Saturday, 15 June 2019

3) குலமரபு அமைப்பின் தகர்வும் தனியுடைமையின் தோற்றமும் - ஹா.சபிரொவ்


தனியுடைமையின் தோற்றம். பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு தகர்ந்ததன் பிரதான விளைவாக உற்பத்திச் சாதனங்களில் தனியுடைமை தோன்றி நிலைபெற்றது. தனியுடைமை நிலவிய கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் வெவ்வேறு நோக்குகளிலிருந்து அது விமர்சிக்கப்பட்டிருக் கிறது, கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சிக் காலத்து மனிதாபிமானிகள் அதை விமர்சித்தார்கள், 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கற்பனாவாத கம்யூனிஸ்டுகள் அதை நிராகரித்தார்கள், 19ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தைச் சேர்ந்த கற்பனாவாத சோஷலிஸ்டுகள் அதை விமர்சன ரீதியில் பகுப்பாய்வு செய்தார்கள்.

தனியுடைமை என்பது உண்மையில் என்ன என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முற்போக்கான சிந்தனை யாளர்கள் அடிமை உடைமைச் சமூகத்தின் காலத் திலிருந்து இடைவிடாமல் முயற்சி செய்தார்கள். அது வர லாற்று ரீதியில் தற்செயலாக ஏற்பட்டு விட்டது, அது மனிதனுடைய இயல்புடனும் அறிவுடனும் பொருந்தாத திரிபு என்று சிலர் கருதினார்கள்; அது திருடுதல், யுத்தத்தில் அடிக்கப்பட்ட கொள்ளையின் விளைவு என்று வேறு சிலர் கூறினார்கள்; நிலத்தில் வேலி அமைத்து, இது என்னு டைய நிலம், எனக்கு மட்டுமே இது உரிமை என்று கூறிய வர்களுடைய சூழ்ச்சியின் விளைவு என்று இன்னும் சிலர் கூறினார்கள். சில தத்துவஞானிகள் தனியுடைமையை நிராகரித்தார்கள்; உடைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும், அது நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட்ட வேண்டும் என்று வேறு சிலர் கோரினார்கள், தனியுடைமை உள் ளார்ந்த, புனிதமான மனித உரிமை என்று பலவிதமான வாதங்களின் மூலம் நியாயப்படுத்துவதற்கும் அதைப் பாது காப்பதற்கும் முயல்பவர்களும் இருந்தார்கள். ஆனால் மார்க் சிய-லெனினியத்தால் மட்டுமே தனியுடைமை என்னும் மர்மத்தை விளக்க முடிந்தது.

பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு மற்றும் அதன் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி யின் தர்க்க ரீதியான, தவிர்க்க முடியாத விளைவாகத் தனி யுடைமை தோன்றியது. இயற்கைச் சக்திகளை எதிர்த்துச் சமாளிப்பதற்கு, உயிர்பிழைத்திருப்பதற்கு, உணவு சேகரிப்பதற்கு, பிற்பாடு பிழைப்புச் சாதனங்களை (உணவு, உடை, குடியிருப்பு) உற்பத்தி செய்வதற்கான அவசியம் கல், எலும்பு, மரம், உலோகத்தைக் கொண்டு கருவிகளைச் செய்வ தில் இன்னும் முற்போக்கான முறைகளைக் கண்டு பிடிக்குமாறு பூர்விக மனிதனைத் தூண்டியது. கால்நடை களை வளர்த்த இனக்குழுக்கள் நிலத்தை உழுது பயிரிட்ட இனக்குழுக்களிலிருந்து பிரிந்தன. கால ஓட்டத்தில் பல் வேறு தொழில்கள் உருவாயின. பரிவர்த்தனை வளர்ச்சி யடைந்து பணம் உருவெடுத்த பொழுது அதிகமாகப் பணம்) வைத்திருந்தவர்களின் பொருளாதார செல்வாக்கு அதி கரித்தது, கால்நடை வளர்ப்பினாலும் புதிய உழைப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் 19ழைப்பினை உற்பத்தித் திறன் தீவிரமாக அதிகரித்ததன் விளைவாக உபரி உற்பத்திப் பொருள் ஏற்பட்டது; அது படிப்படியாக செல் வத்தைத் திரட்டுகின்ற தோற்றுவாயாக மாறியது.

இந்த வளர்ச்சிகள் குல் உறுப்பினர்களுக்கு இடையில் உடைடைய வேறுபாடுகளைத் தோற்றுவித்தன. புதிய நிலை மைகளின் விளைவாக தனிக் குடும்பம் கூட்டுச் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை; ஏனென்றால் இப் பொழுது குடும்பம் தனித்து வாழ முடியும். கால்நடை வளர்ப்பு, இரும்பு தயாரித்தல், உலோக வேலை, நெசவு, தானிய விவசாயம் ஆகியவை கூட்டுச் சமூகத்தை விட்டு வெளியேறுவதற்கும் குலத்துக்குச் சொந்தமான கால்நடை மற்றும் கருவிகளில் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்கும் பொருளாயதத் தூண்டுதலாக இருந்தன. ஆக, குலத்துக்குச் சொந்தமான கால்நடையின் ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வ தென்றால் குடும்பத் தலைவன் என்ற முறையில் கணவனின் உடைமையாக மாறியது. கால்நடை மந்தை மட்டு மன்றி குடும்பத்தின் உறுப்பினர்களும் கணவனின் தனி அதிகாரத்தின் கீழ் வந்தனர். தந்தைவழிக் குடும்பத்தில் அடிமைகளும் இருந்தார்கள் (யுத்தக் கைதிகள் கொல்லப் படவில்லை, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் உபரிப் பொருளை உற்பத்தி செய்ய முடியும்). அக்குடும்பம் குடும்பத் தலைவன் என்ற முறையில் தகப்பனாருடைய தனி அதிகாரத்தைப் பிரதிபலித்தது.

தந்தைவழி உரிமை நிறுவப்பட்டு குழந்தைகள் பரம் பரை வழியாகச் சொத்தைப் பெற முடிந்தது. குடும்பத் துக்குள் செல்வக் குவிப்புக்குச் சாதகமாக அமைந்தது, குலத்துக்கு எதிராக குடும்பத்தைப் பலப்படுத்தியது. மாறும் காலகட்டத்தில் கூட்டுச் சமூகம் மேய்ச்சல் நிலம், எல்லா தரிசு நிலம், கருவிகளில் சிலவற்றை இன்னும் உடைமையாக வைத்திருந்தது. அவை படிப்படியாகத் தமனியுடைமையாக மாறின அல்லது குடும்ப சமூகங் களுக்கு இடையில் அவ்வப்பொழுது மறுவினியோகம் செய்யப்பட்டன.

ஆக, தனியுடைமையின் தோற்றம் பொருளாதாரத் துறையில், குலமரபு அமைப்பின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் அமைந்திருப்பது தெரிய வரும். அதன் தோற் ரத்தின் விளைவாக மனிதனை மனிதன் சுரண்டுவது எற்பட்டு, அது தன் பங்கிற்கு முரணியல்பான சமூக-பொரு ளாதார அமைப்புகளைத் தோற்றுவித்தது.

அது முதல், வரலாற்றுப் போக்கில் ஒன்றுக்கு பதில் மற்றொன்றாகத் தோன்றிய தனியுடைமையின் மூன்று வடிவங்களின் அடிப்படையில் அமைந்த வர்க்கப் (பகை முரணியல்பான சமூக-பொருளாதார அமைப்புகளின் (அடி மை உடைமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்பு களின்) வரலாறு தொடங்கியது, ஆனால் முதலாளித் துவத்திற்குள்ளாகவே தனியுடைமையை ஒழிப்பதற்கான நிலைமைகள் தோன்றி வளர்ச்சியடைகின்றன.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

2) பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டு சமூகம் - ஹா.சபிரொவ்


பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டு சமூகம். பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் கம்யூனிச இயல்பு துல்லியமாக எப்படி வெளிப்பட்டது? பூர்விக சமூகத்தில் தனியுடைமை மற்றும் அதன் விளைவான மனிதனை மனிதன் சுரண்டல் இல்லை. பூர்விக மக்கள் தொடக்க காலத்தில், குறிப்பாக அவர்களுடைய சமூக வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் உபயோகித்த கருவிகள் மிகவும் குறை வான உற்பத்தித் திறனையே கொண்டிருந்தன. மக்களின் கூட்டு வேலைகளில் மட்டுமே அவற்றைத் திறமையுடன் பயன்படுத்த முடியும் (உதாரணமாக, குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடுதல், நிலத்தைக் கூட்டாக உழுதல், வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பிராணிகளைக் காட்டு மிருகங்களிட மிருந்து பாதுகாத்தல், இதரவை). கருவிகளின் தன்மையும் அவற்றின் கூட்டு உபயோகமும் தனியுடைமையை இய லாமற் செய்தன, பொது, கூட்டுச் சமூக உடைமையை பூர்.விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பின் பொருளாதார அடிப்ப மடையாகச் செய்தன.

பூர்விகக் கூட்டுச் சமூகங்களின் உற்பத்திச் சக்திகள் (பூர்விகமான கருவிகளை உபயோகப்படுத்துவது) சமூக இயல்பைக் கொண்டிருந்தன. அவை கூட்டு நடவடிக்கையின் மூலம் வளர்ச்சி அடைந்தன, உழைப்பின் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தன. உற்பத்தி ரீதியான மற றும் இதர சமூக உறவுகள் தனியார் இயல்பைக் கொண்டிருக்கவில்லை, கூட்டு இயல்பைக் கொண்டிருந்தன. பூர்விக மனிதன் தனியாக இருக்கும் பொழுது இயற்கைச் சக்தி கள் மற்றும் காட்டு மிருகங்களுக்கு முன்னால் பாதுகாப்பற் றவனாக இருந்தான். பூர்விக மக்களின் பலம் அவர்கள் டை எண்ணிக்கையில் இருந்தது. குழுக்களாக இருக்கும் பொழுது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு உயிர் பிழைக்க முடிந்தது, அதன் மூலம் குல் அமைப்பு மேலும் வளர்ச்சி அடைந்தது.

குல அமைப்பில் எல்லாப் பொருளாயத மதிப்புகளும் சம்மாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கூட்டுச் சமூகத்தின் ஒவ் வொரு உறுப்பினரும் தொடர்ந்து வாழத் தேவையான பொருட்கள் கூட்டாக உற்பத்தி செய்யப்பட்டன. பூர்விக. மான, குறைந்த உற்பத்தித் திறனைக் கொண்ட கருவிகள், உபரி உற்பத்திப் பொருட்கள் இல்லாமை, அற்பமான உழைப்புப் பிரிவினை ஆகிய காரணங்களினால் அவை சமமாக மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட முடியும்.

எங்கெல்ஸ் தன்னுடைய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் குலமரபு அமைப் பில் மனிதர்களின் வாழ்க்கைக்குரிய கம்யூனிச அம்சங் களை வர்ணித்தார்; இவ்வமைப்பு வெகுளித்தனமாக இருந் தாலும் அது அற்புதமானது என்று எழுதினார். இரா ணுவம், போலீஸ், நீதிபதிகள், சிறைகள், வீங்கிப் போன, சிக்கலான அரசாங்கப் பொறியமைவு ஆகியவற்றைத் தன் னகத்தே கொண்டிருக்கின்ற அரசு இந்த அமைப்புக்கு அவசியமல்ல; ஏனென்றால் பூர்விகப் பொதுவுடைமைக் கூட்டுச் சமூகங்களின் உறுப்பினர்கள் சுரண்டல், ஒடுக்கு முறை, செல்வர்கள் மற்றும் எழைகள், சலுகை உடையோர் மற்றும் எவ்விதச் சலுகையும் இல்லாதவர்கள், மேலதி காரம் ஆகிய கருதுகோள்களை அறியாதவர்கள். அங்கே அடிமைகள் இல்லை; எல்லோரும் சமமானவர்களாக, சுதந்திரமானவர்களாக இருந்தார்கள்.

பொதுவுடைமைக் கூட்டுச் சமூகம் நோயாளிகளையும் மதிய உறுப்பினர்களையும் பராமரித்தது. நிலம் இனக் குழுவின் பொது உடைமையாக இருந்தபடியால் சில குடும் பத்தினர் ஒன்றுசேர்ந்து உழைத்தனர். சிறு நிலங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே தனிப்பட்ட உடைமையாக இருந்தன.

குலத்தின் பேரவைக் கூட்டங்கள், மூத்தோர் கவுன்சில், சமமான உரிமைகளும் கடமைகளும், மொத்தமாக குலத் தின் மற்றும் தனித்தனியாக உறுப்பினர்களுடைய நலன் களைப் பாதுகாத்தல் ஆகியவை பூர்விக ஜனநாயகமாகும், எல்லோரும் கூட்டு சமூகத்தின் விவகாரங்களில் நேரடியாகப் பங்கெடுத்து முடிவு செய்வதற்கு அது 2 தவியது. கூட்டுச் சமூகத்தின் உறுப்பினர்களின் ஒழுக்கத்திலும் நடத்தை யிலும் ஆணவம், பேராசை, பொறாமை, சுயநலம், செல் வத்தைத் திரட்டுகின்ற வெறி கிடையாது. குலங்களுக்கு ((இனக்குழுக்களுக்கு) உள்ளேயும் குலங்களுக்கு இடையிலும் எழுகின்ற தகராறுகள் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப் பினரும் பங்கெடுக்கின்ற சகூடங்களில் தீர்க்கப்பட்டன. இரத்தப் பழி வாங்கும் சண்டைகள் அபூர்வமாக நடந்தன.

பூர்விக சமூகம் இலட்சிய சமூகம் அல்ல; அது மனித குலத்தின் குழந்தைப் பிராய்த்துப் புராதன, நயமில்லாத கம்யூனிச வடிவம், அது சமூக வளர்ச்சியில் அழியுமாறு விதிக்கப்பட்டது. வரலாற்று ரீதியில் எதிர்காலம் இல்லாத குலமரபு அமைப்பு காலப் போக்கில் சமூக முன்னேற்றத் துக்குத் தடையாக இருந்தது.

மனித சமூகத்தின் வரலாற்றில் முதல் கட்டம், ஒரு சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு, எதிர்காலத்தில் மெய்யான கம்யூனிசத்தை சாதிப்பதற்கு முன்னேற்றத்தைத் தொடங்கியது என்ற முறையில் பூர்விக கம்யூனிசம் நமது கவனத்தைக் கவர்கிறது.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

1) மனிதனின் தோற்றமும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையும்- ஹா.சபிரொவ்


மனிதனின் தோற்றமும் மனிதக் கூட்டத்தின் வாழ்க்கையும். மனித சமூகத்தின் இருத்தலும் வளர்ச்சி யும் உற்பத்தி மற்றும் புனருற்பத்தியின் இரண்டு ரகங் களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன: உழைப்புக் கருவிகளைக் கொண்டு வாழ்க்கைச் சாதனங்களை (உணவு, உடை, வீடு) உற்பத்தி செய்தல், மனிதனை உற்பத்தி செய் தல். பிந்தியது வரலாற்று ரீதியில் வளர்ச்சியடைகின்ற குடும்ப வடிவங்களில் நடைபெறுகிறது. பூமியில் மனிதன் மற்றும் சமூகத்தின் தோற்றத்தின் வரலாற்று ரீதியான நிகழ்வுப் போக்கைப் புரிந்து கொள்வதில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும். - மனிதக் குரங்கின் இனத்திலிருந்து மனிதன் வளர்ச்சிய! டைந்திருக்கிறான் என்பதை மாபெரும் பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் (1809-1882) தன்னுடைய பரிணாமத் தத்துவத்தின் மூலமாக நிரூபித்தார்; ஆனால் சமூகங்களைப் படைத்து அவற்றில் வாழ்கின்ற தகுதி கொண்டவனாக மனிதன் வளர்ச்சியடைந்தது என் என்பதை அவருடைய தத்துவம் விளக்கவில்லை. எங்கெல்ஸ் மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்னும் நூலில் இதை விளக்குகிறார். உழைப்பே மனிதனைப் படைக்கிறது, பூர்விக டனிெதர்களிடையில் உழைப்புச் செயல்முறையின் போது சமூகப் பிணைப்புகளும் உறவுகளும் தோன்றின என்பதை அவர் நிரூபித்தார்.

பூர்விக மனிதன் உழைப்பின் மூலம், முகிழ்த்துக் கொண்டிருந்த சமூகக் காரணிகள் மூலம் நீண்ட, பரிணாமக் கட்டத்தைக் கடந்து வந்தான். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, பூர்விகக் கூட்டு வாழ்க்கை அமைப்பு அதன் வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய பொழுது அவன் அறிவுடைய மனிதன் (Homo sapiens) ஆனான்.

முதல் மனிதர்கள் பூர்விக மனிதக் கூட்டங்களில் கூடி வாழ்ந்தார்கள். உணவைச் சேகரித்தலும் வேட்டையாடு குலும் (சுவீகரிக்கின்ற பொருளாதாரம்) அவர்களுடைய மக் கியமான தொழிலாக இருந்தன. பூர்விகமான முறையில் கூராக்கப்பட்ட அல்லது சாதாரணக் கம்புகள், கற்கள் மற்றும் பிராணிகளின் எலும்புகள் அவர்களுடைய கருவிகளாக இருந்தன.

இக்கட்டத்தில் கூட்டு வாழ்க்கை பூர்விக சமூக வாழ்க் கையின் அடிப்படையான ஸ்தாபனக் கோட்பாடாக இருந் தது. பூர்வீக மனிதர்களின் கூட்டுச் சமூகத்தில்தான் கருவி களைத் தயாரிக்க முடியும், பயன்படுத்த முடியும், அபி விருத்தி செய்ய முடியும். கூட்டு உழைப்பு பூர்விகமான கூட்டுறவின் வடிவத்தை (பெரிய மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிப்பதைப் போல) அடைந்தது. உற்பத்தி நட வடிக்கைகள் முன்னேற்றமடைந்த பொழுது பால் மற்றும் வயதின் அடிப்படையில் இயற்கையான உழைப்புப் பிரிவினை ஏற்பட்டது. மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டை யாடினார்கள்; பிற்காலத்தில் மீன் பிடித்தார்கள். பெண் கள் வீட்டைக் கவனித்துக் கொண்டார்கள், குழந்தைகளை

வளர்த்தார்கள், கிழங்குகள், பழங்கள், கொட்டைகளைச் சேகரித்தார்கள். கிழவர்கள் கருவிகளைத் தயாரித்தார்கள். "பால் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்ட இயற்கை யான உழைப்புப் பிரிவினை கட்டுறவை ஊக்குவித்து கூட்டு உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியது. | பொதுக் குடியிருப்பு பூர்விக மனிதர்களுடைய வாழ்க் ைெகயின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையாக இருந்தது. உணவுப் பொருட்களைச் சேகரிக்கின்ற மற்றும் வேட்டையாடுகின்ற பிரதேசம், குடியிருப்பு, படகுகள், மீன் பிடிக்கின்ற வலைகள், இதரவை பொதுச் சொத்தாக இருந்தன. உழைப்புக் கருவிகள் குலத்துக்கு முந்திய கூட்டுச் சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் பிரிக்கப் பட்டன; இக்கருவிகள் கூட்டு உழைப்பில் பயன்படுத்தப் பட்டன. சில முதலாளித்துவப் பொருளியலாளர்கள் கூறு வதைப் போல அவை தனியுடைமையின் ஒரு வடிவம் அல்ல. உணவு சேகரித்தலில், கூட்டு அல்லது தனிப்பட்ட வேட்டையில் கிடைத்த உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பூர்விக மனிதக் கூட்டத்தில் சமூகப் பிணைப்புகளும் உறவுகளும் மெதுவாக, ஒவ்வொரு படியாக வளர்ச்சி யடைந்தன. மனிதர்களைப் புனருற்பத்தி செய்தல் சமூக வரையளவுகளினால் இன்னும் ஒழுங்குப்படுத்தப்படவில்லை; அவர்களுடைய பாலியல் உறவுகள் முறையான இயல்பைக் கொண்டிருக்கவில்லை.
(கம்யூனிசம் என்றால் என்ன? -முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ 1987)

பூர்விக கம்யூனிசமும் அது அழிக்கப்பட்டதன் சமூக விளைவுகளும்


கம்யூனிசம் என்றால் என்ன?

ஹா.சபிரொவ்

முன்னேற்றப் பதிப்பகம்
மாஸ்கோ-1987







Monday, 25 February 2019

மார்க்சியம் பயில்வது பற்றி லெனின்


இன்று பல முற்போக்கு இளைஞர்கள் மார்க்சியத்தைப் படித்தறிய ஆவல் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், எவ்வாறு படித்தறிவது என்பது பற்றி லெனின் காட்டியுள்ள வழிகாட்டுதல்கள் இங்கே தொகுக்கப்படுகிறது. முக்கியமாக இரண்டு சொற்பொழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று “இளைஞர் கழகங்களின் பணிகள்” என்ற சொற்பொழிவு, மற்றொன்று “அரசு” என்பது பற்றிய சொற்பொழிவு.

முதல் சொற்பொழிவு, ருஷ்யாவின் இளங் கம்யூனிஸ்டக் கழகத்தின் மூன்றாவது அனைத்து ருஷ்யக் காங்கிரசில் நிகழ்த்திய (02-10-1920) சொற்பொழிவு. ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடைபெற்ற பிறகு நிகழ்த்தப்படும் சொற்பொழிவாகும். இந்தச் சொற்பொழிவு ருஷ்ய இளைஞர்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ளதால், இன்றைய இளைஞர்களுக்கும் இது வழியாட்டியாக இருக்கும்

மார்க்சியத்தை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் “கற்றறியுங்கள்” என்பது தான் பதிலாக இருக்கும். இது மிகமிகப் பொதுப்படையான பதிலாகும். எதைக் கற்றறிவது, எப்படிக் கற்றறிவது என்ற முதன்மையான கேள்விக்கு இது பதில் அளிக்கவில்லை.

மார்க்சிய அறிஞர்கள் எழுதிய நூல்களிலும், பிரசுரங்களிலும் அடங்கியுள்ள அறிவை ஏற்றுக்கொள்வதே கம்யூனிசத்தைக் கற்றறிவதாகும் என்பதே பொதுவாக ஒருவருக்கு மனதில் தோன்றும். கம்யூனிசத்தைப் பயிலுவதற்கு இவ்வாறு கூறும் இலக்கணம் மிதமிஞ்சிய கொச்சைப்படுத்துவதும், குறைப்பாடுடையதுமாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.

கம்யூனிஸ்டு நூல்களில் இருப்பதை ஏற்றுக் கொள்வதே போதுமானதாகக் கருதினால், கம்யூனிச வார்த்தைகளைப் பேசி வித்தைக் காட்டுவேரை அல்லது வாய்சவடால்காரர்களையே உருவாக்கும். நூல்களில் மட்டும் கம்யூனிசத்தைப் படிப்பது என்பது தீங்கையே ஏற்படுத்தும். ஏன் என்றால் இத்தகையோர் கம்யூனிஸ்டு நூல்களில் எடுத்துரைக்கப்பட்டதைப் படித்துத் தெரிந்து கொண்டபின், படித்ததைப் பல்வேறு துறைகளைச் சேர்த்து இணைத்திடும் திறனற்றோராகவே இருப்பர், அவசியமான செயற்பாடு இவர்களிடம் இல்லாது போகும்.

இந்த எச்சரிக்கை, கம்யூனிசத்தை நூல்களில் படித்தறிய வேண்டாம் என்று கூறவில்லை. நூல்களில் படித்துப் பெற்ற அறிவோடு நின்று விடுகிற தவறைத்தான் சுட்டிக்காட்டுகிறார். வேலையில் ஈடுபடாமல், போராட்டம் செய்திடாமல் கம்யூனிஸ்ட் நூல்களைப் படித்துப் பெறப்பட்ட அறிவு சிறிதும் பயனற்றது. அதைவிடக் கம்யூனிஸ்ட் முழக்கங்களை ஏற்றுக் கொள்வது அதைவிட அபாயகரமானதாகும். இந்த அபாயத்தைத் தக்க காலத்தில் உணர்ந்து தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு அபாயமும் இருக்கிறது. அது மார்க்சியத்தைத் தவிர மற்றது எதையும் பாடிக்காதிருத்தல்.

மனித குலம் சேகரித்திருக்கும் அறிவுச் செல்வத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது. அறிவின் கூட்டுத் தொகையினால் விளைந்த பயனே கம்யூனிசம். இந்தக் கூட்டுத் தொகையான அறிவைப் பெறாமலே, கம்யூனிச முழுக்கங்களையும் கம்யூனிசத்தின் முடிவுகளையும் அறிந்து கொண்டால் போதும் என நினைப்பது தவறாகும். 

லெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற சிறு கட்டுரையைப் படித்தாலே இதனை உணரலாம். தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்கிற மார்க்சியத்தின் உட்கூறுகள் வந்தடைந்த வழிகளை அதில் லெனின் எடுத்துக்காட்டியுள்ளார்.

மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று, சிந்தனையை வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே கம்யூனிஸ்ட் ஆக முடியும் என்கிறார் லெனின்.

விமர்சனக் கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்ட், தயாராக வரையறுத்து வைக்கப்பட்டுள்ள முடிவுகளைத் தெரிந்து கொண்டுவிட்ட ஒரே காரணத்தால் தனது கம்யூனிச அறிவை மெச்சிப் புகழ்வாராயின் உண்மையில் அவர் பரிதாகத்துக்குரிய கம்யூனிஸ்டுதான் என்கிறார்.

மேலும் கூறுகிறார், ஒரு கம்யூனிஸ்ட், எதையும் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பபானவரா முடியவே முடியாது.

கம்யூனிசத்தை எவ்வாறு பயில வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாக லெனின் கூறுகிறார், “இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும் சுரண்டலாளர்களது பழைய சமூகத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.” இதுதான் பதில். அனைத்துப் படிப்பையும் இவ்வாறுதான் படிக்க வேண்டும்.

ஒர் உதாரணத்தின் மூலம் லெனின் விளக்குகிறார். என்றும் மாறாத நிலையான ஒழுக்கநெறியில் கம்யூனிஸ்டுகளுக்கு நம்பிக்கை இல்லை. சமூகம் வர்க்கமாகப் பிரிந்த பிறகு பொதுவான ஒழுக்கநெறி இருக்க முடியாது என்பதை லெனின் சுட்டிக்கிறார். “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்“ என்ற நூலில் லெனின் இதனை மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்- என்கிறார் லெனின். இங்கே கூறியுள்ளபடி ஒன்றை படித்தறியும் போது அதன் பின்னுள்ள வர்க்க நலனின் அடிப்படையில் அணுகவேண்டும்.

கம்யூனிஸ்டுகளுக்கு ஒழுக்கநெறிக் கிடையாது என்ற பொய் பரப்புரையை இன்றுவரை செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஒழுக்கநெறி இருக்கிறது, அது பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் அடங்கியிருக்கிறது. பாட்டாளிகளின் ஒழுக்கநெறி வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்து தோன்றுகிறது. இந்த ஒழுக்கநெறி மனித சமூகம் மேலும் உயர்ந்த நிலைக்கு வளர்வதற்கும், உழைப்புச் சுரண்டப்படுவதை ஒழித்துத் தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் பணி புரிகிறது.

மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒழுக்க நெறியையும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கின்றனர். மேலே லெனின் குறிப்பிட்டது போல அனைத்து சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்கிறது. இதனை அறியாமல் போனால் வர்க்க சமூகத்தில் ஏமாளியாகவே கிடப்பர்.

அனைத்து நூல்களையும் சுரண்டலாளர்களது சமூகத்தை எதிர்த்து உழைப்பாளிகள் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலேயே படிப்பு, பயிற்சி, கல்வி, போதனை ஆகியவைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து “அரசு” என்பது பற்றிப் பல்கலைக் கழகத்தில் லெனின் ஆற்றிய உரைக்குச் செல்வோம். இங்கு அரசு பற்றிக் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த விளக்கமே அனைத்தையும் பற்றிப் புரிந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இருக்கும்.

அரசு என்பது பற்றி, முதல் முறையாக அணுகுகிறீர்கள் என்றால், இந்தக் கடினமான பொருள் பற்றி முதல் பேச்சில் தெளிவு ஏற்படும் என்று கூறிவிட முடியாது. முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் ஆகியோர் மற்ற எந்தப் பிரச்சினையையும்விட அரசு பற்றியே அதிகமாகக் குழப்பியிருக்கின்றனர். அதனால் முதல் பேச்சில் ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது சாத்தியமல்ல. இந்த உரையைக் கேட்டப்பின் விளங்கிக் கொள்ளாத அல்லது தெளிவில்லாத இடங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறித்து வைத்தவற்றுக்குத் தொடபுடைய படிப்பினாலும், தனிப்பட்ட விரிவுரைகளாலும், உரையாடல்களாலும் விளக்கம் பெறலாம் என்கிறார் லெனின்.

அடுத்து, விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்க்சும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களில் சிலவற்றையேனும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார்.

கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளுதல், அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல் மட்டுமே ஒருவரை சிறந்த கம்யூனிஸ்ட் செயற்பாட்டளராக உருவாக்கிவிட முடியாது. கண்டிப்பாக மார்க்சிய அடிப்படை நூல்கள் சிலவற்றையேனும் படிக்க வேண்டும்.

“டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் எங்கெல்ஸ் கூறுகிறார். தத்துவ முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது. ஆகப் படித்தறியாமல் திறமையான செயற்பாட்டாளராக முடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

படிப்பு என்பது நடைமுறைக்கு அப்பாற்பட்டதல்ல, நடைமுறை என்பது படிப்புக்கு அப்பாற்பட்டதும் அல்ல. இரண்டும் இணைந்தே நடைபெற வேண்டும். படிப்பு தனியாகவும் செயற்பாட்டைத் தனியாகவும் பிரிக்க முடியாது. கோட்பாட்டையும் பழைய நடைமுறையையும் படித்துத்தான் அறிய முடியும். இன்றைய நடைமுறை அடுத்து வருபவர்கள் அறிய வேண்டுமாயின், இன்றைக்கு எழுதிவைத்த நடைமுறையும், நடைமுறையால் உருவாக்கிய கோட்பாடுகளையும் நூல்களின் வாயிலாகவே படித்தறிய முடியும். படிப்பு என்பது நடைமுறையோடும், நடைமுறை படிப்போடும் தொடர்புடையதேயாகும்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களை முதன்முறையாகப் படிக்கும் போது, அதில் காணும் விளக்கவுரையின் கடுமை காரணமாக, சிலருக்குத் திகில் உண்டாகலாம், அதனால் ஏதும் கலக்கம் அடைய வேண்டாம் என்கிறார் லெனின். முதல் முறையாகப் படிக்கும் போது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் போது அல்லது பின்னர் அந்தப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட கோணத்தில் அணுகும் போது தெளிவுகிட்டும்.

கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் அரசு பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். அரசியல் முழுமைக்கும் இது அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். பொருளாதாரம் அல்லது அரசியல் பிரச்சினையோடு இது தொடர்புடையதாக இருப்பதனால், அரசியல் செயற்பாட்டாளர்கள் அவ்வப்போது இப்பிரச்சினையை எதிர்கொள்வர்.

அரசு என்பது என்ன?

அதன் தன்மையாது?

அதன் முக்கியத்துவம் என்ன?

முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்குப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு விஷயத்தில் கொண்டுள்ள நிலை என்ன?

கட்சியின் செயற்பாட்டாளர்கள் இந்தப் பிரச்சினையைப் பிறர் துணையில்லாமல் அணுகும் ஆற்றலைப் பெற்று இருக்க வேண்டும், இதன் அவசியத்தை எதிரிகளோடு விவாதிக்கும் போது உணர்ந்திருப்பர். ஆதலால் படிப்பதுடன் அதுபற்றி உரையாடல்கள், விரிவுரைகள் ஆகியவற்றின் துணையோடு, இந்தப் பிரச்சினையை அணுகும் ஆற்றலை பெறுவது முக்கியமாகும். பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் எதிரிகளை வெல்வதற்கும் இந்தப் பயிற்சி அவசியமாகும். கொள்கைத் துணிபுகளில் போதியளவு உறுதி கொண்டர்வர்களாக அப்போது தான் விளங்கமுடியும்.

அரசு பற்றிய பிரச்சினையில் முதலாளித்துவ அறிஞர்கள் குழப்பியுள்ளனர். இப்பிரச்சினை இதுநாள் வரையில் மதம் பற்றிய பிரச்சினையோடு அடிக்கடி பிணைத்து விடுகின்றனர். மதப் போதனைகளைப் பின்பற்றுவோர்கள் மட்டும் அன்றி, மதப்பிடிப்பில் இருந்து விடுபட்டவர்களும் அரசு என்ற தனிப் பிரச்சினையை, மதம் பற்றிய பிரச்சினையோடு சேர்த்து குழப்புகின்றனர்.

. சமூகச் சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்தும் வகையில், முதலாளித்துவம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், அரசு பற்றிய போதனை செயல்படுகிறது. இந்தப் பிரச்சினை சுரண்டும் வர்க்கங்களின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைக்கப் பட்டுள்ளது

அரசு பற்றிய பிரச்சினையை விஞ்ஞான முறையில் அணுகுவதற்கு, அரசு என்பதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்றை மேலோட்டமாகவாவது பார்வையிட வேண்டும். ஒவ்வொரு பிரச்சியையையும் இவ்வாறு தான் அணுக வேண்டும்.

குறிப்பிட்ட பிரச்சினையை ஆராயும் போது, அந்த நிகழ்ச்சி வரலாற்றில் எவ்வாறு தோன்றியது, அது தன் வளர்ச்சிப் போக்கில் என்னென்ன முக்கியமான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது, குறிப்பிட்ட அப்பொருள் இன்று என்னவாக ஆகியிருக்கிறது என்பதை ஆராய்வதே மார்க்சிய விஞ்ஞான அணுகுமுறையாகும் என்கிறார் லெனின்.

அரசு என்பது இல்லாத காலம் ஒன்று இருந்தது என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்களோ அப்போது அங்கே அரசு தோன்றுகிறது.

வர்க்கங்கள் பிரிவுபடுவதற்கு முன்பான சமூகத்தை ஆதி கம்யூனிச சமூகம் என்று அழைப்பர். அங்கே அரசு என்ற ஒன்று இருந்ததற்கு உரிய அறிகுறிகளே தென்படவில்லை. வழக்கம், மரபு ஆகியவற்றின் ஆதிக்கத்தையும், குலத்தலைவரிகளின் அதிகாரத்தையும் தான் காணமுடிகிறது. இந்த அதிகாரம் அந்தக் காலத்தில் மகளீருக்கு அளிக்கப்பட்டிருந்தது. தாய்வழி சமூகமாக இருந்து.

இச் சமூகத்தில், மக்களை பலாத்காரத்தால் அடிமைப்படுத்த ஒரு தனி இயந்திரம் தேவைப்படவில்லை. வர்க்க சமூகம் தோன்றிய போது பலாத்காரத்தால், உழைக்கும் மக்களை அடிப்படைப்படுத்த அரசு என்ற இயந்திரம் தேவைப்பட்டது, பிறருடைய சித்தத்தை வலுவந்தமாகப் பணிய வைக்கக்கூடிய ஒரு விசேஷ இயந்திம் தேவைப்படும் போது அரசு தோன்றியது. அந்த அரசு இயந்திரம், சிறைச்சாலைகள், விசேஷப் படைகள், இராணுவம் முதலியவைகளை உள்ளடக்கி இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வை தொகுப்பாய் கூறுகிறார்.

எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக் கொள்ள முடிகிறதோ, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாகப் பிரிந்ததோ, அங்கு அப்போது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.- என்கிறார் லெனின்.

சட்டங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றின் மூலமாக ஆட்சி புரிவதாகச் சுரண்டும் வர்க்க அறிஞர்கள் கூறினாலும் பலாத்காரத்தினாலேயே மக்கள் அடக்கப்படுகிறார்கள். மக்களில், மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்கள் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மீது பலாத்காரம் இல்லாது ஆதிக்கம் செலுத்த முடியாது. இதனைத் தொடக்கக் காலத்தில் இருந்தே காணலாம்.

ஆதிகாலக் குண்டாந்தடி மூலமோ, அல்லது அடிமை முறையின் காலக் கட்டத்தில் இன்னும் அதிகம் மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ அல்லது கடைசியாக இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுணுக்கத்தின் அதிசயங்களாக உள்ள, இன்றைய தொழில்நுட்பக் கலையின் மிகப் புதிய சாதனைகளை ஆதாரமாகக் கொண்ட நவீனக் கருவிகள் மூலமோ, இந்தப் பலாத்காரம் மக்கள் மீது செலுத்தப்படுகின்றனது- என்கிறார் லெனின்.

கருவிகளைப் போலவே அரசு வடிவங்களும் அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்ப மேற்கட்டமைப்பாக உள்ளது.

அடிமை முறை அரசில் முடியரசும், உயர்குடி மக்களின் குடியரசும், ஜனநாயகக் குடியரசுங்கூட இருந்ததைக் கண்டோம். உண்மையில் ஆட்சி முறையின் வடிவங்கள் மிகமிக வேறுபட்டன. ஆயினும் அவற்றின் சாரம் எப்போதும் ஒன்றேதான்- என்கிறார் லெனின்.

மூலதனத்தின் கரங்களில் தான் அதிகாரம் இருக்கிறது. உண்மையில் குடியரசு எவ்வளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும் அதிக இரக்கமற்றதாகவும் இருக்கிறது.

பாட்டாளி வர்க்கம் அரசின் வர்க்கத் தன்மையை அறிந்த கொண்டுவிட்டது.

அரசு என்பதற்கு அனைத்து மக்களினுடைய ஆட்சி என்ற பழங்கதைகளை நம்பிக் கொண்டு, மூடத்தனமாகப் பயபக்தியுடன் மக்கள் அதன்முன் மண்யிட்டு நின்றார்களே, அந்த அரசு எனும் இயந்திரத்தைப் பாட்டாளி வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அது முதலாளித்துவப் பொய் என்று சாற்றுகின்றது- என்கிறார் லெனின்.

இந்த அரசு எப்போது தேவையற்றுப் போகும் என்பதை இந்தச் சொற்பொழிவின் இறுதியில் கூறியுள்ளார்.

சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போன போது, நிலச் சொந்தக்காரர்களும், ஆலைச் சொந்தக்காரர்களும் எங்குமே இல்லை எனும்போது, சிலர் மட்டும் வாரிவாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே கிடையாது எனும் நாளில்தான், இந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். அப்போது அரசென்பதும் இருக்காது, சுரண்டலும் இருக்காது. நம் கம்யூனிஸ்டுக் கட்சியின் நோக்கு இதுவே- என்று கூறி இச்சொற்பொழிவை லெனின் முடிக்கிறார்.

இந்தச் சொற்பொழிவில் லெனின், ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை படிக்கும்படி வலியுறுத்துகிறார். அவ்வாறு கூறும்போது அந்நூலைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுக்கிறார்.

நவீன சோஷலிசத்திற்குரிய அடிப்படை நூல்களில் இது ஒன்று, அதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நம்பிக்கையோடு ஏற்கலாம், அதாவது, அவ்வாக்கியம் மனம் போனவாறு கூறப்பட்டதன்று, வரலாற்று அரசியல் சம்பந்தமாக அளவற்ற விவரங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற உறுதியோடு ஏற்கலாம். இந்த நூலின் எல்லாப் பகுதிகளும் ஒரே நிகராகச் சகலருக்கும் புரியக்கூடிய வகையில் எடுத்து விளக்கப்படவில்லை என்பதில் ஐயம்ல்லைதான். வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவுடைய வாசகரை மனதிற்கொண்டே நூலின் சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் இந்த நூலைப் படித்ததும், அதை உடனேயே புரிந்துகொள்ளாவிடில், நீங்கள் கலக்கமுற் கூடாது என்று நான் மீண்டும் சொல்லுகிறேன். இந்நூலை எடுத்த எடுப்பில் புரிந்துகொள்வது எவருக்கும் அரிது. பின்பு, உங்கள் ஆர்வம் தூண்டிவிடப்படும் போது, அதை மீண்டும் படித்தீர்களானால், அதனை முழுக்கவும் இல்லாவிட்டாலும், அதன் பெரும் பகுதியைப் புரிந்து கொள்வதில் வெற்றியுறுவீர்கள். நான் இந்நூலைக் குறிப்பிடுவதன் காரணம் யாதெனில் இங்குக் குறிக்கப்பட்ட பொருளில் இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கான சரியான வழியை அது காட்டுகின்றது- என்று லெனின் கூறியுள்ளார்.

எங்கெல்ஸ் எழுதய நூலைப் பற்றி லெனின் இங்கு இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அச்சுறுத்துவதற்காக அல்ல. அதனைப் படிப்பதற்கு மெனக்கெட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இவ்வாறு கூறியுள்ளார். இந்த எங்கெல்சின் நூலைப் படிப்பதற்கு முன் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலை முதலில் படித்துவிட்டு எங்கெல்சின் நூலைப் படிக்கலாம். ஏன் என்றால் லெனின் தமது நூலில் எங்கெல்ஸ் மார்க்ஸ் கூறியவைகளை மேற்கோள்காளாகக் கொடுத்து விளக்கியுள்ளார். லெனினது இந்நூல் சுருக்கமாகவும் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துக்களைத் தொகுக்கப்பட்டதாகவும் இருக்கிறது. லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” நூலைப் முதலில் படிப்பது, எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலைப் படிப்பதற்குத் துணைபுரியம்.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நிறைய, பெரிய மேற்கோள்களை லெனின் தமது நூலில் பயன்படுத்தியது பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார்.

“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாயக் கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாகவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுதான் விஞ்ஞானச் சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிராயத்தை வந்தடைய முடியும், இக்கருததுக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நிரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.”
(அரசும் புரட்சியும்)

வாசகர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தினாலும் மேற்கோளிட்டு எழுதுவதற்குக் காரணம் ஆதாரத்துடன் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கேயாகும். இவ்வாறு மேற்கோளிட்டு எழுதுவது பற்றி லெனின் மற்றொர் இடத்திலும் வலியுறுத்தியுள்ளார்.

“மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களது நேரடியான எழுத்துக்களில் இருந்து வேண்டும் என்றேதான் விரிவான மேற்கோள்கள் எடுத்துக் கூறியுள்ளோம். வாசகர் இவற்றை ஒட்டு மொத்தமாய்ப் பரிசீலனை செய்து பார்க்கும் பொருட்டே இவ்வாறு செய்துள்ளோம். இவை அவசியம் படித்தறிய வேண்டியவை. கவனமாய்ச் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவை.”
(ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்)

இளம் மார்க்ஸ் - முதுமார்க்ஸ் என்று மார்க்சைப் பிரித்து மார்க்சியத்தைச் சிதைக்கும் போக்கு இன்றும் அதிகமாகவே காணப்படுகிறது. மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்ததில் முதல்வரிசையில் இருப்பவர் பிளாகனவ். லெனினும் மார்க்சிய திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தியுள்ளார். திருத்தும் வேலை இன்றும் தொடர்வதால், அதனை எதிர்த்து மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்களாக ஆதாரத்துடன் நிறுவேண்டியது அவசியமாகிறது.

லெனின் கூறியதையே 99.99% இந்தத் தொகுப்பில் கூறியுள்ளேன். எனது படிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஒன்றை மட்டுமே கூறலாம். மார்க்சிய அடிப்படை நூல்களைப் படிக்கும் போது அந்நூலின் தொடக்கப் பகுதி புரிந்து கொள்ள முடியாது போனாலும், தொடர்ந்து முழுவதையும் ஒருமுறை படித்துவிட வேண்டும். ஒரு முறை முழுமையாக வாசித்துவிட்டு புரியாதப் பகுதியை மீண்டும் மீண்டும் படிக்கும் போது தெளிவு ஏற்படும்.

இளம் வயதில் எங்கெல்சின் "லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்" என்ற நூலின் முதல் அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் போது ஒன்றுமே புரியவில்லை, ஆனால் இரண்டாம் அத்தியாயத்தைப் படித்தவுடன் ஏற்பட்ட தெளிவோடு முதல் அத்தியாயத்தை மீண்டும் படிக்கத் தொடங்கும் போது புரியத் தொடங்கியது. முதல் பகுதியைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தப் பகுதியைப் படிக்காதீர்கள் என்பதாகவே பலரது ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் எனது ஆலோசனை மாறுபடுகிறது. ஒருவேளை சிலருக்கு அது பயன்பட்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலருக்கு எனது அனுபவம் பயன்படும் என்று நினைக்கிறேன்.

படிக்கும் போது ஏற்படுகிற சந்தேகங்களை அருகில் உள்ள தோழர்களோடு உரையாடுவதன் மூலம் தெளிவு பெறலாம். சில தோழர்கள் தத்துவத்திலும், சில தோழர்கள் அரசியல் பொருளாதாரத்திலும், சில தோழர்கள் விஞ்ஞானக் கம்யூனிசத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பர் அவர்களுடன் உரையாடி விளக்கம் பெறலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கட்சி சார்பில்லாதவர்கள் நடத்தும் மார்க்சிய வகுப்புகள் பயனுள்ளதாக அமையும். இபோது வீடியோக்களில் மார்க்சிய வகுப்புகள் கிடைக்கின்றன, அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்க்சியம் கற்போம் திருத்தல்வாதம் எதிர்ப்போம். மார்க்சிய முதலாசிரியர்களின் நேரடி நூல்களைப் பயிலுவோம். அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டை பிறர் குழப்பும் போது எங்கெல்ஸ் தங்களது நேரடி நூல்களைப் படிக்கும்படி ஆலோசனை கூறுயுள்ளார். அதனைப் பின் பற்றுவோம்.

மார்க்சியத் திருத்தல்வாதத்தை எதிர்த்து மார்க்சிய வழியில் எழுதப்படுகிற மார்க்சிய அறிஞர்களின் நூலின் துணையோடு மார்க்சிய முதல் நூல்களைப் படித்துத் தெளிவடைவோம். நமது செய்பாட்டை இந்தத் தெளிவு சிறப்படையச் செய்யும்.

உழைக்கும் மக்கள் அனைவரும் விடுதலை பெறும்வரை மார்க்சியம் நமக்கு வழிகாட்டும்.

நாளை உலகம் உழைப்பாளர்களுடையதேயாகும்.

Thursday, 10 January 2019

காரல் மார்க்சா? அம்பேத்கரின் புத்தரா?


காரல் மார்க்சையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டுள்ளேன். அதேசமயம் புத்தரின் தம்மத்தைப் படிப்பதிலும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு ஒரு திட்டவட்டமான தீர்மானமான முடிவுக்கு வந்தேன்.- அம்பேத்கர்

“மார்க்சிஸ்டுகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் புத்தரைப் படித்தறிந்து அவர் எந்தக் கொள்கைகளைப் பற்றி நின்றார் என்பதைப் புரிந்து கொள்வார்களேயானால் அவர்களின் கருத்தோட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நான் உணர்கிறேன்.
- அம்பேத்கர்



புத்தர், மார்க்ஸ் ஒப்பீடு வேடிக்கையானதாகக் கருதப்படலாம் ஆனால் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை என்று பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தமது “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற நூலின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடைவெளி 2381 ஆண்டுகள் என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தத்துவம் தோன்றிய போது இருந்த நிலையிலேயே நிற்காது அது காலந்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கும். இங்கே வளர்ச்சி என்பது எதிர்நிலையான திரிபை கூறவில்லை, அடிப்படையில் ஊன்றி நின்றவகையில் ஏற்படுகிற வளர்ச்சியையே குறிக்கப்படுகிறது. இது எந்தக் கோட்பாடுக்கும் பொருந்தும். அனைத்துத் தத்துவப் போக்கிற்கும், அனைத்து மதச் சிந்தனைக்கும் பொருந்தக்கூடியதே. மாற்றம் அடைவதே காலத்தில் நிலைத்திருக்கும், மாறாதது மறைந்து போகும்.

மார்க்சியத்தைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் லெனினியத்தைக் கூறலாம். மார்க்ஸ், எங்கெல்சை தொடர்ந்து வருகிற லெனின் மார்க்சியத்தின் அடிப்படையைச் சிதையா வகையில் ஏகாதிபத்திய காலத்திய மார்க்சியமாக லெனினியத்தை வளர்த்தெடுத்தார். வளர வேண்டியது வளர்த்தெடுக்க வேண்டியது எப்போதும் வளர்ச்சியூடே வளர்ந்த வண்ணமாய் இருக்கும்.

இந்நிலையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய புத்தத்தை மார்க்சியத்தோடு சமநிலையில் ஒப்பிட முடியாது. முந்தியதற்கும் பிந்தியதற்கும் உள்ள கால இடைவெளியை மனதில் கொண்டே ஒப்பிட வேண்டும். அதைவிடப் பெரிய சிக்கல் புத்தத்தில் இருக்கிறது, ஆதி புத்தரின் சிந்தனைக்கும் இன்று புத்தரின் பேரால் கிடைக்கும் சிந்தனை தொகுப்பிற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தால் இரண்டும் எதிர்நிலையிலேயே இருக்கிறது. கிடைத்திருக்கின்ற தொகுப்பில் ஆதிபுத்தரின் கருத்து 5 விழுக்காடு கூடத் தேறாது என்பதே உண்மை. அதுவும் சிதைக்கப்பட்ட வடிவில். புனிதத்தை உடைத்த புத்தரை, புனிதராக்கிய புத்தமே நம்மிடம் இருக்கிறது. அது ஹினயானமாக இருந்தாலும் சரி மகாயானமாக இருந்தாலும் சரி. ஆதி புத்தரின் கருத்தை சலித்து எடுப்பது மிகவும் கடினமானது.

அம்பேத்கர் காட்டுகிற புத்தர் இன்னும் புதிய கதைகளை இணைத்த புத்தராகக் காட்சியளிக்கிறார். “புத்தரும் அவரது தம்மமும்” என்ற நூலில் காணப்படுபவை திரிபிடகத்தில் எங்கிருந்த எடுக்கப்பட்டவை, தம்மால் எழுதப்பட்டது எவை என்பதைச் சுட்டிக்காட்டவில்லை.

புனிதத்தை ஒதுக்கிய, பகுத்தறிவு புத்தத்தோடு, கோட்பாடு முறையில் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகள் தொடர்புடையது. இந்திய தத்துவங்களில் உலகாயதத்தோடு மட்டுமல்லாது, வைசேஷிக அணுக்கோட்பாடோடும், அதன் தர்க்கத்தோடும், மிமாம்சையின் நாத்திகக் கருத்தோடும், சாங்கியத்தின் தொடக்க காலத் தத்துவத்தோடும், ஆதி புத்தரோடும், சமணத்தின் நாத்திகக் கருத்தோடும் தொடர்புடையதே. பழைய கோட்பாடுகளின் தொடர்ச்சியாக மார்க்சிய தத்துவத்தைப் பார்க்கலாம். இன்றைய மார்க்சிய தத்துவம் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு இணைந்து காணப்படுகிறது.

“புத்தரா காரல் மார்க்சா?” என்ற கட்டுரையில் அம்பேத்கர் குறிப்பிடுகிற புத்தத்தோடே இங்கே விவாதிக்கலாம். புத்தரையும் மார்க்சையும் கற்ற வகையில் ஒப்பீடு செய்வதாக அம்பேத்கர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மேலும் கூறுகிறார், “ஒரு மார்க்சிஸ்ட் புத்தரிடம் கற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? புத்தர் ஒரு மார்க்சியவாதிகளுக்கு என்ன கற்பிக்க முடியும்?” என்றுதான் கேட்கிறார். இந்த இரண்டு கேள்வியும் ஒன்று தானே, இந்தக் கூறியதுகூறல் என்ன சொல்கிறது என்றால் மார்க்சியத்திடம் இருந்து புத்தம் கற்றுக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை என்பதே. இது உண்மையா என்பதை ஆராய்வோம்.

இச்சிறுகட்டுரை எட்டு உட்தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது, 1. புத்தரின் கோட்பாடுகள், 2. மார்க்சின் மூலக்கோட்பாடுகள், 3. மார்க்சியக் கோட்பாடுகளில் மிஞ்சியிருப்பது, 4. புத்தர் காரல்மார்க்ஸ் ஒப்பீடு, 5. வழி வகைகள். 6. வழிவகைகள் மதிப்பீடு, 7. எவருடைய வழிவகைகள் அதிகம் பலன் தரக்கூடியவை, 8. அரசு உதிர்ந்து போதல்.

முதல் உட்தலைப்பில், புத்தரின் கோட்பாடாக அம்பேத்கர் இருபத்தைந்துக் குறிப்புகளைத் தருகிறார். அதில் விவாதத்திற்கு இங்கே எடுத்துக் கொள்வதை மட்டும் தொகுப்போம்.

1) ஒரு சுதந்திரமான சமூகத்திற்கு மதம் அவசியமாகிறது. 7) உண்மையான மதம் மனிதர் தம் உள்ளத்தேயன்றிச் சாத்திரங்களில் இல்லை. 8) மனிதனும், ஒழுக்கமுமே மதத்தின் மையமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மதம் கொடிய மூடநம்பிக்கையாகவிடும். 9) ஒழுக்கம் வாழ்க்கையின் இலட்சியமாக இருந்துவிட்டாமல் மட்டும் போதாது. கடவுள் என்பது இல்லையாதலின், ஒழுக்கமே வாழ்க்கையின் சட்டமாக வேண்டும். 10) மதத்தின் பணி உலகை மாற்றியமைத்து அதை மகிழ்ச்சிக்குரியதாய் ஆக்குவதாக இருக்க வேண்டுமேயன்றி, அதன் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கிக் கொண்டிருப்பதாக இருக்கக்கூடாது. 11) உலகின் துன்பங்களுக்குக் காரணம் ஆர்வநலன்களின் மோதலே ஆதலால், அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி அஷ்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவதே ஆகும். 12) தனி மனிதனின் தனிவுடைமை என்பது ஒரு வர்க்கத்தாருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வர்க்கத்தாருக்கு துன்பத்தையும் தருகிறது. 13) துன்பத்திற்கான காரணத்தைக் கண்டு நீக்குவதன் மூலம் உருவாகும் சூழல் சமூக நன்மைக்கு அவசியமாகின்றது. 14) அனைத்து மாந்தர்களும் சமமானவர்கள். 17) மயித்ரி அல்லது அனைவரிடமும் கூட்டுணர்வுடன் இருப்பது என்பதை எப்போதும் கைவிடலாகாது. பகைவரிடமும் காட்ட வேண்டிய பண்பு இது. 20) எதுவுமே தவறற்றது அன்று. அனைத்தும் மாற்றத்திற்கு உரியமையே. அனைத்தும் விசாரணைக்கும் பரிசோதனைக்கும் உரியவையே. 24.உண்மைக்காகவும் நீதிக்காகவும் நடைபெறும் போர்களைத் தவிரப் பிற போர்கள் யாவும் தவறானவையே.

இந்தப் புத்தரின் கோட்பாடு மிகப்பழமையானது என்ற போதிலும் எத்துணைப் புத்தம் புதியதாக இருக்கிறது என்று அம்பேத்கர் வியப்படைகிறார்.

இரண்டாவது உட்தலைப்பில், மார்க்சின் கோட்பாட்டைத் தொகுத்தளிக்கிறார். அவ்வாறு செய்திடும்போது அம்பேத்கர் தொடக்கத்தில், நவீன சோஷலிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ் தான் என்பதில் சந்தேகமில்லை. முதலாளிகளுக்கு எதிராக மார்க்ஸ் இருந்தது போலவே கற்பனாவாத சோஷலிசவாதிகளுக்கு எதிராகவும் இருந்தார். இருவரையும் வெறுத்தார் என்கிறார். ஆனால் மார்க்ஸ் யாரையும் வெறுக்கவில்லை, முதலாளித்துவத்தின் சுரண்டலை அம்பலப்படுத்தினார், அதனை எதிர்த்து போராடினார், கற்பனாவாத சோஷலிசவாதிகளை விஞ்ஞானச் சோஷலிசத்தின் அடிப்படையில் விமர்சித்தார் என்பதே உண்மை. மார்க்ஸ் யாரையும் வெறுக்கவும் ஒதுக்கவும் இல்லை.

“விஞ்ஞானச் சோஷலிசம் எனக் காரல் மார்க்ஸ் கருதியது, தன்னுடைய சோஷலிசக் கோட்பாடு தவிர்க்க முடியாதது, தப்பிக்க முடியாதது என்பதோடு, அதை நோக்கியே சமூகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதோடு அந்த முன்னேற்றத்தை எதனாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுமாகும்.” இதனை மார்க்சியக் கோட்பாட்டில் முதன்மையானது என்று கூறிவிட்டே அம்பேத்கர் மற்றதைப் பட்டியல் இடுகிறார்.

புத்தரின் கோட்பாட்டைத் தொகுத்தது போலவே மார்க்சின் அடிப்படைக் கோட்பாடாகப் பத்தைக் குறிப்பிடுகிறார். அதில் விவாதத்திற்கு உள்ளதைத் தொகுப்போம்.

1) தத்துவத்தின் நோக்கம் உலகத்தை மறுகட்டமைப்பு செய்வதே அல்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிக் கொண்டிருப்பதன்று. 8) உழைக்கும் மக்களிடையே பெருகிக் கொண்டேவரும் இந்த வறுமை, அவர்களிடையே புரட்சிகர உணர்வைத் தோற்றுவித்து, வர்க்க முரண்பாட்டை வர்க்க மோதலாக மாற்றுகிறது. 9) உடைமையாளர்களின் எண்ணிக்கையை உழைக்கும் மக்களின் எண்ணிக்கை விஞ்சுவதால் உழைப்போர் அரசைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவர். 10) இந்த உண்மைகள் தடுக்க முடியாதவையாதலால் சோஷலிசம் தவிர்க்க முடியாததாகும்.

மூன்றாம் உட்தலைப்பில், மார்க்சியக் கோட்பாட்டில் மிஞ்சியிருப்பதைக் கூறுகிறார். மார்க்சின் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளிப்பட்டது, அப்போதிலிருந்து அது விமர்சனத்துக்கு உள்ளாகியது, அதன் விளைவாக மார்க்ஸ் தோற்றுவித்த சித்தாந்த கட்டமைப்பின் பல பகுதிகள் உடைந்து நொறுங்கிப் போய்விட்டன என்கிறார்.

அம்பேத்கர் இங்கே மார்க்சியத்தை விமர்சித்ததையும் அதன் வழியில் உடைந்து போனதையும் குறிப்பிட்டது போல் புத்த கோட்பாட்டைப் பற்றி விமர்சித்தவர்களைப் பற்றியும் அதன் வீழ்ச்சியைப் பற்றியும் இங்கே எதனையும் கூறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் தமது சோஷலிசம் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்தே தீரும் என்று கூறியதை, மக்கள் முயற்சியில்லாமல் நிகழும் என்று அம்பேத்கர் விளக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் தான் 1917ஆம் ஆண்டு ருஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், மனித முயற்சி இல்லாமல், தவிர்க்க முடியாத ஒன்றாக நடைபெறவில்லை. அங்குத் திட்டமிடப்பட்ட புரட்சி நடந்தது, வன்முறையும், ரத்தமும் சிந்தப்பட்டது என்று ருஷ்யப் புரட்சியைப் பற்றி அம்பேத்கர் கூறியுள்ளார். அத்தோடும், உலகின் மீதிப்பகுதி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்லியுள்ளார்.

மக்களின் நடவடிக்கையினால் ருஷ்யப் புரட்சி நடைபெற்றதால், சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்சியக் கருத்து பொதுவான முறையில் பொய்த்துப் போனது. அதுமட்டுமல்லாது பட்டியலில் கூறப்பட்ட பலவும் தர்க்கவாதத்தின் மூலமும் அனுபவத்தின் மூலமும் தகர்க்கப்பட்டுவிட்டதாக அம்பேத்கர் கூறியுள்ளார்.

இவைகள் மார்க்சியத்தின் மீதான தொடர்ந்து வரும் விமர்சனங்களே ஆகும். அந்த விமர்சனங்களையே அம்பேத்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு பல்லோரால் கொடுக்கப்பட்ட பதிலை கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் கூறுகிறார், “உழைப்பாளர்கள் படிப்படியாக வறுமையில் ஆழந்து வந்திருக்கிறார்கள் என்று இப்போது யாரும் ஏற்பதில்லை. இதுவே மற்ற கருத்துக்களுக்கும் பொருந்தும்”. ஆக மார்க்சியத்தின் மீதான விமர்சனங்களை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார்.

மார்க்சியத்தில் மீதியிருப்பது அணைந்துபோன நெருப்பின் மிச்சமாக அம்பேத்கர் நான்கை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

1) தத்துவ அறிஞர்களின் பணி உலகை மறுகட்டமைக்கப்பதே ஆகும். உலகின் தோற்றத்தை விளக்குவதில் காலத்தை வீணாக்குவதல்ல.

2) ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே நலன்களில் முரண்பாடு உள்ளது.

3) உடைமைகள் தனிநபர்களுக்குச் சொந்தமாயிருந்தால் ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், மற்றொரு வாக்கத்துக்கு அது சுரண்டப்படுவதன் மூலம் துன்பமும் ஏற்படுகின்றன.

4) சமூகத்தின் நன்மைக்காகத் தனியார் உடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.

நான்காம் உட்தலைப்பில், மார்க்சியக் கோட்பாட்டில் மிஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை எடுத்துக் கொண்டு புத்தரையும் மார்க்சையும் ஒப்பிடுகிறார். முதலாவது, உலகின் தோற்றத்தை விளக்குவதல்ல, உலகை மறுகட்டமைப்பதே தத்துவவாதிகளின் பணி என்பதாகும். இந்தப் பொருளில் மார்க்ஸ் கூறவில்லை.

"தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் விளக்கப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர், ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change) அமைப்பதாகும்." - மார்க்ஸ் கூறியது இதுவே.

உலகில் முரண்பாடுகள் ஏன் காணப்படுகிறது என்பது பற்றி விளக்கத்தையே மார்க்சுக்கு முன்பான தத்துவப் போக்குகள் அளித்தது. உலகத்தை அறிந்து மாற்றுவதே தத்துவத்தின் பணி என்கிறது இந்த ஆய்வுரை. கருத்துமுதல்வாதமும், மதமும் பிரபஞ்சப் படைப்பைப் பற்றிக் கூறியிருக்கிற படைப்புக் கோட்பாட்டை மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் மறுக்கிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் உலகம், சமூகம், சிந்தனை ஆகியவற்றின் தோற்றத்தையும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு அவைகள் மாறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாவது, வர்க்கத்துக்கு இடையேயான முரண்பாடு. புத்தர் பிறந்த போது வர்க்கம் தோற்றம் பெற்றுள்ளது, அவ்வளவே. இது அந்தக் காலத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அம்பேத்கர் அச் சமூகத்தில் வர்க்க வெளிப்பாட்டைத் தேடி, புத்தருக்கும் ஒரு மன்னருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் கண்டு பிடித்துள்ளார்.

“..மன்னர்களுக்கு இடையிலும், பிரபுக்களுக்கு இடையிலும், பிராமணர்களுக்கு இடையிலும், இல்வாழ்வோருக்கு இடையேயும், தாய்க்கும் மகனுக்கும் இடையயேயும், மகனுக்கும் தந்தைக்கும் இடையேயும், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயும், துணையும் (companion) துணைக்கு இடையேயும் எப்போதும் போராட்டம் (strife) இருக்கிறது.”

இது எந்தத் தனிப்பட்ட வர்க்கத்திற்கும் மற்றொரு வர்க்கத்திற்குமான போராட்டம் கிடையாது. மன்னர்களுக்கு இடையேயும், பிரபுக்களுக்கு இடையேயும் என்று தான் கூறப்படுகிறது. இன்றைய நிலையில் கூறினால், முதலாளிகளுக்கு இடையிலும், தொழிலாளிகளுக்கு இடையிலும் என்று தான் தொடர்புபடுத்த முடியும். அதாவது முதலாளிக்கு இடையே நடக்கின்ற பிரச்சினை, அதே போலத் தொழிலாளிக்கு இடையே நடக்கின்ற பிரச்சினை, இதனை வர்க்க முரண்பாடாகக் கருதமுடியாது, இது ஓரே வர்க்கத்துக்குள் ஏற்படுகிற முரண்பாடு ஆகும்.

மூன்றாவதாக ஒப்பிடுவது, தனியுடைமைக்குத் தொடர்புடையதல்ல. இது புத்தருடைய கருத்தல்ல அவருடன் உரையாடிய மன்னரது கூற்று.

தனியுடைமையினால் ஏற்படுகிற சுரண்டலோடு, புத்தர் கூறுகிற துக்கத்தை இணைத்துப் பேசுகிறார். புத்தர் குறிப்பிடுகிற துக்கத்திற்கும் மார்க்ஸ் கூறிப்பிடுகிற சுரண்டலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. விரும்பிய ஒன்று மறையும் போது ஏற்படுகின்ற துக்கத்திற்கும் தனியுடைமையினால் நடைபெறுகிற சுரண்டலுக்கும் எந்த வகையிலும் தொடர்பு படுத்த முடியாது.

சமூகத்தின் நன்மைக்காகத் தனியார் உடைமையை ஒழிப்பது என்று நான்காவதாகக் குறிப்பிடுகிறார். சமூகத்தின் நன்மை என்று எந்தத் தனிநபரின் அல்லது வர்க்கத்தின் அல்லது தனிக் குறுங்குழுவின் விருப்பத்தின் அடிப்படையில் தனியார் உடைமை ஒழிப்பைப் பற்றி மார்க்சியம் பேசவில்லை. முதலாளித்துவ உள்முரண்பாட்டால் தனியுடைமை தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படுகிறது என்றே மார்க்ஸ் கூறுகிறார்.

“….பழைய சமூகத்தை அடி முதல் நுனிவரை போதுமான அளவு சிதைத்ததும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவர்களது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமூக அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொத்துடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன. இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே. இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது.

எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கி விடுகிறார். இந்த மையப்பாட்டுன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதுடன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு-வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்த கூடியவையாக மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலம் அவற்றைச் சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப்பதும். இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன. இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது, இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்றுபடுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுமையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.
…..
முதலாவது மாற்றம் உடைமைப் பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமை பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையப் பறிப்பதாகும்.” (மூலதனம் - பக்கம் 1025-1027)

நான்காவதான தனியுடைமை ஒழிப்பிற்கு, பிக்குகளுக்கான சங்க விதிகளில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். இது பிக்குகளுக்கான சங்க விதியே தவிர் சமூகத்தின் தனிடைமையின் ஒழிப்பல்ல. அதுமட்டுமல்லாது சமூகத்தில் தனியுடைமை நிலவும் போது சங்கத்தில் மட்டும் தனிவுடைமைப் பேணுவது சாத்தியமல்ல என்பதை இன்றைய புத்த சங்கங்களின் ஆடம்பரத்தைக் கண்டாலே போதுமானது. ஆனால் அம்பேத்கர் இந்த விதி ருஷ்யாவின் கம்யூனிச் ஆட்சியில் உள்ளவற்றைவிட மிகவும் கடுமையானது என்கிறார். அம்பேத்கரைப் பொருத்தளவில் புத்தரும் மார்க்சும் கம்யூனிசத்தையே குறிக்கோளாகக் கொணடுள்ளனர்.

ஐந்தாம் உட்தலைப்பில், கம்யூனிசத்தை அடைவதற்கான இருவரின் வழிவகைகளைக் கூறுகிறார்.

புத்தரின் வழிவகைகளில் முதலாவதாக, பஞ்ச சீலங்கள். 1) எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாய் இருப்பதையும் தவிர்த்தல், 2) களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல், 3) பொய் உரையாமல் தவிர்த்தல், 4) காமம் தவிர்த்தல், 5) மது தவிர்த்தல்.

இரண்டாவது வழிகள், எண்வகைப் பாதை (அஷ்டாங்க மார்க்கம்). 1) நல்ல கருத்துக்கள். அதாவது மூட நம்பிக்கைகளிடம் இருந்து விடுதலை. 2) நல்ல நோக்கங்கள், அறிவும் ஆர்வமுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான, உயர்ந்த நோக்கங்கள், 3) நல்ல பேச்சு, அதாவது அன்பும் தெளிவும் உண்மையுடையது, 4) நல்ல நடத்தை, அதாவது, அமைதியான, நேர்மையான, தூய்மையான நடத்தை, 5) நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது, 6) நல்ல முயற்சி, அதாவது மற்ற மேலே உள்ள ஏழையும் விடாமுயற்சியுடன் பின்பற்றுதல், 7) நல்ல மனஉணர்வு, அதாவது, விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருத்தல், 8) நல்ல சிந்தனை, அதாவது வாழ்க்கையின் ஆழ்ந்த மர்மங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல்.

இந்த மேன்மையான எண்வகைப் பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து துக்கத்தையும் மகிழ்வின்மையையும் ஒழிப்பதாகும் என்கிறார் அம்பேத்கர்.

மூன்றாவதாக நிப்பான கோட்பாடு, அதாவது எண்வகைப் பாதையைப் பின்பற்றும் போது ஏற்படும் இடையூறுகள். இந்த இடையூறுகளில் பத்து முக்கியமானது. 1) மாயை, 2) சந்தேகமும் தீர்மானம் இன்மையும், 3) சடங்குகளின் சக்தியை நம்பியிருத்தல், 4) உடல் சார்ந்த ஆசைகள், 5) மற்ற மனிதர்களின்பால் தவறான எண்ணம் கொள்ளுதல், 6) பருவுடலுடன் வாழும் மறுமை வாழ்வு வாழும் ஆசை, 7) பொருட்தன்மையற்ற உலகில் மறுமை வாழ்வு வாழும் ஆசை, 8) கர்வம், 9) தானே நல்லவன் என்ற எண்ணம், 10) அறியாமையாகும்.

நான்காவது, பரமிதங்களின் கோட்பாடு. அதாவது தினசரி வாழ்க்கையில் கடைப்பிடித்து நடக்க வேண்டிய பத்து நல்ல ஒழுக்கங்களாகும். 1) அறிவு, 2) சீலம் அதாவது அறநெறி உணர்வு, 3) உலக இன்பங்களைத் துறத்தல், 4) தானம், 5) வீர்யம் அதாவது நற்முயற்சி, 6) காந்தி அதாவது பொறையுடைமை. வெறுப்பவரை வெறுக்காமல் இருப்பது இதன் சாராம்சம். வெறுப்பினால் வெறுப்பு தணிவதல்லை. பொறையுடைமைதான் வெறுப்பைத் தணிக்கும், 7) உண்மை, 8) அதிட்டானம், அதாவது குறிக்கோளை அடைந்தே தீருவது என்பதில் உறுதி, 9) மேத்தம், அதாவது பகைவர், நண்பர், விலங்கு, மனிதன் ஆகிய எல்லா உயிர்களிடத்தும் செலுத்த வேண்டிய அன்பு உணர்ச்சி, 10) பற்றின்மை.

இந்த நான்கும் புத்தர் ஞானம் பெற்றதன் விளைவாக உலகின் துக்கத்தையும் துயரத்தைவும் (sorrow and misery) ஒழிப்பதற்கு உபதேசித்த நற்செய்தியாகும், இதனைக் கொண்டே நன்நெறி அரசை நிறுவப்படும்.

இங்கே புத்தரின் கருத்தாகக் கூறப்பட்டவை அனைத்தும் அறக் கருத்தாகவும், நன்நெறிக் கோட்பாடாகவும் இருக்கிறது. அதுவும் அன்றைய உலகில் காணப்படும் துயருக்குத் தேவையாகக் கருதிய நன்நெறிகள். வர்க்கமாக முதிர்ந்து முரண்பட்டுக் காணப்படும் இன்றைய சமூகத்திற்கு, இந்த அறக் கருத்துக்களும் நன்நெறிகளும் எந்தளவுக்கு நன்நெறியாக! இருக்கும்.

அடுத்துக் கம்யூனிஸ்டுகள் பின்பற்றும் வழிவகைகளை அம்பேத்கர் சுருக்கமாக முன்வைக்கிறார். 1) வன்முறை, 2) பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். முதலாவது இப்போதுள்ள முறையை உடைப்பதற்கு வன்முறைக்குக் குறைந்த எதுவும் போதுமானது ஆகாது என்பதாக அம்பேத்கர் கூறுகிறார். அடுத்துப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புதிய முறைமை தொடர்ந்து செயற்படுவதற்கு இதற்குக் குறைந்த எதுவும் போதுமானதாகாது.

முதலாவது கம்யூனிசத்தை வன்முறையானதாகக் கருதுகிறது. இரண்டாவது சரியானது. ஆனால் வேறுபொருளில் கூறப்பட்டுள்ளது.

இவைகளே அம்பேத்கர் கூறும் புத்தருக்கும் மார்க்சும் இடையே காணப்படும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளுமாகும். குறிக்கோள் இருவருக்கும் பொதுவானதாகும். அம்பேத்கரைப் பொருத்தளவில் புத்தரும் மார்க்சும் கம்யூனிசத்தையே குறிக்கோளாகக் கொணடுள்ளனர். வழிவகைகள் மட்டுமே வேறுபடுகிறது.

ஆறாவது உட்தலைப்பில், இருவரின் வழிவகைகளை மதிப்பீடு செய்கிறார். யாருடைய வழிவகைகள் மேலானவை என்றும் நீண்ட காலத்திற்கு நிலைத்துப் பயன்தரக் கூடியவை என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமானது என்கிறார்.

முதலில் வன்முறையை எடுத்துக் கொள்கிறார். கம்யூனிஸ்டுகளின் கருத்தாக அவர் கூறுகிறார், வன்முறையை முற்றிலும் அகற்றிவிட முடியாது, கம்யூனிசம் அல்லாத நாடுகளிலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகின்றன. இது வன்முறையாகாதா? கம்யூனிசமல்லாத நாடுகள் மீது போர் தொடுக்கின்றன, அதில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது வன்முறை அல்லவா? உடைமைகள் தனி ஒருவனுக்குச் சொந்தமாய் இருக்கும் காரணத்தால் மற்றமனிதர்கள் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் என்றால் அந்த உடைமைகளின் சொந்தக்காரனை ஏன் கொல்லக்கூடாது? தனி உடைமை ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்பதற்குக் காரணமே இல்லை என்று கம்யூனிஸ்டுகள் கருதுவதாக அம்பேத்கர் புரிந்து வைத்திருக்கிறார்.

புத்தர் வன்முறையை எதிர்த்தார், ஆனால் அவர் நீதியை ஆதரித்தார், நீதிக்கு அவசியமாய் இருந்தால் வன்முறையைப் பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார் என்கிறார் அம்பேத்கர். அதுமட்டுமல்லாது புத்தரின் அகிம்சை, ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் அகிம்சையைப் போல அவ்வளவு முழுமையானது கிடையாது. அதே போல் கம்யூனிஸ்டுகள் அகிம்சையை முற்றமுழுமையான கோட்பாடாகக் கருதுகின்றனர். ஆனால் புத்தர் இதற்கு முரணான கோட்பாட்டைக் கொண்டுள்ளார்.

அதாவது, அவசியமாக இருந்தால் புத்தர் வன்முறையைப் பயன்படுத்த அனுமதித்தார். ஜைன மதத் தலைவரான மகாவீரர் எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காத அகிம்சைக் கோட்பாட்டைக் கொண்டுள்ளார். கம்யூனிஸ்டுகளும் அகிம்சையை முற்றமுழுமையானதாகக் கருதிக் கொண்டுள்ளனர். புத்தரின் கருத்து இதற்கு முரணானது என்கிறார் அம்பேத்கர். அதாவது புத்தரின் அகிம்சை நீக்குபோக்குடையது, நீதிக்குத் தேவைப்படுகிற வன்முறையைப் புத்தர் ஆதரித்தார். அவர் பலத்தை சக்தியாகப் பயன்படுத்துவதை மட்டுமே அனுமதித்தார்.

அடுத்து, சர்வாதிகாரம், புத்தர் அதைச் சற்றும் விரும்பவில்லை. அவர் ஜனநாயகவாதியாகப் பிறந்தார் ஜனநாயகவாதியாகவே இறந்தார் என்கிறார் அம்பேத்கர். மேலும் புத்த சங்கம் மிகவும் ஜனநாயக முறையிலான அமைப்பாக இருந்தது, புத்தர் ஒருபோதும் சர்வாதிகாரியாக இருக்கவில்லை.

புத்தருடைய வழியும் மார்க்சின் வழியிலும் எது மேலானது நீண்ட காலம் நிலைத்து பயன்தருவனவாக உள்ளது? என்ற கேள்வியை அம்பேத்கர் எழுப்புகிறார்.

கம்யூனிஸ்டுகள் தனிநபர் உடைமையை அழித்து விட்டார்கள். இது மதிப்புமிக்கக் குறிக்கோள் என்று வைத்துக் கொண்டாலும், அதை அடையவும் செயல்முறையினால் எதனையும் அழித்துவிடவில்லை என்று கம்யூனிஸ்டுகள் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.

புரட்சியின் போது மனிதர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்? மனித உயிருக்கு மதிப்புக் கிடையாதா? உடைமைகளின் சொந்தகாரர்களின் உயிரை எடுக்காமல் உடைமைகள் மட்டும் கம்யூனிஸ்டுகள் எடுத்துக்கொண்டிருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்புகிறார்.

சர்வாதிகரம் என்றால் சுதந்திரம் இல்லாமை அல்லது நாடாளுமன்ற அரசு இல்லாமை என்பதாக அம்பேத்கர் கூறுகிறார். நாடாளுமன்ற அரசில் சுதந்திரத்தின் மீது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைக் குறை கூறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. நாடாளுமன்ற அரசில் ஒரு கடமையும் ஒர் உரிமையும் இருக்கிறது. சட்டத்துக்குக் கீழ்ப்படிவது கடமை, அதைக் குறை கூறுவது உரிமை. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும் கடமை மட்டும் தான் உண்டு, குறை கூறும் உரிமை கிடையாது என்கிறார் அம்பேத்கர்.

நாடாளுமன்றத்தில் குறைகூற உரிமை என்று சரியாகத்தான் கூறியிருக்கிறார். ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற உடன் தனிநபர் சர்வாதிகாரமாகப் புரிந்து கொண்டுள்ளார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது சோவியத் அதாவது மக்கள் அரசு. அவர்களுக்குள் விவாதிக்கவும் குறைகூறவும் கண்டிப்பாக உரிமை உண்டு, அதனைப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் அந்தக் குறையை நீக்கிடமுடியும், ஆனால் முதலாளித்துவ மீள்வுருவாக்கத்திற்குத் தான் உரிமை கிடையாது.

ஏழாவது உட்தலைப்பில், யாருடைய வழிவகை அதிகம் பலன் தரக்கூடியது என்பதை விவரிக்கிறார். பலத்தின் மூலம் நடத்தப்படும் அரசு, அறநெறி இயல்பின் மூலம் நடத்தப்படும் அரசு ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிந்தெடுக்க வேண்டியுள்ளது. சில புத்த உரையாடல்களைக் கூறி, அறநெறி சக்தி தோல்வி அடையும் போது அதன் இடத்தில் விலங்கு சக்தி எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு மனிதனும் அறநெறி அரசாட்சியின் காவலராக இருக்கும் வகையில் அறநெறிப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று புத்தர் விரும்பியதாகக் கூறுகிறார்.

எட்டாவது உட்தலைப்பில், அரசு உதிர்ந்து போதல் ஆகும். கம்யூனிசத்தின் இந்தக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் தெளிவு மட்டும் போதாது, அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகியவை அவசியமாகும். இல்லை என்றால் இதனை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும்.

முதலில், அம்பேத்கர் இது பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். கம்யூனிச கோட்பாட்டின்படி அரசு என்பது ஒரு நிரந்திரமான சர்வாதிகாரமாகும். இதனைக் கம்யூனிஸ்டுகளே பலவீனமான அரசியல் கோட்பாடாக உணர்வதால், அரசு உலர்ந்து உதிரும் என்று கூறி அதன் கீழாகப் புகலிடம் தேடுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் இரண்டு கேள்விக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது அரசு எப்போது உதிர்ந்து போகும்? அரசு உதிர்ந்து போகும் போது அதன் இடத்துக்கு எது வரும்? முதல் கேள்விக்குக் கம்யூனிஸ்டுகளால் நிச்சயமாகப் பதில் எதுவும் அளிக்கமுடியாது. இரண்டாவது கேள்விக்குக் கம்யூனிஸ்டுகள் இதற்குத் திருப்திகரமான பதில் கூறப்படவில்லை. இதைவிட வேறொரு முக்கியமான கேள்வி இருக்கிறது, அரசு உதிர்ந்து பின் அராஜகம் வருமா? வரும் என்றால் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்குவது பயனற்ற செயலாகும் என்றே அம்பேத்கர் கருதுகிறார். வன்முறையினால் தான் அந்த அரசை தாங்கிப் பிடிக்க முடியும், அதற்கு ஆதாரமாக இருக்கும் வன்முறையை விலக்கிக் கொண்டால் அராஜகம் தோன்றும். அப்படி என்றால் கம்யூனிஸ்ட் அரசினால் என்ன நன்மை? -என்பதாகவே அம்பேத்கரின் புரிதல் இருக்கிறது.

அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அறிந்து கொள்ளாமல் இதற்கான பதிலைப் புரிந்து கொள்வது கடினமாகும். சுருக்கமாக அரசு பற்றி மார்க்சிய பார்வையைத் தொகுப்போம்.

மனிதனை மனிதன் சுரண்டுதல் அற்ற ஒரு நிலையினை மனித இனம் சந்தித்ததுண்டு. அது ஆதிப்பழங்குடி சமூகமாகும் (ஆதி கம்யூனிச சமூகம்). அந்தச் சமூகத்தில் உற்பத்தி சக்திகள் சிறிதளவிற்கே வளர்ச்சியடைந்து இருந்ததால் ஒருவராலும் தனியாகத் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எளிய கருவிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொருவரும் இனக்குழுவில் உள்ள அனைவருக்காகவும் உழைத்தனர். இவ்வகையான இனக்குழு சமூகத்தில் உழைப்பு கூட்டாகச் செயல்பட்டது, உணவு சேகரிப்பதில் அனைவரும் சமமாக ஈடுபட்டனர். சேகரித்த உணவுகள் இனகுழு முழுமைக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எளிய கூட்டுறவு செயல்பாடாக அன்றைய சமூக உறவுகள் இருந்தன.

அன்றைய சமூகப் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு நிலை உருவாகவில்லை. மக்கள் வர்க்கமாகப் பிளவுபடாமலும், சொத்து என்று எதையும் தனிநபர்களிடம் சேராமலும், அதாவது வர்க்க மற்ற, தனிச்சொத்துடைமையற்ற சமூகமாக, ஒன்றுபட்ட தொன்மை கம்யூனிச சமூக அமைப்பாகக் காணப்பட்டது. இந்தக் கட்டத்தில் வன்முறையால் மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரம் இருக்கவில்லை. அதாவது அரசு என்பது தோன்றவில்லை. அப்போது அரசு தேவைப்படவும் இல்லை.

உற்பத்திச் சாதனங்கள் சிலரிடம் சேகரமாதலும், சமூகத்திற்குத் தேவையானதைவிட சற்று கூடுதலாக உற்பத்தி செய்திட முடிந்தமையும், சமூகத்தின் வேலைப் பிரிவினை ஆகிய புறநிலைக் காரணங்கள் வர்க்கங்களின் தோற்றத்திற்குக் காரணமாகிறது. இதனால் உருவான சமூகத்தில் உடைமையுள்ளவருக்கும், உடைமையற்றவருக்கும் இடையேயுள்ள சமரசப்படுத்தமுடியாத முரண்காரணமாக அரசு தோற்றம் பெற்றது. மக்களின் எழுச்சியை அடக்குவதற்கு, ஆயுதம் தாங்கிய காவற்படைகளும், ராணுவமும், சட்ட நீதிகளும், சிறை தண்டனைகளும், சுரண்டலுக்கு ஆளான மக்களின் மீது ஏவப்படும் வன்முறை கருவியாக அரசு உருவாகியது.

இந்த அரசு உருவாக்கத்தைப் பற்றி எங்கெல்ஸ் தமது “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

“சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமூகம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது. இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமூகத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து “ஒழுங்கின்” வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு சக்தியை, சமூகத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று.”

இதனோடு லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் சேர்த்துக் கூறுகிறார்:-
“வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே. எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்முறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.”

-மேலும் லெனின் கூறுகிறார், நாகரிக சமூகத்தில், ஒவ்வொரு புரட்சியும், அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை ஒளிவுமறைவின்றி நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறது, ஆளும் வர்க்கம் தனக்குச் சேவை புரியக் கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளைப் புதுப்பிக்க எப்படி முயலுகிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்குவோருக்குப் பதிலாய் ஒடுக்கப்பட்டோருக்குச் சேவை புரியக் கூடிய, இப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பைத் தோற்றுவித்துக் கொள்ள, எப்படி முயலுகிறது என்பதையும் நமக்குத் தெளிவாய்க் காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச ஆட்சியில் அரசு எப்படி உலர்ந்து உதிர்ந்து போகிறது என்பதைப் பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசு சொத்தாக மாற்றுகிறது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே முடிவு கட்டிக் கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது, அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. இதுவரை சமூகம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது, அதாவது அந்தந்தக் காலத்தில் சுரண்டும் வர்க்கமாய் இருக்கும் குறிப்பிட்ட வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது, அதன் பொருளுற்பத்தியின் புறநிலைமைகளைப் பராமரிக்கவும், இன்னும் முக்கியமாய்ச் சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்புக்கு பொருத்தான ஒடுக்கு முறை நிலையில் பலவந்தமாக வைத்திருப்பதற்கும் ஓர் ஒழுங்கமைப்புத் தேவைப்பட்டது.

இந்த அரசு சமூகம் முழுவதன் அதிகார பூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவத் திரட்சியாக விளங்கிற்று. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமூகம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக் குடிகளின் அரசாகவும், மத்திய காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத் தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமூகம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகும் போது, அது தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது.
..
அரசானது மெய்யாகவே சமூகம் முழுதுக்கும் பிரதிநிதியாய் முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல்- அதாவது உற்பத்திச் சாதனங்களைச் சமூகத்தின் பேரால் உடைமையாக்கி கொள்ளும் இச்செயல் – அரசு என்ற முறையில் .சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்து விடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒரு துறைக்குப்பின் இன்னொன்றாகத் தேவையற்றதாகிப் பிறகு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிவிடுகிறது. அரசு “ஒழிக்கப்படவில்லை”, அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.”

அம்பேத்கர் நினைப்பது போல் அரசு உலர்ந்து உதிர்ந்த இடத்தில் அராஜகம் ஏற்படப் போவதில்லை, ஆட்களின் ஆளுமை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறிப்போகும். அதாவது வன்முறைக்கருவிகாளான போலீஸ், ராணுவம், நீதித்துறை போன்றவை நீக்கப்பட்ட நிலையில், நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்கக்கூடிய அமைப்பாகும். எங்கெல்ஸ் மேலும் இது பற்றிக் கூறுவதாவது, தவிர்க்க முடியாததாய் அரசு மறைந்தவுடன், அரசு இயந்திரம் அனைத்தையுமே அதற்கு அப்பொழுது உரித்தாகிவிடும் இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக் கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடாரிக்கும் பக்கத்தில் கொண்டுபோய் வைக்கப்படும்.

தேவைக்கேற்ற வகையில் தோன்றிய அரசு, தேவையற்றதாகிப் போய் உலர்ந்து உதிர்ந்து போய்விடும் என்கிற விஞ்ஞானக் கண்ணோட்டத்தை அம்பேத்கர் புரிந்து கொள்ளவில்லை. அதே போல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அம்பேத்கரின் புத்தர் கூறிய கருத்துக்களை மார்க்சியம் எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பார்ப்போம்.

புத்தரின் கோட்பாட்டைத் தொகுக்கும் போது அம்பேத்கர், மதத்தின் அவசியத்தைப் பற்றிக் கூறுகிறார், ஒழுக்கம் வாழ்க்கையின் சட்டமாக வேண்டும் என்று ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

ஒழுக்க நெறியைப் பற்றி எங்கெல்ஸ் கூறுவதை முதலில் பார்ப்போம்.

“இன்றைய சமுதாயத்தின் மூன்று வர்க்கங்களான நிலவுடைமைப் பிரபுக்குலம், முதலாளி வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கே உரிய ஒழுக்கநெறி இருப்பதைக் காணும் பொழுது நாம் ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடியும், கடைசியாக நோக்குமிடத்து மனிதர்கள் தமது வர்க்க நிலைமை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நடைமுறை உறவுகளிலிருந்தே - அவர்கள் உற்பத்தியையும் பரிவர்த்தனையையும் நடத்தி வரும் பொருளாதார உறவுகளிலிருந்தே - உணர்வு பூர்வமாகவோ அல்லது உணர்வுபூர்வம் இன்றியோ தமது அறநெறிக் கருத்துக்களைப் பெறுகிறார்கள்.

... நீ திருடக்கூடாது. இதன் மூலம் இந்த ஆணை ஒரு சாசுவத ஒழுக்க நெறி ஆணையாகி விடுமா? எவ்வழியிலும் ஆகாது. திருடுவதற்கான எல்லாச் செயல் நோக்கங்களும் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு சமுகத்தில் அதன் காரணமாக அதிகமாய்ப் போனால் பைத்தியக்காரர்கள் மட்டுமே எப்பொழுதாவது திருடுவார்கள் என்ற நிலையில் நீ திருடக் கூடாது என்ற சாசுவத உண்மையினைப் பயபக்தியுடன் பறைசாற்ற முயலும் ஒர் ஒழுக்கநெறிப் பிரசாரகர் எவ்வாறு சிரிப்புக்கு ஆளாவார் தெரியுமா!

எனவே, ஒழுக்க நெறி உலகத்திற்கும் அதன் நிரந்தரக் கோட்பாடுகள் உள்ளன, அவை வரலாற்றுக்கும் நாடுகளிடையான வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு நிற்பவை என்ற சாக்கில் ஒரு சாசுவதமான அறுதியான என்றென்றும் மாற்றவொண்ணா அறநெறி விதி என்ற முறையில் ஏதேனும் ஓர் ஒழுக்க நெறி சூத்திரத்தையும் எம்மீது திணிக்க நடத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கிறோம். இதற்கு மாறாக, இறுதியாக ஆய்வுசெய்து பார்க்கும் பொழுதில் இதுகாறுமுள்ளதான எல்லா ஒழுக்கநெறிக் கொள்கைகளும் அந்தந்தக் காலங்களில் நிலவிய சமூகத்தின் பொருளாதார நிலைமைகளின் விளைவே என்று நாம் மெய்ப்பித்து நிலைநிறுத்துகிறோம். சமூகம் இதுவரையில் வர்க்கப் பகைமைகளிலேயே இயங்கி வந்திருப்பதால், ஒழுக்க நெறி எப்பொழுதுமே வர்க்க ஒழுக்க நெறியாக இருந்து வந்துள்ளது, அது ஒன்று ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் மற்றும் நலன்களையும் நியாயப்படுத்தியுள்ளது அல்லது ஒடுக்கப்பட்ட வர்க்கம் போதியளவு வலுப்பெறத் தொடங்கியது முதல் இந்த ஆதிக்கத்திற்கு எதிரான அதன் கோபாவேசத்தின், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களின் சின்னமாக அமைந்துவிட்டது.” (டூரிங்குக்குமறுப்பு)

ஒழுக்க நெறியின் தோற்றம், சமூக வளர்ச்சியின், பொருளாதார உறவுகளின் மாற்றத்தின் அடிப்படையில் உருவானவை என்கிறது மார்க்சியம். அதன் வர்க்க சார்பையும் வெளிப்படுத்துகிறது. பகைமைக் கொண்டுள்ள ஒரு சமூகத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரே அறநெறி இருக்கமுடியாது. இனக்குழு தம் வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருந்த போது, மிகுந்த குழப்பமும், போட்டியும் உடையதாக இருந்தது. அப்போது ஏற்பட்ட சண்டைகள் மிகவும் கொடூரமாக இருந்தன. பல்லுக்குப் பல், ரத்தத்திற்கு ரத்தம் என்பது போன்ற போக்கு இருந்தது. பிறகு வர்க்கச் சமூகம் தோன்றிய பின், சமூகத்தில் அமைதியை எதிர்பார்த்தபோது பழிக்குபழி என்றபோக்கு மாற வேண்டிவந்தது. மன்னிக்கும் மனோ நிலை உருவானது அப்போது ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தைக் காட்டச் சொல்லிற்று, அவர் நாண நன்னயம் செய்வதை விரும்பியது.

அனைவருக்குமான ஒழுக்க நெறியை நிராகரித்து, அதன் வர்க்க சார்பைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்க நெறியையும் நாம் நிராகரிக்கின்றோம். அது ஏமாற்று வித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள், முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான உபாயம் என்கிறோம்.

எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு முற்றிலும கீழ்ப்படிந்தது என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்துதான் உதிக்கிறது.”

மதத்தையும் வர்க்கச் சார்பானதாக மார்க்சியம் கருதுகிறது. ஆனால் அம்பேக்கர் ருஷ்யாவின் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு மிகச்சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளதை குறிப்பிட்டு, மனிதகுலம் பொருளாதார நன்மைகளை மட்டும் விரும்புவதில்லை, ஆன்மீகப் பண்புகளில் கருத்துச் செலுத்துவதில்லை, இனியும் செலுத்தும் எண்ணம் இருப்பதாகவும் தோன்றவில்லை என்று வருத்தப்பட்டுக் கூறுகிறார்.

கம்யூனிஸ்டுகளின் மதம் பற்றிய கூற்றான “மதம் மக்களுக்கு அபின்” என்பதைக் கிறித்துவ மதத்துக்குப் பொருந்தும், பவுத்தத்தற்குப் பொருந்தாது என்கிறார் அம்பேத்கர்.

கம்யூனிஸ்டுகளின் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகத்தை வர்க்க ஒடுக்குமுறை கருவியாகவே பார்க்கிறது. பகுத்தறிவுவாதிகளைப் போல் ஆத்திகத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்று போராடுவதில்லை என்றாலும், வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஆத்திகத்தை (ஆன்மீகத்தை) எதிர்க்கவே செய்கிறது. வர்க்கத்தோடு தோன்றிய மதத்தை, வர்க்க சுரண்டலை ஆதரிக்கின்ற மதத்தை, வர்க்கச் சுரண்டலை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் எப்படி ஆன்மீகத்திற்கு இடம் கொடுக்க முடியும். வர்க்கத்தோடு மதத்தையும் எதிர்த்தே போராடும்.

லெனின்:-
“நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

ஆளும் வர்க்கத்தின் நலன்கள் மதத்திற்குப் பின்னே ஒளிந்து நிற்பதை கம்யூனிஸ்டுகள் வர்க்கச் சார்ப்பாய் பார்க்கின்றனர். ஆனால் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளின் மதப் பார்வை ஆழந்த வெறுப்புக் கொண்டிருப்பதாகக் கருதி, கம்யூனிசத்துக்கு உதவியாக இருக்கக்கூடிய மதங்களுக்கும், உதவியாயில்லாத மதங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்க்க மறுப்பதாக வருத்தத்துடன் கூறுகிறார். மதத்தில் காணப்படும் வர்க்கத் தன்மையை முன்னிட்டு மேன்மையான மதத்தையும் மார்க்சியம் மறுதலிக்கவே செய்கிறது. “மதம் சமூகத்தைப் புத்தெழுச்சி கொள்ளச் செய்வதற்கான ஒர் ஆன்மிகச் சக்தி…” என்பதே அம்கேத்கர் உறுதியான கருத்தாக இருக்கிறது.

மதத்தில் ஏற்படும் மாற்றங்கள் வழியிலேயே மனித இனத்தில் காலகட்டங்கள் வேறுபடுத்திப் பார்க்கிற பார்வையை "டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் எங்கெல்ஸ் விமர்சித்துள்ளார். ஃபாயர்பாகின் அன்புவழிப்பட்ட தமது புதிய மதத்தைப் போற்றிய அவரது மிகச் சிறந்த நூற்பகுதிகள் இன்று முற்றிலும் படிக்கவொண்ணாதனவாக ஆகிவிட்டன என்கிறார் எங்கெல்ஸ்.

இதனை லெனின் விளக்குகிறார்:-
“ஃபாயர்பாக்கைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ள கட்டுரையில், அவர் ஃபாயர்பாக்கை இடித்துக் கூறுகிறார். காரணம் ஃபாயர்பாக் மதத்தை எதிர்த்துப் போராடுவது அதை ஒழிப்பதற்காக அல்ல? ஆனால் மதத்தைப் புதுப்பிக்கவும், ஒரு புதிய மேன்மையான மதத்தைக் கண்டுபிடிக்கவும் போன்றவற்றுக்கே. மதம் மக்களுக்கு அபின் என்ற காரல் மார்க்சின் இந்த ஆணை மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் முழுவதற்கும் அடித்தளமாகும். எல்லா நவீன கால மதங்களையும் சர்ச்சுகளையும், அனைத்து மதநிறுவனங்களையும் பூர்ஷ்சுவாப் பிற்போக்கின் கைக்கருவிகளாக, சுரண்டலைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகவே மார்க்சியம் எப்போதும் கருதியது” (மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை)

மதம் என்பது தொழிலாளி வர்க்கத்தை வெறிமயக்கம் அடையச் செய்வதற்கான பிற்போக்கின் கருவியாக லெனின் கூறுகிறார்.

வன்முறையை, கம்யூனிஸ்டுகள் பின்பற்றும் வழிவகையாகவே அம்பேத்கர் குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்டுகள் வன்முறை பிரியர்கள் கிடையாது. அராஜவாதிகளின் வன்முறையைக் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்கள். கம்யூனிஸ்டுகள் வன்முறையைச் சமூகத்தில் திணிப்பதில்லை என்பதே உண்மையாகும்.

தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பி எங்கெல்ஸ் பதிலளிக்கிறார்:-

"தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்." (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

கம்யூனிஸ்டுகள் வன்முறையை ஆராதிப்பதில்லை, வன்முறையினால் விளைகின்ற கேடுகளைக் கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கின்றனர். வன்முறை தன்னிச்சையாகப் புரட்சியின் போது கையாளப்படுவதில்லை. அந்த நிலையினைத் தீர்மானிப்பது புறநிலைமைகளே. அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கம் இறுதியில் வன்முறையை நோக்கித் தள்ளப்படுமாயின், சொல் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு, செயல் மூலமும் கொடுக்கப்படும் என்று உறுதியாக எங்கெல்ஸ் கூறியுள்ளார். ருஷ்யப் புரட்சியைக் குறைவான ரத்தம் சிந்தப்படுவதற்கு ஏற்றவகையில் புரட்சியின் தருணத்தை லெனின் தேர்ந்தெடுத்தார். புரட்சியின் போது சிந்திய ரத்தத்தைவிடப் புரட்சியைக் காப்பதற்குதான் அதிகம் ரத்தம் சிந்தப்பட்டது. எதிர்புரட்சியே அதிகம் ரத்தத்தை  சிந்த வைத்தது.

புரட்சிகரச் சூழ்நிலை இல்லாத போது பலத்தைப் பிரயோகிப்பது முட்டாள் தனமானது என்றும் புரட்சிகரச் சூழல் இருக்கும் போது பலத்தைப் பயன்படுத்த தயங்குவது கோழை தனமானது என்றும் எங்கெல்ஸ் கூறுகிறார்.

"ஒரு சில சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் ஒருவன் சதிச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பானாகில் அவன் ஒரு கோழை என்றே கருதப்படுவான். அதே போல வேறுவிதமான சந்தர்ப்ப நிலைமைகளின் கீழ் அவ்வாறு செயல்பட்டான் என்றால் ஒரு முட்டாள் என்று கருதப்படுவான்."

அராஜகவாதிகளின் சதி திட்டத்திற்கும், மார்க்சிய வழிப்பட்ட புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் லெனின்:-
“புரட்சி எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டுமானால் அது சதியாலோசனை மீதோ மற்றும் ஒரு கட்சியினையோ நம்பிச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக முன்னேற்றமான வர்க்கத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனை.

புரட்சி எழுச்சி மக்களின் புரட்சிகரமான கிளர்ச்சியைச் சார்ந்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை.

புரட்சி எழுச்சி வளர்ந்து வரும் புரட்சியின் வரலாற்றின் திரும்பு முனையைச் சார்ந்திருக்க வேண்டும். அப்பொழுது மக்களின் முன்னேற்றமான அணிகளின் செயல்பாடு அதன் உச்சத்தில் இருக்கும், எதிரியின் அணிகளிலும் புரட்சியின் பலவீனமான அரை-மனது மற்றும் உறுதியற்ற நண்பர்களின் அணிகளிலும் ஊசலாட்டங்கள் ஆக வலுவாக இருக்க வேண்டும். இது மூன்றாவது நிபந்தனை.” (மார்க்சியமும் கிளர்ச்சியும்)

புரட்சியை மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் தோற்றுவிப்பதில்லை. அதற்கான புறச்சூழ்நிலையின் விளைவாகத்தான் நடத்துகின்றனர். இந்த அக-புற நிலைமைகளை மார்க்சியம் தெளிவாகவே முன்வைத்துள்ளது.

லெனின்:- “புரட்சிகரச் சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று, அதேபோது புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை எழச் செய்ய வேண்டுமென்பதும் இல்லை- மார்க்சியவாதிக்கு இது மறுக்க முடியாத ஒன்று. பொதுவாகப் பேசுமிடத்து, புரட்சிகரச் சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை? எந்தத் தவறும் இழைக்கவில்லை என்கிற நிச்சயத்துடன் நாம் பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளைக் குறிப்பிடலாம்.

1) ஆளும் வர்க்கங்கள் தமது ஆட்சியை எந்த மாற்றமும் இன்றித் தொடர்ந்து நடத்திச் செல்வது சாத்தியமற்றதாகுதல், “மேல் வர்க்கங்களிடையே” ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆளும் வர்க்கத்தினுடைய கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாய் வெடிப்பு உண்டாகி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு, பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள் விரும்பாதது” மட்டும் சாதாரணமாகப் போதாது, பழைய வழியில் வாழ “மேல் வர்க்கங்களுக்கு முடியாமல் போவதும்” அவசியமாகும்.

2) ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய துன்பதுயரமும் வறுமையும் வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் மேலும் கடுமையாகிவிடுதல்.

3) மேற்கண்ட காரணங்களின் விளைவாய் மக்கட் பெருந்திரளினரது செயற்பாடு கணிசமாய் அதிகரித்துவிடுதல், மக்கட் பெருந்திரளினர் “சமாதான காலத்தில்” தாம் சூறையாடப்படுவதற்கு முறையிடாமலே இடமளிப்பவர்களாயினும், கொந்தளிப்பான காலங்களில், வரலாறு படைக்க வல்ல சுயேச்சைச் செயலில் இறங்கும்படி நெருக்கடி நிலைமை யாவற்றாலும் மற்றும் “மேல் வர்க்கங்களாலுங்கூட” இழுத்து விடப்படுகிறார்கள்.

தனிப்பட்ட குழுக்கள், கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல், பொதுவாகப் புரட்சி சாத்தியமன்று. இந்த எதார்த்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டுமொத்தமே புரட்சிகரச் சூழ்நிலை எனப்படுவது.” (இரண்டாவது அகிலத்தின் தகர்வு)

முதலாளித்துவச் சமூகத்திலிருந்து கம்யூனிச சமூகத்தை எட்டுவதற்கு இடையே ஒர் இடைக்கட்டம் தேவை என்பதை மார்க்ஸ் உணர்ந்தார். அதனைக் கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம் எழுதிய போது முதன்முறையாக வெளிப்படுத்தினார். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிவிக்கிறார்.

"முதலாளித்துவச் சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகர மாற்றம் அடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணயாக அரசியல் இடைக்காலக் கட்டம் ஒன்றும் இருக்கிறது, இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது"

கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான இந்த இடைக்காலக் கட்டமான முதல்கட்டத்தைச் சோஷலிச சமூகம் என்றும் அடுத்தக் கட்டத்தைக் கம்யூனிச சமூகம் என்றும் அழைக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் உள்ள சர்வாதிகாரத்தை எப்படி நேர்பொருளில் எடுத்துக் கொண்டு, அதனை அறநெறியில் விமர்சிப்பது தவறானதோ. அதே போல முதலாளித்துவச் சமூகத்தில் கூறப்படும் ஜனநாயகம் என்பதை அதன் நேர் பொருளில், அனைவருக்குமான ஜனநாயகமாய் புரிந்து கொள்வது தவறானதாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

“முதலாளித்துவச் சமூகத்தில், மிகவும் சாதகமான நிலைமைகளில் அது வளர்வதாய்க் கொள்வோமாயின், ஜனநாயகக் குடியரசில் ஓரளவு முழுமையான ஜனநாயகம் இருக்கக் காண்கிறோம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவச் சுரண்டலால் எழுப்பப்படும் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இது நடைமுறையில் எப்பொழுதும் சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான், சொத்துடைத்த வர்க்கங்களுக்கு மட்டுமேயான, செல்வந்தர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகமாகத்தான் இருக்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தில் சுதந்திரமானது பண்டைக் கிரேக்க குடியரசுகளில் இருந்ததே, எறத்தாழ அதேபோல அடிமையுடைமையாளர்களுக்கான சுதந்திரமாகத்தான் எப்பொழுதுமே இருந்து வருகிறது. முதலாளித்துவச் சுரண்டலின் நிலைமைகள் காரணமாய்த் தற்காலக் கூலி அடிமைகள் பட்டினியாலும் வறுமையினாலும் நசுக்கப்பட்டு “ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி”, “அரசியல் குறித்துத் தொல்லைபட முடியாதபடி” அவல நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-116)

மேலும் லெனின் கூறுகிறார்:-      
“மிகச் சொற்பமான சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயம் (இதுதான் முதலாளித்துவச் சமூத்தில் நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின், வாக்குரிமையின் “அற்ப”- அற்பமானவை என்று சொல்லப்படுகிற) விவரங்களிலும், பிரதிநிதித்துவ உறுப்புகளின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும், நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும் ஜனநாயகத்துக்குக் கட்டுக்குமேல் கட்டுப்போடப்பட்டிருப்பதைத் தான் காண்கிறோம். ஏழைகளுக்கு இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும் தடங்கல்களும் அற்பசொற்பமாகவே தோன்றும்,

முக்கியமாய் இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுமக்கள் வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் இப்படித்தான் அற்பசொற்பமாகவே தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகள் அரசியலில் இருந்து, ஜனநாயகத்தில் நேரடியாய் பங்கு கொள்வதில் இருந்து ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் இந்தச் சாரத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் நமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-117-118)

லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தில், ஜனநாயகம் பெருவாரியான மக்களுக்கு விரிவாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மக்களின் மீதான சர்வாதிகாரம் கிடையாது. மக்கள் அரசின் மீது எதிர்ப்பை செலுத்துகிற எதிராளிகளின் மீதான சர்வாதிகாரம்:-
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒருங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தைப் பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன், பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது. முதன்முதலாய் ஏழைகளுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின் சுதந்திரத்துக்குப் பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது.

மனிதகுலத்தைக் கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவைகளை நாம் அடக்கியாக வேண்டும். இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும்வரை, பலாத்காரம் இருக்கும்வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.

பெபெலுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றிச் சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல, சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும் அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது” என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். .
       .......
கம்யூனிச சமூகத்தில்தான் – முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள் இல்லாமற் போய்விடும் (அதாவது, சமூகத்தின் உறுப்பினர்களிடையே சமூக உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற் போய்விடும்) அப்பொழுது மட்டும் தான் “அரசு… இல்லாமற் முடிவு ஏற்படுகிறது”, “சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகிறது.”

அப்பொழுதுதான் மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம், விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக் கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம் உலர்ந்து உதிரத் தொடங்கும். “முதலாளித்துவ அடிமை வாழ்வில் இருந்தும் முதலாளித்துவச் சுரண்டலின் சகிக்கமுடியாத கொடுமைகளில் இருந்தும் மிருகத்தனத்தில் இருந்தும் அபத்தங்களில் இருந்தும் இழுக்குகளில் இருந்தும் விடுபட்டு மக்கள் பலநூறு ஆண்டுகளாய் அறியப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்துள்ள சமூக ஒட்டுறவின் சர்வசாதாரண விதிகளைப் பற்றியொழுகச் சிறிதுசிறிதாய் பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே, பலவந்தம் இல்லாமலே. கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை இயந்திரம் இல்லாமலே அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொள்வார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)

கம்யூனிச சமூகத்தில் இருப்பவர்கள் இன்றைய முதலாளித்துவச் சமூக மக்களின் மனோநிலையில் இருப்பதில் இருந்து விடுபட்டவர்களாவர். அதனால் அரசு உலர்ந்து உதிர்ந்த பின்பு அங்கே அராஜகம் எழுவதில்லை, அதற்கான சூழல் அந்தச் சமூகத்தில் காணப்போவதும் இல்லை.

அம்பேத்கர் அறநெறி சக்தி தோல்வியடையும் போது அதன் இடத்தில் விலங்கு சக்தி எடுத்துக்கொள்ளும் என்கிறார். மேலும் வர்க்க முரண்பாட்டை நீக்குவதற்கு எண்வழிப்பாதையே (அஷ்டாங்க மார்க்கம்) அதாவது நற்கருத்து, நற்நோக்கம், நற்பேச்சு, நற்நடத்தை, நற்வாழ்கைவழி, நற்முயற்சி, நற்மனவுணர்வு போன்றவையே போதுமானதாகக் கருதுகிறார். நல்லவைகளும் தீயவைகளும் மனிதனிடத்தில் எவ்வாறு தோற்றம் கொள்கின்றன என்ற புரிதல் இல்லாது நற்சிந்தனையே முரண்பாட்டை ஒழிப்பதற்குப் போதுமானதாக் கருதுகிறார்.

மனிதர்கள் தமது செயற்பாட்டைக் குறிக்கோளாக அமைத்துக் கொண்டுதான் செயற்படுகின்றனர். இந்தக் குறிக்கோள் எவ்வாறு அமைத்துக் கொள்கின்றனர் என்பது பற்றிக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் வேறுபட்ட வழியில் முடிவெடுக்கின்றது. நல்ல நோக்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறதாகக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. பொருள்முதல்வாதமோ மனிதர்கள் தமது குறிக்கோளை சமூக வாழ்நிலையில் இருந்து தோற்றம் பெறுவதாகக் கூறுகிறது. அவரவர் சார்ந்து இருக்கிற வர்க்க நலன்களில் இருந்து இவை தோன்றுவதாகப் பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதாவது சிந்தனையின் தோற்றத்தை பொருள்முதல்வாதம் ஆராய்கிறது. இந்தப் பொருள்முதல்வாதப் பார்வை அம்பேத்கரின் பார்வையோடு அடிப்படையிலேயே வேறுபடுகிறது.

காட்மண்டில், உலகப் பவுத்த கவுன்சில் மாநாட்டின் போது 1956 ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அம்பேத்கர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இது அவரது இறுதிகாலத்தில் ஆற்றிய உரையாகும். “புத்தரா, காரல் மார்க்சா?” என்ற நூலில் என்ன கூறினாரோ அதனையே இவ்வுரையில் வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சைப் பற்றிய அவரது நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

“புத்த மதத்தில் அகிம்சை” என்ற தலைப்பில் பேசுவதற்கே அங்கு திட்டமிடப்பட்டிருந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் பெரும்பாலோர் “புத்தரா அல்லது காரல் மார்க்சா” என்ற தலைப்பில் பேசும்படி விருப்பம் தெரிவத்திருந்ததால் அம்பேத்கர் இந்தத் தலைப்பில் பேச வேண்டியதாகிவிட்டது.

அந்தப் புத்த மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையின் நோக்கம், அன்றைய சோஷலிச முகாம், உலகின் பாதியை பிடித்துள்ள நிலையில், பவுத்த நாடுகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் கம்யூனிசப் பிடியில் சிக்கியுள்ளதை கவலையோடு நோக்கி, கம்யூனிச வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையைப் பவுத்தம் வழங்குகிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.

“பவுத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான் அது நிலைத்து நிற்க முடியும் என்று பவுத்தம் நம்பிக்கை கொள்ள முடியும். இன்று ஐரோப்பாவின் பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம் வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பவுத்த சங்கத்தின் பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனைப் பிக்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். காரல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும, அப்போது பவுத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.”

ஆகப் பவுத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்துவற்கு ஆற்றப்பட்டதே இந்தச் சொற்பொழிவு. அரசு உலர்ந்து உதிரும் என்பது எப்போது நடைபெறும் என்று கேட்டால் கம்யூனிஸ்டுகளிடம் பதில் இல்லை என்று கூறியவர் அம்பேத்கர், ஆனால் புத்தத்திலும் அதே நிலையிருப்பதை இவ்வுரையில் கூறியுள்ளார்.

“பவுத்த பாதை தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்துச் செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச் செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள் அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக் கொள்ளத் துணைநிற்கும். எனவே, அவசரப்பட்டுக் குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும் பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என் கருத்து. வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதும் அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.”

மார்க்ஸ் கூறுகிற “மதம் மக்களுக்கு அபின்” என்பது மறுவுலகைப் பற்றிப் பேசுகிற கிறித்துவத்துக்குப் பொருந்தும், புத்தத்திற்குப் பொருந்தாது என்று கூறியவர், இந்த உரையில் சர்வம் அநித்யம் என்பது புத்தர் போதனையாகக் கூறுகிறார். யதார்த்த உலகை அநித்தியம் என்று கூறிவிட்டு நித்தியத்தைத் தேடுவது ஆன்மீகமே.

கம்யூனிச் சித்தாந்தத்தை அம்பேத்கர் புரிந்த வகையில் இவ்வுரையில் தொகுக்கிறார். ஏழைகள் செல்வந்தர்களால் சுரண்டப்படுகின்றனர், செல்வந்தர்களிடம் சொத்து இருப்பதே இதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளை அடிமைப்படுத்துகின்றனர், துன்ப துயரத்திலும் துக்கத்திலும் வறுமையிலும் ஆழ்த்துகிறது. இதுதான் மார்க்சின் அடிப்படைக் கோட்பாடாக வைக்கிறார். இதற்கு மார்க்ஸ் கூறும் மருந்தாக அம்பேத்கர் கூறுகிறார், தனியார் சொத்துரிமையை ஒழித்துக்கட்டுவது ஒன்றுதான் வழி. அடுத்து, பாட்டாளி வார்க்க சர்வாதிகரத்தைப் பற்றிப் பேசுகிறார்.

“காரல் மார்க்சின் மொழியில் கூறுவதனால் தொழிலாளர்கள் தான் உபரி மதிப்பை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்யும் உபரி மதிப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது உடைமை உரிமையாளனால் அபகரித்துக் கொள்ளப்படுகிறது. உழைக்கும் மனிதனின் முயற்சியால் உற்பத்தி செய்யப்படும் உபரி மதிப்பை உடைமையாளனால் ஏன் அபகரித்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்வியைக் காரல் மார்க்ஸ் கேட்டார். இதற்கு ஒரே உடைமையாளன் அரசாங்கம்தான் என்பதே அவரது பதில். இதனாலேயே பாட்டாளி வாக்க சர்வாதிகாரம் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை அவர் வலியுறுத்தினார். … அரசாங்கம் சுரண்டப்பட்ட வர்க்கங்களாலன்றிச் சுரண்டும் வர்க்கங்களால் நிர்வகிக்கப்படக் கூடாது. அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவ வேண்டும். இவைதான் காரல் மார்க்சின் அடிப்படையான கருத்துகள்.”

இந்தக் கருத்துக்கள் மார்க்சின் விஞ்ஞான வழியில் விவரிக்கப்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டினாலும், முதலாளித்துவ வளர்ச்சியில் சமூக உற்பத்தியாக்கப்பட்ட முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வாக, உழைக்கும் மக்களின் புரட்சி ஏற்படுகிறது, அந்தப் புரட்சியால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் மார்க்சின் மன விருப்பமோ, ஏழை உழைப்பாளர்களின் ஏக்க வெளிப்பாடோ கிடையாது. சமூக வளர்ச்சியின் விளைவே ஆகும். இதனைப் புரிந்து கொள்வதற்கு, மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், மார்க்சிய வழியில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியையும் புரிந்து கொள்ள வேண்டும். புரட்சி ஏற்படுவதற்கான காரணத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விளக்குகிறது. புரட்சிக்கு பின்பான அரசு ஏன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக அமைய வேண்டும் என்பதற்கும் காரணமும் காட்டப்படுகிறது. இந்தச் சர்வாதிகாரத்தைத் தனிநபர் சர்வாதிகாரமாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதை மேலே தெளிவாக்கப்பட்டுள்ளது.

இந்த விஞ்ஞான வழிப்பட்ட பார்வை அம்பேத்கர்கரிடம் வெளிப்படாததற்குக் காரணம், மார்க்சியத்தை அதன் எதிராளியிடம் இருந்து படித்ததேயாகும். இதனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தாம் ஒப்பிடுவதற்காகப் பவுத்தத்தையும் மார்க்சியத்தையும் நன்றாகப் படித்தாகக் கூறுகிறார். பவுத்தம் பிடகத்தின் வழியாகப் படித்ததைக் குறிப்பிடுகிறார், அதே போல மார்க்சியத்தை எங்கே எந்த நூலில் படித்தார் என்பதைக் கூறவில்லை. மார்க்சியத்தை அதன் எதிராளிகள் எழுதிய விமர்சன நூல்களில் இருந்து கற்றிருக்கிறார், அதனாலேயே அதன் விஞ்ஞானத் தன்மையை அம்பேத்கர் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது போய்விட்டது. அதனால் தான் சோஷலிசப் புரட்சி தவிர்க்க முடியாதது என்றால் மக்கள் ஏன் ரத்தம் சிந்தி புரட்சியை நிகழ்த்தினர் என்று கேட்கிறார்.

“மார்க்சின் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து அது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாக, காரல் மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தக் கட்டமைப்பின் பல பகுதிகள் நொறுங்கிப் போய்விட்டன.”

இந்த அம்பேத்கரின் கூற்றின்படி அவர் மார்க்சிய விமர்சனங்களையே படித்துள்ளார் என்று தெரிகிறது. மார்க்சை நேரடியாகப் படித்திருந்தால் அதன் விஞ்ஞானத் தன்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். கடைசிவரை புத்தத்தின் அன்பு, நீதி, நல்லெண்ணம் போன்ற கருத்துநிலையிலேயே நிலைபெற்றுள்ளார். அதே போல் ஜனநாயகம் என்பதை முற்றமுழுமையான ஜனநாயகமாகவே கருதியுள்ளார். அதனால் புத்தரை ஒரு மாபெரும் ஜனநாயகவாதி என்று கூறிவிட்டுப் பாட்டாளி வார்க்க சர்வாதிகரத்தை தனிநபர் சர்வாதிகாரமாகப் புரிந்து கொண்டுள்ளார்.

சோஷச அரசில் ஜனநாயகம் விரிவாக்கப்பட்டு, கம்யூனிச அரசில் அடக்கியாள வேண்டியவர் எவரும் இல்லையாத நிலையில் ஜனநாயகம் முழுநிறைவடைந்து, ஜனநாயகம் தேவையற்றதாகிவிடும். இதனைப் புரிந்து கொள்வதற்குக் கண்டிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் முதலாளித்துவப் பொருளாதார உள்முரண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும். இவையிரண்டையும் இணைத்து லெனின் கூறியதை பார்ப்போம்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.” (பிடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)

சோஷலிசம் தவிர்க்க முடியாத விளைவு என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் கூறியதின் பொருள் இதுவே. இதில் மனிதனது செயற்பாடு இல்லாமல் புரட்சி நடைபெறும் என்று கூறவில்லை. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, வர்க்கப் போராட்டத்தின் மூலமே முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிந்து சோஷலிசத்தை அமைக்கும் என்றே கூறியுள்ளனர். பொருளாதாயத நிலைமை தானாகவே செயற்படும் என்று கூறுவது நிர்ணயவாதமாகும், அது மார்க்சியமாகாது. எங்கெல்ஸ் இந்த நிர்ணயவாதத்தை எதிர்த்து தமது இறுதிகாலத்தில் போராடினார்.

“….சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை." என்று எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய (லண்டன், ஜனவரி 25, 1894) கடிதத்தில்  கூறியுள்ளார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் லெனின் மேலும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாயத காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்தி சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.” (பிரடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)

இவைகளே விஞ்ஞான வகைப்பட்ட மார்க்சியம். இந்த விஞ்ஞானத் தன்மையை நீக்கிவிட்டு மற்றதைப் பார்த்தால் மார்க்சியம் ஒரு சதியினைப் புரிந்திடும் அராஜகவாதமாகத் தான் தென்படும். மார்க்சியம் அராஜகவாதத்துக்கு எதிரானது.

கம்யூனிச தத்துவத்தின் நோக்கம், பன்றிகளைப் போல் மனிதர்களை உண்டு கொழுக்க வைப்பதே என்று தம்நூலின் இறுதியில் அம்பேத்கர் கூறுகிறார். பொருளாயதம் என்பதைச் சாப்பாட்டாக அம்பேத்கர் பார்ப்பதால் தான் விஞ்ஞானக் கம்யூனிசத்தை வெறும் உணவுப் பிரச்சினையாகப் பார்க்கிறார். அதனால் தான் மனிதன் ஆன்மிக வளர்ச்சியையும் பெற வேண்டும் என்று சேர்த்துச் சொல்கிறார். ஆனால் மார்க்சியம் ஆன்மிகத்தை ஒடுக்கும் கருவியாகத்தான் பார்க்கிறது.

மார்க்சியத்திற்கு எதிரான இந்த, “உண்டு கொழுக்கும்” விமர்சனத்தை ஸ்டாலின் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்.

“உண்பதுதான் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கிறது என்று எங்கே, எப்போது, எவ்வுலகில், எந்த மார்க்ஸ் கூறினார்? சொல்லுங்கள் கனவான்களே, சொல்லுங்கள்! நீங்கள் சொல்வதை நிரூபிப்பதற்கு, மார்க்சின் நூல்களில் இருந்து, ஒரு சொற்றொடரை, ஒரே ஒரு சொல்லை நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறீர்களா? பொருளாதார நிலைமைகள்தான் மனிதர்களின் உணர்வை, அவர்களின் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் கூறியது உண்மைதான். ஆனால், உண்பதும் பொருளாதாரச் சூழ்நிலைமைகளும் ஒன்றே என்று யார் சொன்னார்கள்?” (அராஜகவாதமா? சோஷலிசமா? -பக்கம் 44)

பிரெஞ்சுப் புரட்சியின் சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் இந்த முழக்கத்தை வரவேற்கும் அம்பேத்கர், ருஷ்யப் புரட்சி சமத்துவத்தை ஏற்படுத்தியது என்பதற்காகச் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்ய முடியாது என்கிறார். பாட்டாளி வார்க்க சர்வாதிகாரத்தில் காணப்படும் ஜனநாயக விரிவாக்கத்தை அம்பேத்கர் சிறிதும் புரிந்து கொள்ளவில்லை. இந்த ஜனநாயகமே உழைக்கும் மக்களின் சகோதரத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இச்சிறு கட்டுரையில், அம்பேத்கரின் மதம் மற்றும் மார்க்சியம் பற்றிய கண்ணோட்டமே ஆராயப்பட்டுள்ளது. அவர் எந்தச் சீர்திருத்தங்களுக்காகப் போராடினாரோ, அந்தச் சீர்த்திருத்தங்களுக்கா, தங்களது வழிகளில் கம்யூனிஸ்டுகளும் போராடுகின்றனர். அதே போல், இந்தியாவில் காணப்படும் சாதி முதற்கொண்டான முரணை போக்குவதற்குப் புத்தரின் எண்வழிப்பாதையின் (அஷ்டாங்க மார்க்கம்) எல்லையைப் புரிந்து கொண்டு பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகி முரணைக் களையவே கம்யூனிஸ்டுகள் முனைகிறார்கள்.

புத்தத்தோடு மார்க்சியத்தை அம்பேத்கர் ஒப்பிடுவது கம்யூனிச சமூகத்தை அடைவதற்கான வழிமுறை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவதற்காகவே ஆகும். பவுத்தம் தமது இறுதியில் அடையும் நிப்பாணத்தைக் கம்யூனிச சமுகமாகக் கருதவில்லை என்பது வேறு விசயம். இருந்தாலும் அம்பேத்கர் தமது பவுத்தத்தின் மூலம் கம்யூனிச சமூகத்தை அடைவது பற்றியே பேசுகிறார்.

இந்நூலின் தொடக்கத்திலேயே அம்பேத்கர் கூறியுள்ளார்:-
“மார்க்சிஸ்டுகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் புத்தரைப் படித்தறிந்து அவர் எந்தக் கொள்கைகளைப் பற்றி நின்றார் என்பதைப் புரிந்து கொள்வார்களேயானால் அவர்களின் கருத்தோட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நான் உணர்கிறேன்.”

       சமூகத்தில் தோன்றிய இன்றைய பிரச்சினை வரைக்கான தீர்வாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த புத்தரின் சிந்தனைகள் அமையுமா? அல்லது பழைய முற்போக்கு சிந்தனைகளின் தொடர்ச்சியாகக் காணப்படும், நவீன விஞ்ஞானத்தை உள்ளடக்கிய இயக்கவியல் (வரலாற்றியல்) பொருள்முதல்வாதத்தைத் தத்துவமாகக் கொண்ட மார்க்சியம் இதனைத் தீர்க்குமா? என்பதை விருப்பு வெறுப்பற்ற முறையில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

விஞ்ஞானக் கம்யூனிசத்தின வழிகாட்டுதலின்படி, கம்யூனிச சமூகத்தை அடைவதற்கு, புத்தரின் அன்பு, நீதி, நல்லெண்ணம் ஆகியவற்றின் பற்றாக்குறையை உணர்ந்தவர்கள் கம்யூனிசப் பாதையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

சாதியற்ற, வர்க்கமற்ற சமூகத்திற்காகப் போராடுவோம்.