங்களின் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்க வேண்டியதன் அவசியத்தை உண்டாக்கியதால்,
உற்பத்தி சாதனங்கள், கருவிகளில், தனி உடைமை தோன்றுவதற்கு இடமளித்தது.
தனிவுடைமையானது, சமூகத்தை “உடையவர்கள்" "இல்லாதவர்கள்” எனப் பிரித்தது. 'உடையவர்கள்' 'இல்லாதவர்களின்' உழைப்பின் பயன்களை அபகரிப்பதில் முடிந்தது. மனிதனை மனிதன் சுரண்டுவது அமுலுக்கு வந்தது. உற்பத்தியின் வளர்ச்சியுடன், தனியுடைமையின் வடிவங்களில் மாற்றங்கள் தோன்றின. முதலில் அடிமை உடைமை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலப்பிரபுத்துவ உடைமையும் அதன்பின் முதலாளித்துவ உடைமையும் ஏற்பட்டன. அதற்கேற்றாற்போல் சுரண்டல் வடிவங்களும் மாற்றமடைந்தன. மார்க்ஸ் முதலாளித்துவ சமுதாயத்தைப் பரிசீலிப்பதில் பிரத்தியேக கவனம் செலுத்தி, அதன் சுரண்டும் தன்மையை எடுத்துக்காட்டினார். முதலாளித்துவ அமைப்பைப் புகழ்ந்த பூர்ஷூவா பொருளாதாரவாதிகள் இதற்குமுன் இதைச்செய்யத் தவறினர்.
No comments:
Post a Comment